'திறமை மட்டும் போதாது'

'திறமை மட்டும் போதாது'

2 mins read
c6acc0ac-b1a3-4057-9a52-4ab5b5dce0fd
-

தமிழ், தெலுங்­கில் முன்­னணி நடி­கை­யாக இருக்­கும் சமந்தா, திரைப்­ப­டத்­தில் வளர்ச்சி அடைய திறமை மட்­டும் போதாது என்று தெரி­வித்­துள்­ளார்.

நடிகை சமந்தா 'ஓடிடி' தளத்­தில் புதிய நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்கி வரு­

கி­றார். அதில் தனது திரைப்­

ப­ட வாழ்க்கை குறித்து அவர் பேசி­ய­போது, "திரைப்­

ப­டத்­தில் பிர­ப­ல­மாக ஒரு பூச­ணிக்­காய் அள­வுக்கு திறமை இருந்­தா­லும் போதாது.

கடு­க­ளவு அதிர்ஷ்­ட­மும் வேண்­டும் என்று சொல்­வார்­கள். எனக்கு இரண்­டுமே பூச­ணிக்­காய் அள­வுக்கு இருந்­தது. திரைப்­ப­டத் துறை­யில் அடி­யெ­டுத்து வைத்த கொஞ்ச நாட்­க­ளி­லேயே

அற்­பு­த­மான கதை­கள், கதா­பாத்­தி­ரங்­கள் கிடைத்­தன.

"என்னைவிட திற­மை­யா­ன­வர்­கள், அழ­கா­ன­வர்­கள் நிறைய பேர் இருந்­தா­லும் வாய்ப்­பு­கள் என்­னைத் தேடி வந்­தன. அதற்கு கார­ணம் அதிர்ஷ்­டம். திரு­ம­ணத்­துக்குப் பிற­கும் நல்ல படங்­களில் நடித்­துக்­கொண்டு இருப்­ப­தற்கு கார­ணம் நிச்­ச­யம் அதிர்ஷ்­டம்­தான். அதிர்ஷ்­டத்தை அதி­கம் நம்­பு­கி­றேன்.

"கதா­நா­ய­கி­கள் திற­மைக்குத் திரு­ம­ணம் ஒரு தடை இல்லை. திரு­ம­ணத்­திற்­குப் பிறகு வாய்ப்­பு­கள் வராது என்று நம்பி அதற்­கும் தயா­ராகிக் கொண்­டு­தான் திரு­ம­ணம் செய்­து­கொண்­டேன். ஆனால் அதிர்ஷ்­டம் எனது பக்­கம் இருப்­ப­தால் திரு­ம­ணத்­துக்குப் பிற­கும் நல்ல படங்­கள் எனக்கு அமை­கின்­றன," என்­றார்.

கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் மாலத் தீவில் அதிகமாக கொரோனா பாதிப்பு இல்லை என்ற எண்­ணத்­தில் பல நடி­கை­கள் மாலத் தீவிற்குச் சென்று வரு­கின்­ற­னர். அவர்­களில் சமந்­தா­வும் ஒரு­வர். அங்கு அவர் எடுத்துக்கொண்ட படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.