தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த 'கபடதாரி' படக்குழு

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த 'கபடதாரி' படக்குழு

1 mins read
bc3ac282-97b1-4db4-a3ab-2b19d1e697bc
-

பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி இயக்­கத்­தில் சிபி­ராஜ் நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் 'கப­ட­தாரி'.

கன்­ன­டத்­தில் வெளி­யான 'காவ­லு­தாரி' படத்­தின் மறு­ப­திப்பு இது. நந்­திதா ஸ்வேதா நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யா­னது. ஏரா­ள­மா­னோர் சிறப்பாக இருப்­ப­தாக சமூக வலைத்­தளங்­களில் பின்­னூட்­ட­மிட்­டுள்­ளனர்.

சுமா ரங்­க­நா­தன், நாசர், ஜெயப்­பி­ர­காஷ், ஜே.சதீஷ் குமார் உள்­ளிட்­டோர் முக்­கிய பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார்­கள். ஜான் மகேந்திரனு­டன் இணைந்து தனஞ்­ஜெ­யன் திரைக்­கதை மற்­றும் வச­னத்தை எழு­தி­யுள்­ளார்.

தைப்­பூ­சத்­திற்கு தமி­ழக அரசு அதி­கா­ர­பூர்வ விடு­முறை அறி­வித்­துள்ள நிலை­யில், அன்­றைய தினம் இப்­ப­டம் வெளி­யீடு காண உள்­ளது.

மேலும் தமி­ழக அர­சுக்கு நன்றி தெரி­வித்­தும் இப்­ப­டக் குழு­வி­னர் சிறப்பு சுவ­ரொட்டி ஒன்றை வெளி­யிட்­டுள்­ள­னர்.

ஜன­வரி 28ஆம் தேதி தமி­ழ­கத்­தில் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கிறது 'கப­ட­தாரி'.

தாம் எதிர்­பார்த்­த­தை­விட படம் சிறப்­பாக உரு­வா­கி­யுள்­ள­தா­கச் சொல்­கி­றார் சிபி­ராஜ். அவ­ருக்கு இந்­தப் படம் திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கிய மைல்­கல்­லாக அமை­யும் என்­றும் சிபி­ராஜ் மதிப்பு கோடம்­பாக்­கத்­தில் மேலும் அதி­க­ரிக்­கும் என்­றும் நம்­பிக்­கை­யு­டன் சொல்­கி­றார் இயக்குநர் பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி.