அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது

2 mins read
d4441ff9-e57a-4634-aedc-4ebfcbb67670
ஜோதிகா -

நடி­கர் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா ஆகிய மூவ­ருக்­கும் 2020ஆம் ஆண்­டுக்­கான 'தாதா சாகேப் பால்கே' தென்­னிந்­திய சினிமா விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழில் சிறந்த பட­மாக 'டூலெட்' தேர்­வாகி உள்­ளது.

தமிழ், மலை­யா­ளம், தெலுங்கு, கன்­ன­டத் திரை­யு­ல­கங்­க­ளைச் சேர்ந்த கலை­ஞர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் தாதா சாகேப் பால்கே விரு­து­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

திறமை வாய்ந்த கலை­ஞர்­க­ளுக்­கும் சிறந்த படைப்­பு­க­ளுக்­கும் வழங்­கப்­படும் இந்த விரு­து­க­ளைப் பெறு­வது பெரும் கௌர­வ­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் 2020ஆம் ஆண்­டுக்­கான விரு­து­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

தமிழ் சினிமா பிரி­வில் சிறந்த படத்­துக்­கான விருதை 'டூலெட்' பெற்­றுள்­ளது. 'அசு­ரன்' படத்­தில் சிறப்­பாக நடித்­த­தற்­காக தனு­சுக்கு சிறந்த நடி­கர் விருது கிடைத்­துள்­ளது.

பன்­மு­கத்­தன்மை வாய்ந்த நடிப்­பாற்­ற­லுக்­காக அஜித்­கு­மா­ருக்கு சிறப்பு விருதை வழங்­கி­யுள்­ள­னர்.

'ராட்­சசி' படத்­தில் இயல்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­தற்­காக ஜோதிகா சிறந்த நடி­கை­யா­கத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார். 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் ஆர். பார்த்­தி­ப­னுக்கு சிறந்த இயக்­கு­ந­ருக்­கான விரு­தைப் பெற்­றுத் தந்­துள்­ளது. சிறந்த இசை­ய­மைப்­பா­ள­ராக அனி­ருத் தேர்­வாகி உள்­ளார்.

இதே­போல் பன்­மு­கத்­தன்மை வாய்ந்த நடி­கர் விருது மலை­யா­ளத்­தில் மோகன்­லா­லுக்­கும், தெலுங்­கில் நாகார்­ஜு­னா­வுக்­கும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மலை­யா­ளத்­தில் சிறந்த நடி­கை­யாக பார்­வ­தி­யும், தெலுங்­கில் ராஷ்­மிகா மந்­த­னா­வும் கன்­ன­டத்­தில் தான்யா ஹோப்­பும் தேர்­வாகி உள்­ள­னர்.

மலை­யா­ளத்­தில் சிறந்த நடி­க­ராக சுராஜ், தெலுங்­கில் நவீன் பாலி ஷெட்டி, கன்­ன­டத்­தில் ராஷித் ஷெட்டி ஆகிய மூவ­ரும் விரு­துக் குழு­வால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர். மலை­யா­ளத்­தில் தீபக் தேவ் சிறந்த இசை­ய­மைப்­பா­ளர் விரு­தைப் பெற்­றுள்­ளார். தெலுங்­குத் திரை­யு­ல­கின் சிறந்த இசை­ய­மைப்­பா­ளர் விருது எஸ். தாம­னுக்­குக் கிடைத்­துள்­ளது.

விருது வென்றவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களும் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாக உள்ளது. ஜோதிகாவுக்கு சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.