'நல்ல விருந்து காத்திருக்கிறது'

'நல்ல விருந்து காத்திருக்கிறது'

2 mins read
194107e4-616a-4b08-af96-732a17c625ef
மாளவிகா -

'மாஸ்­டர்' படம் குறித்து ஒவ்­வொரு நாளும் பல­வி­த­மான தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

படத்­தின் சில காட்­சி­கள் இணை­யத்­தில் வெளி­யா­னா­லும்கூட படக்­கு­ழு­வினர் மத்­தி­யில் உற்­சா­கம் குறைந்­து­வி­ட­வில்லை. படத்­துக்­கான விளம்­ப­ரப் பணி­களில் பர­ப­ரப்­பாக உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் மும்­பை­யில் இருந்­த­படி தமிழ் சினிமா ரசி­கர்­க­ளு­டன் இணை­யம் வழி நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல் நிகழ்­வில் பங்­கேற்­றார் 'மாஸ்­டர்' நாயகி மாள­விகா. அப்­போது அவ­ரி­டம் கேட்­கப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு சளைக்­கா­மல் பதி­ல­ளித்­தார்.

'மாஸ்­டர்' படத்­தைப் பார்த்து விட்­டீர்­களா. அதன் கதை என்ன என்­ப­து­தான் பெரும்­பா­லா­ன­வர்­கள் எழுப்­பிய கேள்வி. அதற்­குப் பதி­ல­ளிக்க மாள­விகா தயங்­க­வில்லை.

"நான் இன்­னும் படம் பார்க்­க­வில்லை என்று சொன்­னால் உங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­கத்­தான் இருக்­கும். ஆனால் அது­தான் உண்மை. மும்­பை­யில் இருந்­த­தால் படம் பார்க்­கும் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. ஆனால் நானும் இந்­தப் படத்­தில் ஓர் அங்­கம் என்ற வகை­யில் மிகச்­சி­றந்த விருந்து ஒன்று ரசி­கர்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கிறது என்று உறு­தி­ப­டச் சொல்­வேன்," என்­கி­றார் மாள­விகா.

கதைப்­படி மதுப் பழக்­கத்­துக்கு அடி­மை­யான பேரா­சி­ரி­ய­ராக விஜய்­யும் அவ­ரது உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் இளம் பேரா­சி­ரி­யை­யாக மாள­வி­கா­வும் பவானி என்ற வில்­லன் கதா­பாத்­திரத்­தில் விஜய் சேது­ப­தி­யும் நடித்­துள்­ள­தா­கத் தக­வல்.

விஜய்யை 'மாஸ்­டர்' பட பூசை­யின்­போ­து­தான் முத­லில் சந்­தித்­தா­ராம். அதன்­பி­றகு அவ­ரு­டன் நெருங்­கிப் பழ­கும் வாய்ப்­புக் கிடைத்­த­தா­கச் சொல்­கி­றார். இவரை 'மல்லு' என்­று­தான் பாசத்­து­டன் அழைப்­பா­ராம் விஜய்.

அடிப்­ப­டை­யில் மலை­யா­ளி­யான மாள­விகா குடும்­பத்­து­டன் மும்­பை­யில் வசிக்­கி­றார்.

மலை­யா­ளக் குடும்­பங்­களில் குழந்­தை­களை மல்லு என்று பாசத்­து­டன் குறிப்­பி­டு­வது வழக்­கம்.

"விஜய் சாரை சந்­தித்­தது குறித்து அவ­ரது பிறந்த நாளன்றுகூட சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­டி­ருந்­தேன்.

"அவர் ஒரு தயிர்­சா­தப் பிரி­யர். அதை விரும்பிச் சாப்பிடுவார். தினமும் அதி­காலை நான்கு மணிக்­கெல்­லாம் எழுந்து படப்பிடிப்புக்கு தயாராகிவிடு­வார். கார­ணம் அவர் தின­மும் இரவு வெகு சீக்­கி­ர­மா­கத் தூங்­கச் சென்று­வி­டு­வார்.

"குறை­வா­கப் பேசு­வார். ஆனால் கொடுத்த வாக்­கு­று­தியை நிச்­ச­யம் காப்­பாற்­று­வார். அவ­ரைப் பார்த்த முதல் நாளன்று மன­தில் என்ன எண்­ணம் அவ­ரைப் பற்றி ஏற்­பட்­டதோ அதன்­படியே இன்­ற­ள­வும் காட்சி அளிக்­கி­றார், செயல்­ப­டு­கிறார். இது பெரிய விஷ­யம்," என்­கி­றார் மாள­விகா.