'மாஸ்டர்' திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் நிலையில் அப்படத்தின் குறு முன்னோட்ட காட்சித் தொகுப்புகள் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
எனினும் மூன்று குறு முன்னோட்டங்களிலும் நடிகை ஆன்ட்ரியா, மகேந்திரன், பூவையார் ஆகியோரை ஒரு காட்சியில் கூட காணமுடியவில்லை. இதனால் அவர்கள் படத்தில் இருக்கிறார்களா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தனது காட்சி இடம்பெறாததால் ஆன்ட்ரியா வருத்தத்தில் உள்ளாராம். இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் அவர் பேசியதாகவும், உரிய விளக்கமளித்து லோகேஷ் அவரை சமாதானப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆன்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு உறுதி செய்துள்ளது.
"மகேந்திரன், பூவையார் உள்ளிட்ட பலர் குறு முன்னோட்டத்தில் இடம்பெறவில்லை என்பது சரிதான். வழக்கமாக விஜய் சாரின் படங்களில் அவரது அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னோட்டத்தின் முடிவில் இந்த வசனங்கள் இடம்பெறும்.
"இதில் அப்படிப்பட்ட வசனங்கள் இல்லை. அதனால்தான் குறு முன்னோட்டத் தொகுப்புகளை சற்று வித்தியாசமாக உருவாக்கி உள்ளோம். மற்றபடி யாரையும் புறக்கணிக்கவில்லை," என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

