அரசியல் பேச வருகிறது ‘நாற்காலி’

‘யோகி’, ‘வட­சென்னை’ திரைப்­ப­டங்­க­ளுக்கு அடுத்­த­தாக இயக்­கு­நர் அமீர் நாய­க­னாக நடித்­தி­ருக்­கும் திரைப்­ப­டம் ‘நாற்­காலி’. ‘மூன் பிக்­சர்ஸ்’ நிறு­வ­னத்­தின் சார்­பாக ஆதம் பாவா இப்­ப­டத்தை தயா­ரித்­துள்­ளார்.

‘முக­வரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்­ளிட்ட திரைப்­ப­டங்­களை இயக்­கிய வி.இசட்.துரை ‘இருட்டு’ படத்தை அடுத்து இதை இயக்­கி­யுள்­ளார்.

இதில் அமீர் ஜோடி­யாக சாந்­தினி ஸ்ரீதரன் நடித்­துள்­ளார். மேலும் ஆனந்­த­ராஜ், ராஜ்­க­பூர், இமான் அண்­ணாச்சி, மாரி­முத்து, சுப்­பி­ர­ம­ணிய சிவா, சர­வ­ண­ஷக்தி, அர்­ஜூ­னன், கோவை பாபு உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர்.

வித்­யா­சா­கர் இசை­ய­மைக்க, ஒளிப்­ப­தி­வுக்கு கிருஷ்­ண­சாமி பொறுப்­பேற்­றுள்­ளார்.

மறைந்த பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யம் கடை­சி­யாக இந்த திரைப்­ப­டத்­திற்­காக ‘நெஞ்­ச­முண்டு நேர்­மை­யுண்டு’ என்ற பாடலை பாடி­யி­ருக்­கி­றார்.

மிகுந்த பொருட் செல­வில், நடப்பு அர­சி­யல் பின்­ன­ணி­யில், காதலை மைய­மா­கக் கொண்டு பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது ‘நாற்­காலி’.

படப்­பி­டிப்பு முடி­வ­டைந்து தற்­போது தொழில்­நுட்­பப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

மார்ச் மாதம் இப்படம் திரைகாண்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!