நடிகை 'கயல்' ஆனந்தி திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
'கயல்' படத்தில் அறிமுகமான இவர், 'பின்னர் டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்', 'ஏஞ்சல்', 'அலாவுதீனின் அற்புத கேமரா', 'ராவணக் கூட்டம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் அவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ், இயக்குநர் நவீன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆனந்தி தமிழில் கடைசியாக நடித்த படம் 'பரியேறும் பெருமாள்', விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது நடிப்பில் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' அடுத்து வெளியாக உள்ளது.
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் இது காதல் திருமணம் தானாம். ஆனந்தியின் கணவர் சாக்ரடீஸ் மூடர் கூடம் பட இயக்குனர் நவீனின் மைத்துனர்.
நவீன் இயக்கியுள்ள 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தில் சாக்ரடீஸ் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஆனந்தி தான் நாயகி. அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாம்.
பின்னர் இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து தற்போது அது திருமணத்தில் முடிந்துள்ளது. சாக்ரடீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கவும் உள்ளாராம்.


