'புத்தாண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்'

'புத்தாண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்'

1 mins read
5212f08d-2271-4bdb-a307-80c8e891f779
மாளவிகா மோகனன் 1993ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன், பீனா மோகனன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கேரளா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் இவரது குடும்பத்துடன் மும்பையில் கல்வி பயின்று அங்கே வளர்ந்தவர். -

ரஜினியின் 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். தற்பொழுது விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் வெளியாகாத நிலையில் இந்தித் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் மாளவிகா மோகனன்.

விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர், ரவிதேஜா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்பொழுது இணையத் தொடரில் விஜய் சேதுபதியுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இவர் அண்மையில் தனுஷின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு "வரும் ஆண்டு உங்களுக்குச் சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் இணைந்து நடிக்கக் காத்திருக் கிறேன்," என்று பதிவிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'ஜகமே தந்திரம்', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களை முடித்த கையோடு 'ஹாலிவுட்', 'பாலிவுட்' திரைப் படங்களில் நடித்து வரும் தனுஷ் இளம் இயக்குநர் கார்த்தி நரேனுடன் இணைந்து தனது 43வது திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் தனக்கு ஜோடியாக மாளவிகா மோகனனை நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

சென்ற ஆண்டு இரண்டு படங்களில் மட்டும் நடித்திருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் 'மாஸ்டர்' படம் வெளியானால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அதனால் "இந்த புத்தாண்டு எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும்," என்று பதிவிட்டதோடு தன்னுடைய கவர்ச்சியான படங்களை 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் மாளவிகா மோகனன்.