'திட்டமிட்டு நடிகை ஆனேன்'

'திட்டமிட்டு நடிகை ஆனேன்'

3 mins read
e1e1ca7f-0548-47b8-929e-6c1213cdb96c
நிதி அகர்வால் -

இந்­தி­யில் அறி­மு­க­மாகி பிறகு தெலுங்­கில் கால் பதித்து இப்­போது வெற்­றி­க­ர­மாக கோடம்­பாக்­கத்­துக்­கும் வந்­துள்­ளார் இளம் நாயகி நிதி அகர்­வால்.

'ஈஸ்­வ­ரன்', 'பூமி' என இவ­ரது நடிப்­பில் ஒரே சம­யத்­தில் இரு படங்­கள் வெளி­யாகி உள்­ளன. தமி­ழில் சுமா­ராக பேசும் நிதி, தற்­போது வேக­மாக தமிழ் கற்று வரு­கி­றா­ராம். அடுத்த படத்­தில் தம்­மால் சொந்­தக் குர­லில் பேச­மு­டி­யும் என்­கி­றார்.

'பூமி' படத்­துக்­காக மது­ரை­யில் நடை­பெற்ற படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ற­போது கிராம மக்­கள் பாசத்­தைக் கொட்­டி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"தின­மும் வித­வி­த­மாக சமைத்­துக்­கொண்டு வந்­த­னர். அவர்­க­ளின் அன்பு என்­னைத் திக்­கு­முக்­காட வைத்­தது. எதிர்­கா­லத்­தில் நிறைய சம்­பா­தித்து, விளை நிலங்­களை வாங்கி இயற்கை விவ­சா­யம் செய்­ய­வேண்­டும் எனும் ஆசை மன­தில் வலுத்து வரு­கிறது. எனது நிலத்­தில் விளை­வதை மட்­டுமே சாப்­பிட்டு வாழ­வேண்­டும் எனும் ஆசை­யும் துளிர்­விட்­டி­ருக்­கிறது," என்­கி­றார் நிதி.

மதுரை ரசி­கர்­கள் இவ­ரைச் 'செல்­லக்­குட்டி' என்று பாசத்­து­டன் கொஞ்­சு­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, ஒரு­சி­லர் இணைந்து நிதி பெய­ரில் ரசி­கர் மன்­ற­மும் தொடங்கி உள்­ள­ன­ராம்.

இதைக் கேள்­விப்­பட்­ட­போது இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது என்­கி­றார். இப்­போது கிரா­மத்து வாழ்க்கை மீதும் ஆசை வந்­தி­ருக்­கி­ற­தாம்.

'ஈஸ்­வ­ரன்', 'பூமி' படங்­க­ளுக்­காக மதுரை, பொள்­ளாச்சி பகுதி கிரா­மங்­களில் நடை­பெற்ற படப்­பி­டிப்­பு­கள்­தான் நிதி மன­தில் இந்த ஆசையை விதைத்­துள்­ளது. பிற நடி­கை­க­ளைப்­போல் தாம் நடிக்க வந்­தது விபத்து என்று இவர் சொல்­வ­தில்லை. திட்­ட­மிட்­டு­தான் நடி­கை­யா­னா­ராம்.

"சிறு வய­தி­லேயே எனக்கு சினிமா மீதான ஆர்­வம் அதி­கம் இருந்­தது. பள்ளி நாட்­களில் பிர­பல திரைப்­பா­டல்­க­ளுக்கு நட­ன­மா­டு­வது என்­றால் மிக­வும் பிடிக்­கும். யாரே­னும் என்­னி­டம், 'நீ என்­ன­வா­கப் போகி­றாய்' என்று கேட்­டால், 'சினி­மா­வில் பெரிய நடி­கை­யாக வேண்­டும்' என்­று­தான் சொல்­வேன். என் ஆர்­வத்­தைக் கவ­னித்த அம்மா முறைப்­படி நட­னம் கற்­றுக்­கொள்ள வைத்­தார்.

"12ஆம் வகுப்பு படித்­த­போது சினிமா மீதான ஆர்­வம் சற்றே குறைந்­தி­ருந்­தது. பிறகு பெங்­க­ளூ­ரு­வில் கல்­லூ­ரிப் படிப்பை மேற்­கொண்­ட­போது என் கூட்­டா­ளி­கள் பல­ரும் ஐஸ்­வர்யா ராய் போல்­அ­ழ­காய் இருக்­கி­றாய் என்று உசுப்­பேற்­றி­விட்­ட­னர்.

"ஒரு­முறை பெரிய விளம்­ப­ரப் பதா­கை­யில் ஐஸ்­வர்யா ராயின் முகத்தை பிரம்­மாண்­ட­மாக பார்த்­த­போது சினிமா ஆசை பெரி­தா­னது. நமது முக­மும் இது­போன்று விளம்­ப­ரப் பல­கை­களில் வெளி­வர வேண்­டும் என்று நினைத்­துக் கொண்­டேன்," என்­கி­றார் நிதி.

நடி­கை­யா­கும் ஆசை மன­தில் வலுத்­த­தும், அதற்கு தம்மை தயார்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளார். ஆங்­கி­லத்­தி­லும் இந்­தி­யி­லும் சர­ள­மா­கப் பேசு­கி­றார்.

"அதன் பல­னாக முத­லில் இந்­தி­யில் வாய்ப்பு அமைந்­தது. அதன் பின்­னர் தெலுங்கு. இப்­போது தமிழ். இந்­தி­யில் அறி­மு­க­மாகி மிக வேக­மா­கவே தமிழ் சினி­மா­வுக்கு வந்த நடிகை நானா­கத்­தான் இருப்­பேன்.

"ஹைத­ரா­பாத்­தில் பிறந்து பெங்­க­ளூ­ரு­வில் வளர்ந்­த­வள் நான். பெங்­க­ளூ­ரு­வில் நிறைய பேர் தமிழ் பேசு­வார்­கள். அத­னால், எனக்­குத் தமிழ் பரிச்­ச­ய­மான மொழி­தான்.

"தவிர, பொது­மு­டக்­கக் காலத்­தில், அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் தமிழ் வார்த்­தை­களை ஆங்­கி­லத்­தில் எழு­திக்­கொண்டு தமிழ் கற்­கத் தொடங்­கி­னேன். நான் அறிந்­து­கொண்ட தமிழ் வார்த்­தை­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் பகிர்ந்­தி­ருந்­தேன். அந்த வார்த்­தை­கள் அனைத்­தும் பேச்­சு­வ­ழக்­கில் இருப்­ப­தா­கப் பல­ரும் சொன்­னார்­கள். நிச்­ச­ய­மாக அடுத்த தமிழ்ப் படத்­தில் சொந்­தக் குர­லி­லேயே பேசு­வேன்," என்­கி­றார் நிதி அகர்­வால்.

ஜெயம் ரவி, சிம்பு குறித்து?

"இரு­வ­ருமே நல்ல நண்­பர்­கள்­தான். சினி­மா­வில் நிறைய அனு­ப­வம் உள்­ள­வர்­கள். நடிப்­பில் பிர­மிக்க வைத்­த­னர். புதி­ய­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரு­வ­தி­லும் இரு­வ­ரும் ஆர்­வம் செலுத்­து­கி­றார்­கள். இப்­போது உத­ய­நி­தி­யு­டன் நடிக்­கி­றேன். அவ­ரும் நல்ல நடி­கர்," என்று சொல்­லும் நிதிக்கு, இப்­போ­தைக்கு நிறைய வணி­கப் படங்­களில் நடிக்க வேண்­டும் என்­பதே முதன்­மை­யான ஆசை­யாக உள்­ள­தாம்.