தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிணற்றில் விழுந்த நமீதா: பதறிப்போன கிராம மக்கள்

1 mins read
81959c43-57df-48b7-ba28-a84dbe0e09d9
படம்: ஊடகம் -

படப்­பி­டிப்­பின் போது நடிகை நமீதா கிணற்­றில் விழுந்­ததைப் பார்த்து பத­றிப்­போன கிராம மக்­கள் அவரை காப்­பாற்ற ஓடிய சம்­ப­வம் திருவனந்­த­பு­ரம் பகு­தி­யில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கே­ரியா ஆகி­யோர் இயக்­கும் படம் 'பெளவ் வெளவ்'. இதில் நமீதா நாய­கி­யாக நடிக்­கி­றார். படத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் அவர்­தான்.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு திரு­வனந்­த­பு­ரம் அருகே உள்ள வனப்­பகு­தி­யில் நடை­பெற்று வந்­தது. அப்­போது படப்­பி­டிப்பை பார்க்க அரு­கில் உள்ள கிராம மக்­கள் ஏராளமானோர் திரண்டு வந்துள்ளனர்.

அப்போது ஒரு கிணற்­றின் அரு­கில் நமீதா நடந்து சென்­ற­போது, அவர் கையில் வைத்­தி­ருந்த கைபேசி கிணற்­றுக்­குள் தவறி விழுந்­துள்ளது. உடனே பதற்­றத்­தில் அதை தாவிப் பிடிக்க முயன்ற நமீதா கிணற்­றுக்­குள் விழுந்துள்ளார்.

இதைக் கண்டு பத­றிப்­போன கிராம மக்­கள் உட­ன­டி­யாக நமீ­தாவைக் காப்­பாற்ற கிணற்­றின் அருகே ஓடி­யுள்­ள­னர். ஆனால் படக்­கு­ழு­வி­னர் தடுத்து நிறுத்தி உள்­ள­னர். இத­னால் வாக்­கு­வா­தம் மூண்­டுள்­ளது. பிற­கு­தான் நமீதா கிணற்­றில் விழுந்­த­தும் படப்­பி­டிப்­பின் ஓர் அங்­கம் எனத் தெரிய வந்­துள்­ளது. அது படத்­தின் ஒரு காட்சி என்­பதை பொது­மக்­க­ளுக்கு புரி­ய­வைத்து படக்­கு­ழு­வி­னர் அனுப்பி வைத்­துள்­ள­னர்.