'பெருமையாக உணர்கிறேன்'

'பெருமையாக உணர்கிறேன்'

3 mins read
4df8ed08-f56e-47a9-bea2-0acea7bb94ac
படம்: இணையம் -

மீண்­டும் திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டதை அடுத்து சினிமா ரசி­கர்­களும் கோடம்­பாக்­கத்­தி­ன­ரும் உற்­சா­க­ம் அடைந்­துள்­ள­னர்.

சிவ­கார்த்­தி­கே­ய­னும் அதே உற்­சா­கத்­து­டன் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி உள்­ளார்.

முன்­னணி நாய­கன், தயா­ரிப்­பா­ளர், பாட­லா­சி­ரி­யர், தொலைக்­காட்சி நிகழ்ச்சி தொகுப்பா­ளர் எனப் பல்­வேறு வித­மாக தன்னை வெளிப்­படுத்­தி­ய­வர் இன்­ற­ள­வும் 'மக்­களை மகிழ்­விக்­கும் கலை­ஞர்' எனும் அடை­யா­ளத்­தையே தாம் பெரி­தும் விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு சரி­யா­க பொங்­கலை ஒட்டி வெளி­யீடு கண்­டது சிவா­வின் 'ரஜினி முரு­கன்' படம். அதன்­பி­றகு அவ­ருக்கு ஏறு­மு­கம்­தான்.

அதே ­போன்று 'டாக்­டர்' படத்­தை­யும் பொங்­க­லுக்கு வெளி­யிட வேண்­டும் என்­று­தான் திட்­ட­மிட்­டி­ருந்­தார்­க­ளாம்.

ஆனால் கொ ரோனா விவ­கா­ரத்­தால் எல்­லாம் தலை­கீ­ழாகி விட்­டது.

'டாக்­டர்' படத்தின் இயக்­கு­நர் நெல்­சனை அண்ணா என்­று­தான் பாசத்­து­டன் குறிப்­பி­டு­கி­றார் சிவா. நெல்­ச­னின் முதல் படத்தை சிவா­தான் தயா­ரிக்க இருந்­தா­ராம். அதற்­குள் 'கோல­மாவு கோகிலா' வாய்ப்பு கிடைத்­த­தால் திட்­டம் மாறி­விட்­டது.

"நெல்­சன் அண்ணா இயக்­கும் ஒவ்­வொரு படத்­தி­லும் நான் ஏதே­னும் ஒரு வகை­யில் இடம்­பெற வேண்­டும் என விரும்­பி­னேன். அந்த ஆசைக்­கான வடி­கா­லா­கத்­தான் 'கல்­யாண வயசு' பாடலை எழு­தச் சொன்­னார்.

"அது­மட்­டு­மல்ல, யோகி­பாபு, மொட்டை ராஜேந்­தி­ரன் ஆகிய இரு­வ­ரி­ட­மும் அந்­தப் படத்­தில் நடிக்க வேண்­டும் என்று நான்­தான் கேட்­டுக்­கொண்­டேன். கால்­ஷீட், சம்பள விஷ­யத்­தில் இயக்­கு­ ந­ரு­டன் அனு­ச­ரித்­துப் போகு­மாறு கேட்­டுக்கொண்­டதை ஒரு கட­மை­யா­கவே நினைக்­கத் தோன்­றி­யது.

"நான் மட்­டு­மல்ல நெல்­சன் அண்­ணா­வுக்கு நெருக்­க­மான பல­ரும் தங்­க­ளால் முடிந்­த­தைச் செய்­த­னர். 'கோல­மாவு கோகிலா' வெளி­யா­ன­தும் 'டாக்­டர்' கதையைச் சொன்­னார். எனக்­குப் பிடித்­தி­ருந்­தது. நெல்­சன் அண்­ண­னும் ஜாலி­யான அதே ­ச­ம­யம் உணர்­வு­பூர்­வ­மான பட­மாக உரு­வாக்­கி­யுள்­ளார்," என்­கி­றார் சிவா.

நெல்­சன், அடுத்து விஜய் படத்தை இயக்­கப்போவது தெரி­ய­வந்­த­தும் அவ­ரை­விட சிவா­தான் அதி­கம் மகிழ்ச்சி அடைந்­தா­ராம். விஜய்க்காக நெல்­சன் உரு­வாக்கி உள்ள கதை­யின் கரு சிவா­வுக்கு நன்கு தெரி­யு­மாம். அந்­தக் கதை­யைத் திரை­யில் பார்க்க மிகுந்த ஆவ­லுடன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

வேற்­றுக்­கி­ர­க­வா­சி­களை மைய­மாக வைத்து உரு­வாகி வரு­கிறது சிவா­வின் அடுத்த பட­மான 'அய­லான்'. தென்­னிந்­திய மொழி­களில் இது­வரை வேற்­றுக்­கி­ர­க­வா­சி­களை மைய­மாக வைத்து முழு­நீ­ளப் படம் எது­வும் வெளி­யா­க­வில்லை என சுட்­டிக் காட்­டு­கி­றார். இந்­தி­யில் ஒரு படத்­தில் வேற்­றுக்­கி­ர­க­வாசி கதா­பாத்­தி­ரத்­தைக் காட்­டி­யி­ருந்­தா­லும், அதி­லும் ஒரு நடிகர்­தான் வேற்­றுக்­கி­ர­க­வாசி போல் ஒப்­ப­னை­யு­டன் நடித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"தமி­ழில் உரு­வா­கும் 'அய­லான்' படத்­தில் 'கிரா­ஃபிக்ஸ்' தொழில்­நுட்­பத்­தின் மூலம் ஒரு வேற்­றுக்­கி­ர­க­வாசி கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். அது படம் முழு­வ­தும் என்­னு­டன் பய­ணிக்­கும்.

"படப்­பி­டிப்­பை­விட தொழில்­நுட்­பப் பணி­க­ளுக்கு அதிக நாட்­கள் தேவைப்­படும். கிட்­டத்­தட்ட 2500 'ஷாட்'கள் கிரா­ஃபிக்ஸ் முறை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வ­ளவு தாம­த­மா­னா­லும் இந்­தப் படம் தமிழ் ரசி­கர்­க­ளுக்­குப் புது அனு­ப­வத்­தைக் கொடுக்­கும்," என்று உற்­சா­கத்­து­டன் விவ­ரிக்­கி­றார் சிவா.

தனது படத்­துக்கு ஏ.ஆர்.ரகு­மான் இசை­ய­மைப்­ப­தைப் பெரிய விஷ­ய­மாக கரு­து­வ­தா­கச் சொல்­ப­வர், ரகு­மான் இசை­ய­மைக்க சம்­ம­தித்­த­தும் பெரி­தாக சாதித்­து­விட்­டோம் என்ற உணர்வு ஏற்­பட்­ட­தாக சொல்­கி­றார்.

"ரகு­மான் சார் பாடல்­கள் அடங்­கிய ஒலி­நா­டாவை வாங்­கு­வ­தற்­காக சிறு­வ­ய­தில் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கப் பணம் சேர்த்­தி­ருக்­கி­றேன். இன்று அவர் என் படத்­துக்கு இசை­ய­மைப்­பது பெரு­மை­யாக இருக்­கிறது.

"இதே­போன்ற உணர்­வு­தான் 'ரெமோ' படத்­தில் என் நடிப்பு சிறப்­பாக இருப்­ப­தாக ரஜினி சார் தொலை­பே­சி­யில் பாராட்­டி­ய­போ­தும் ஏற்­பட்­டது. மக்­கள் நமக்­குக் கொடுத்த இடத்தை சரி­யா­கப் பயன்­ப­டுத்தி உள்­ளோம். அத­னால்­தான் இது­போன்ற நல்ல விஷ­யங்­கள் நடக்­கின்­றன என்று அடிக்­கடி நினைத்­துக்கொள்­வேன்," என்று சொல்­லும் சிவாவை அவ­ரது தந்­தை­யின் மறை­வு­தான் அதி­கம் பாதித்­துள்­ளது.

அவ­ரது இழப்பை எதைக்­கொண்­டும் ஈடு­கட்ட முடி­யாது. அவ­ரது ஆசி­தான் தம்மை வழி­ந­டத்­து­வ­தா­கச் சொல்­கி­றார்.