'கொடுத்த வாக்கை காப்பாற்றினார் சிம்பு'

'கொடுத்த வாக்கை காப்பாற்றினார் சிம்பு'

2 mins read
272adbad-412a-4cd2-94be-1e717b4f1439
'ஈஸ்வரன்' படத்தில் சிம்பு, நிதி அகர்வால். -

'ஈஸ்­வ­ரன்' துணை­யோடு பொங்­கல் பண்­டி­கையை உற்­சா­க­மாக கொண்­டாடி உள்­ளார் சிலம்­ப­ர­சன். படத்­தின் வசூல் தயா­ரிப்­புத் தரப்­புக்குத் திருப்தி அளித்­துள்­ள­தாம். இதை­ய­டுத்து இயக்­கு­நர் சுசீந்­தி­ர­னும் சிம்­பு­வும் மீண்­டும் இணைய உள்­ள­னர்.

"இந்­தப் படத்­தின் கதையை சிம்­பு­வுக்கு 45 நிமி­டங்­களில் முழு­மை­யாக விவ­ரித்­தேன். அதை ரசித்­துக் கேட்­ட­வர் 'கதை மன­தில் நேர்­மறை சிந்­த­னையை விதைக்­கிறது. நாம் கண்­டிப்­பாக செய்­வோம் என்று உற்­சா­க­மாக சொன்­னார்.

"பட வேலை­க­ளைத் தொடங்­கிய நிலை­யில் சிம்பு ஏற்­கெ­னவே 'மாநாடு', 'பத்து தல' என வரி­சை­யா­கப் படங்­களை ஒப்புக் கொண்டுள்ளார். அத­னால் படப்­பி­டிப்­புக்கு ஒழுங்­காக வரு­வாரா என்­பது சந்­தே­கம்­தான் என்று ஒரு­சி­லர் என்­னி­டம் கூறி­னர். நானும்­கூட கொஞ்­சம் பயந்து போனேன். இது­கு­றித்து சிம்­பு­வி­டம் வெளிப்­படை­யாக கேட்­டு­விட்­டேன்.

"அவர், 'யார் என்ன சொன்­னா­லும் நம்­பா­தீர்­கள். உங்­களை சகோ­த­ர­ராக நினைத்­துச் சொல்­கி­றேன். ஒப்­புக்­கொண்­ட­படி படப்­பி­டிப்­புக்கு வரு­வேன். நடித்­துக் கொடுப்­பேன்' என்­றார் சிம்பு. சொன்­ன­ப­டியே தன் வாக்­கைக் காப்­பாற்­றி­னார்.

"சில காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது சற்றே நேரம் எடுக்­கும் என்று நினைத்­தி­ருப்­பேன். ஆனால், நான் எதிர்­பார்த்­த­தை­விட மிக விரை­வாக அவற்­றைப் பட­மாக்­கி­னோம். அதற்கு சிம்­பு­வும் ஒளிப்­ப­தி­வா­ளர் திரு­வும்­தான் முக்­கி­ய கார­ணம்," என்­கி­றார் சுசீந்­தி­ரன்.

படக்­கு­ழு­வில் இருந்த அனை­வ­ரி­ட­மும் சிம்பு இயல்­பாகப் பேசிப் பழ­கி­னா­ராம். இத­னால் படக்­கு­ழு­வி­னர் அவரை வெகு­வாக மெச்­சு­கி­றார்­கள். இது­வரை சிம்பு படங்­களில் ஏற்­கெ­னவே அவ­ரு­டன் நடித்­த­வர்­கள்­தான் மீண்­டும் மீண்­டும் இடம்­பெறு­வார்­கள். அந்த வழக்­கத்தை மாற்றி அமைத்­தி­ருக்­கிறது 'ஈஸ்­வ­ரன்'. படத்­தின் நாயகி நிதி அகர்­வா­லும் படப்­பி­டிப்­பின்­போது வெகு­வாக ஒத்­து­ழைத்­தா­ராம்.

"நிதி அகர்­வால் தொழில் பக்தி நிறைந்த கதா­நா­யகி. சில நாய­கி­கள் கேர­வ­னுக்­குள் நுழைந்­தால் மீண்­டும் இறங்கி வரவே ஒரு மணி நேர­மா­கும்.

"ஆனால் நிதி அப்­ப­டிப்­பட்­ட­வர் அல்ல. ஓய்­வெ­டுக்­கப் போகவே மாட்­டார். அப்­ப­டியே கேர­வ­னுக்­குச் சென்­றா­லும் நாம் எதிர்­பார்த்த நேரத்­துக்­குள் வந்து நிற்­பார். தமிழ் சினிமா இப்­ப­டிப்­பட்ட நாய­கி­க­ளுக்­குத் தொடர்ந்து வாய்ப்­ப­ளிக்க வேண்­டும்

"படப்­பி­டிப்­பின் கடைசி நாளன்று இரவு ஒன்­பது மணி வரை காட்­சி­க­ளைப் பட­மாக்க வேண்டி இருந்­தது. மறு­நாள் காலை உத­ய­நிதி நடிக்­கும் படத்­தின் படப்­பி­டிப்­பில் நிதி அகர்­வால் பங்­கேற்க வேண்­டும்.

"ஆனால் க்ளை­மாக்ஸ் காட்­சியை எடுக்­கப் போவ­தாக நான் கூறி­ய­தும் உட­ன­டி­யாக தனது விமா­னப் பய­ணத்தை ரத்து செய்­து­விட்டு இரவு 10 மணி வரை நடித்­துக்கொடுத்­தார் நிதி அகர்­வால்.

"அதே­போல் மற்­றொரு நாய­கி­யான நந்­தி­தா­வும் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­பட்­டார். நன்­றா­கத் தமிழ் பேசக்­கூ­டிய நடிகை அவர். கன­மான கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும்கூட அவ­ரால் சிறப்­பாக நடிக்க முடி­யும். மொத்­தத்­தில் நல்ல குழு அமைந்­த­தால் 'ஈஸ்­வ­ரன்' சிறப்­பான படைப்­பாக உரு­வா­கி­யுள்­ளது. விரைவில் இந்தக் குழு மீண்டும் ஒரு படத்துக்காக இணையும்," என்கிறார் சுசீந்­தி­ரன்.