இலங்கைத் தமிழர் வேடத்தில் விஜய் சேதுபதி

நடி­கர் விஜய் சேது­ப­தியை மைய­மாக வைத்து சர்ச்­சை­கள் வெடிப்­பது வாடிக்­கை­யாகி விட்­டது.

அண்­மை­யில்­தான் பட்­டாக்­கத்தி கொண்டு தன் பிறந்­த­நாள் கேக்கை வெட்­டி­னார் என சர்ச்சை எழுந்­தது.

அடுத்­து அவர் நடிக்­கும் ‘துக்ளக் தர்­பார்’ படத்­தில் வில்லன் கதா­பாத்­தி­ரம் பிர­பல அர­சி­யல் தலை­வரை சீண்­டு­வது போல் இருப்­ப­தாக புகார் கிளம்­பி­யது.

இப்­போது ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’ என்ற தலைப்­பில் உரு­வா­கும் சேது­ப­தி­யின் மற்­றொரு பட­மும் பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்­ளது.

இப்­ப­டத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டியை அண்­மை­யில் வெளி­யிட்­ட­னர். அதில் இலங்கை தேசி­யக் கொடி­யும், சிறிய அள­வில் இடம்­பெற்­றுள்­ளது. இது­தான் சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

சுவ­ரொட்­டியை மாற்றி அமைக்­கும்­படி தமிழ் ஆர்­வ­லர்­கள் சிலர் போர்க்­கொடி உயர்த்தி உள்­ள­னர். ஆனால் விஜய் சேது­பதி தரப்போ படம் வெளி­யான பிறகு உண்மை விவ­ரங்­கள் தெரி­ய­வ­ரும், அது­வரை பொறுத்­தி­ருங்­கள் என்­கிறது.

கதைப்­படி இலங்கை அக­தி­யாக நடிக்­கி­றா­ராம் விஜய் சேது­பதி. அங்­கி­ருந்து தமி­ழ­கம் வரும் அவர், பின்­னர் லண்­டன் செல்ல முயற்­சி­களை மேற்­கொள்­கி­றார். அவ­ரது எண்­ணம் ஈடே­றி­யதா என்­ப­து­தான் கதை­யாம்.

இந்­தப் படம் வெளி­வந்­த­தும் சேது­ப­திக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் இலங்­கைத் தமி­ழர், தமிழ் ஆர்­வ­லர்­கள் அவ­ரைப் பெரி­தும் போற்­று­வார்­கள் என்­கிறது படக்­குழு.

இந்­தப் படத்­தில் நடிப்­ப­தற்­காக இலங்­கைத் தமி­ழில் பேசக் கற்­றுக்­கொண்­டா­ராம் சேது­பதி. அவ­ரது பேச்­சும் உடல்­மொ­ழி­யும் அச்சு அச­லாக இலங்­கைத் தமி­ழ­ரைப் பிர­தி­ப­லிக்­கு­மாம்.

பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போது சிறு தவ­றும் நிக­ழா­த­படி­யும் செயற்­கைத்­த­னம் இல்­லா­ம­லும் கவ­ன­மா­கப் பார்த்­துக் கொண்­டா­ராம்.

இதற்கு முன்பு ‘தெனாலி’ படத்­தில் கமல் இலங்­கைத் தமி­ழில் பேசி நடித்­தி­ருப்­பார். அதன் பிறகு விஜய் சேது­ப­தி­தான் இத்­த­கைய முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

“இலங்­கைத் தமி­ழர்­கள் மீது மிகுந்த அக்­கறை கொண்­ட­வர் சேது­பதி. அதைப் பலர் புரிந்­து­கொள்­ள­வில்லை. ‘800’ திரைப்­ப­டத்­தில் கிரிக்­கெட் வீரர் முத்­தையா முர­ளி­த­ர­னின் வாழ்க்­கை­யைப் பதிவு செய்ய முயன்­ற­னர். அதி­லும்­கூட ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு எதி­ராக எது­வும் இல்லை.

“இப்­போ­தும் விவ­ரம் தெரி­யா­ம­லேயே எதிர்ப்பை வெளிப்­படுத்­து­கி­றார்­கள். இந்­தப் படம் வெளி­யான பிற­கு­தான் இலங்­கைத் தமி­ழர் நல­னில் சேது­பதி எந்­த­ளவு அக்­கறை கொண்­டுள்­ளார் என்­பது தெளி­வா­கத் தெரி­யும்,” என்­கிறது ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’ படக்­குழு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!