கே.எல். கண்ணன் இய்கத்தில், செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் படம் 'ஆற்றல்'.
இதில் அவருடன் படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் வகையில் ஒரு கார் முக்கிய கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு சக மனிதன் போல உதவ முடியும், தொழில்நுட்பத்தை வைத்து எப்படி எல்லாம் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை காட்சிப்படுத்தி உள்ளனராம்.
"கார் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைவரும் ரசிக்கும் விதத்தில் படமாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் கே.எல். கண்ணன்.
கதாநாயகியாக ஸ்ரிதாவும் வில்லனாக வம்சி கிருஷ்ணாவும் சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.