சாந்தனு, கீர்த்தியின் காதல் அனுபவங்கள்

சாந்தனு, கீர்த்தியின் காதல் அனுபவங்கள்

2 mins read
4a1c60ab-18db-4e27-a791-fe2d4e480d09
மனைவி கீர்த்தியுடன் சாந்தனு. -

காதல் என்­பது ஓர் அனு­ப­வம்­தான். அந்த அனு­ப­வம் நமக்­குப் புரிய வேண்­டு­மென்­றால், அனு­ப­வித்­துத்­தான் பார்க்க வேண்­டும். அத­னால் மனம் துள்­ளுமா, சிறகு விரிக்­குமா, கவிதை பேசுமா, கனவு பெரு­குமா என அனு­ப­வித்­துப் பார்த்­தாலே புரி­யும்," என்று காத­லு­டன் பேசு­கி­றார் நடி­கர் சாந்­தனு.

காதல் என்­பது பேசு­கிற விஷ­ய­மில்லை. அது உண­ரக் கூடி­யது என்­றும் நம்மை கன­வு­ல­கில் நிறுத்தி அழகு பார்க்­கும் என்­றும் தத்­து­வார்த்­த­மா­க­வும் பேசு­கி­றார்.

தமிழ் சினிமா ரசி­கர்­கள் அதி­கம் கவ­னிக்­கும் நட்­சத்­திர காதல் ஜோடி­களில் சாந்­தனு, கீர்த்­தனா ஜோடிக்­கும் நிச்­ச­யம் இட­முண்டு. இனி சாந்­தனு தனது காதல், திரு­ம­ணம், குடும்ப வாழ்க்கை குறித்து சொல்­வ­தைக் கேட்­போம்.

"நான் நடிக்க வந்த புதி­தில் சினிமா துறை­யில் கண்­டிப்­பாக நட­ன­மும் சண்­டைப் பயிற்­சி­யும் தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்­பார்­கள். சண்­டைப் பயிற்­சிக்கு பவர் பாண்­டி­யன் சாரும் நட­னத்­திற்கு ஜெயந்தி மேட­மும்­தான் இருந்­தார்­கள்.

"விக்­ரம், ஆர்யா, சூர்யா, விஷால், குஷ்பு அக்கா என அத்­தனை பேரும் இவர்­க­ளி­டம்­தான் பயிற்சி பெற்­ற­னர். ஒரு சினி­மா­வில் நடித்து விட்டு நட­னமே உயி­ராக இருந்த ஜெயந்தி மேடத்­தின் மகள்­தான் என் மனைவி கீர்த்தி.

"பள்­ளி­யில் தொடங்­கி­யது எங்­கள் நட்பு. எங்கே போனா­லும் கீர்த்தி தட்­டுப்­பட்­டுக் கொண்­டு­தான் இருந்­தாள். பார்த்த நிமி­டத்­தி­லேயே பழைய நட்பை அப்­ப­டியே பற்­றிக் கொள்­கிற தினு­சு­தான் எங்­கள் அன்பு. அப்­ப­டியே நகர்ந்­து­போய் கல்­லூ­ரி­யில் இரண்­டாம் ஆண்டு படிக்­கும்­போது மறு­ப­டி­யும் பேசி­னோம். அடுத்து அர்த்­தம் புரி­யாத ஒரு சண்­டை­யால் இரு­வ­ருக்­கும் இடையே பிரிவு ஏற்­பட்­டது," என்­கி­றார் சாந்­தனு.

பிறகு கீர்த்தி 'மானாட மயி­லாட' நிகழ்ச்­சியை தொகுத்து வழங்க, இவர் சினி­மா­வில் கவ­னம் செலுத்தி உள்­ளார். இந்­நி­லை­யில் அதே நிகழ்ச்­சி­யில் சாந்­தனு பங்­கேற்க, அவ­ரு­டன் இணைந்து நட­ன­மாடி உள்­ளார்.

முத­லில் நட­ன­மாட மறுத்து, பிற­கு­தான் ஒப்­புக் கொண்­டா­ராம் கீர்த்தி. அப்­போ­து­தான் இரு­வ­ரும் காதல் வயப்­பட்­டுள்­ள­னர்.

"உற­வி­னர்­கள், நண்­பர்­கள் என எல்­லோ­ரும் இணையை மிக­வும் விரும்­பி­னார்­கள். மறு­ப­டி­யும் மன­தில் காதல் மேலோங்­கி­யது. அது பின்­னர் திரு­ம­ணத்­தில் முடிந்­தது," என்­கி­றார் சாந்­தனு.

திரையுலகத்துடன் தொடர்பு உள்ளவரை காதலிக்கவோ மணக்கவோ கூடாது என்று முடிவு எடுத்திருந்தாராம் கீர்த்தி.

ஆனால் சாந்தனுவின் அன்பு தன் மனதை மாற்றியது என்கிறார்.

"பள்ளி நாட்களில் இருந்தே அவர் என் மீது அன்பு செலுத்தி வருகிறார். அவரைப் பிரிந்து வாழ முடியாது என்பதை உணர்ந்ததும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டேன். இந்த முடிவை நான் எடுத்த தருணத்தை மறக்க இயலாது," என்கிறார் கீர்த்தி.

"காதலின் அருகாமை, நேசம், நினைவுகள் எல்லாமே கல்லெறிந்த குளம் மாதிரி அப்படியே மனதில் உறைந்திருக்கிறது. இதை சாத்தியமாக்கியது என் மனைவி கீர்த்தி," என்று பூரிப்புடன் குறிப்பிடுகிறார் சாந்தனு.