சுடச் சுடச் செய்திகள்

‘நல்ல கதாபாத்திரங்களே இலக்கு’

நாய­கி­யாக இருந்­த­போ­தும் சரி, திரு­மணத்­துக்­குப் பிறகு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும்­போ­தும் சரி, சிம்­ரன் திரை­யில் தோன்­றி­னால் தனி வர­வேற்­பு­தான்.

‘பேட்ட’யில் ரஜி­னி­யு­டன் நடித்­த­வர் அடுத்து ‘பாவக்­க­தை­கள்’, மாத­வன் இயக்­கத்­தில் ‘ராக்­கெட்ரி’, ‘அந்­தா­தூன்’ இந்­திப்­படத்­தின் தமிழ் மறு­ப­திப்பு என வரி­சை­யாக படங்­களில் ஒப்­பந்­த­மாகி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் அண்­மை­யில் ‘சால்ட் அண்ட் பெப்­பர்’ தோற்­றத்­தில் தம்­மைப் பட­மெ­டுத்து இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டி­ருந்­தார் சிம்­ரன்.

அதைக்­கண்டு பல­ரும் நன்­றாக இயல்­பாக இருப்­ப­தாக பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர்.

“நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு நடி­கர் பிர­சாந்த்­து­டன் இணைந்து நடிக்­கி­றேன்.

“பிர­சாந்த் மீது ரசி­கர்­க­ளுக்கு எப்­போ­துமே எதிர்­பார்ப்பு இருக்­கும். அத­னா­லும் நல்ல கதா­பாத்­தி­ரம் என்­ப­தா­லும் மறு­ப­திப்­பில் நடிக்­கி­றேன்.

“தற்போது ‘பாவக்­க­தை­கள்’ படத்­தில் இரண்டு பெண் குழந்­தை­க­ளின் தாயாக நடித்­தி­ருக்­கி­றேன். அதில் என் நடிப்பு மிக இயல்­பாக இருந்­த­தாக எல்­லோ­ரும் பாராட்­டு­கி­றார்­கள். எனக்­குப் பெண் குழந்தை இல்லை.

“ஆனால் என் தங்கை, தம்பி, நெருக்­க­மான உற­வி­னர்­க­ளின் வீடு­களில் பெண் குழந்­தை­கள் உள்­ள­னர். இன்­னும் சொல்­லப் போனால் எங்­கள் வீடு முழுக்­கவே பெண் குழந்­தை­கள்­தான். ஒரு­வேளை எனது நடிப்பு இயல்­பாக அமைந்­த­தற்கு இது­வும் கார­ண­மாக இருக்­க­லாம்,” என்­கி­றார் சிம்­ரன்.

திரு­ம­ண­மான நடி­கை­களை திரை­உ­ல­கம் புறக்­க­ணிப்­ப­தாக கூறப்­ப­டு­வதைத் தம்­மால் ஏற்­க­மு­டி­யாது என்று சொல்­ப­வர், சரி­யான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­தால் தன்­னைப் போலவே மற்ற நடி­கை­களும் தாக்­குப்­பி­டிக்க முடி­யும் என்­கி­றார்.

“நான் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே ‘கன்­னத்­தில் முத்­த­மிட்­டால்’, ‘வார­ணம் ஆயி­ரம்’ படங்­க­ளி­லேயே அம்­மா­வாக நடித்­து­விட்­டேன். அதன்­பி­றகு வாய்ப்­பு­கள் இல்­லா­த­தால் நான் திரை­யு­ல­கில் இருந்து ஒதுங்­க­வில்லை.

“எனக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­காக காத்­தி­ருந்­தேன். அதற்­காக விஜய்க்கு ஜோடி­யாக நடிக்­கச் சொன்­னால் அதற்கு வாய்ப்­பில்லை. நல்ல கதா­பாத்­தி­ரங்­களே எனது இலக்கு, எதிர்­பார்ப்பு,” என்­கி­றார் சிம்­ரன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon