‘கமலியை நேசிக்கிறேன்’

‘கமலி ஃப்ரம் நடுக்­கா­வேரி’ படத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ளார் ‘கயல்’ ஆனந்தி.

நான்­கைந்து படங்­களில் நடித்து வந்த நிலை­யில், திடீ­ரென திரு­ம­ணம் செய்து கொண்­டது ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது. ஆனந்­தியை வைத்து படம் எடுத்­துக்­கொண்­டி­ருப்­ப­வர்­கள் அதிர்ச்­சி­யில் உள்­ள­னர்.

எனி­னும் ஒப்­புக்­கொண்ட படங்­களை முடித்­துக் கொடுப்­பது தமது கடமை என்­றும் தொடர்ந்து நடிக்­கப் போவ­தா­க­வும் கூறி­யுள்­ளார் ஆனந்தி.

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்­தி­ருப்­ப­தால், மீண்­டும் படப்­பி­டிப்­பு­களில் பங்­கேற்­கத் துவங்­கி­விட்­டா­ராம்.

“கொரோனா அச்­சு­றுத்­த­லால் நான் இன்­னும் ஹைத­ரா­பாத்­தில்­தான் இருப்­ப­தாக சிலர் தவ­றான தக­வ­லைப் பரப்பி வரு­கி­றார்­கள். ‘ராவ­ணக்­கோட்­டம்’ படத்­தின் படப்­பி­டிப்­பில் தற்­போது பங்­கேற்­றுள்­ளேன். அதற்­காக அவ்­வப்­போது சென்னை வந்­து­போ­கி­றேன்.

“கொரோனா அச்­சு­றுத்­தல் உச்­சத்­தில் இருந்த ஜூன், ஜூலை மாதங்­க­ளில்­கூட முழுப் பாது­காப்­பு­டன் ஹைத­ரா­பாத்­தில் நடை­பெற்ற ‘ஸோம்பி ரெட்டி’ படப்­பி­டிப்­பில் கலந்­து­கொண்­டேன். நிறைய நடி­கர், நடி­கை­கள், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­க­ளைக் கொண்டு பட­மாக்­கப்­பட்ட படம் அது. அதையே சமா­ளித்­து­விட்­டோம். இப்­போது எல்­லாம் கட்­டுக்­குள் இருக்­கும்­போது ஏன் பயப்­பட வேண்­டும்,” என கேள்வி எழுப்­பு­கி­றார் ஆனந்தி.

இது­வரை தாம் நடித்த தமிழ்ப் படங்­களில் ‘கமலி ஃப்ரம் நடுக்­கா­வேரி’ தன் மன­துக்கு நெருக்­க­மான படங்­களில் ஒன்று எனக் குறிப்­பி­டு­ப­வர், அதில் தனது கதா­பாத்­தி­ரத்தை மிக­வும் நேசித்­த­தா­கச் சொல்­கி­றார்.

கிரா­மத்­தில் வசிக்­கும் ஒரு பெண், தக­வல் தொழில்­நுட்­பத் துறை வரை எப்­ப­டிப் பய­ணிக்­கி­றாள் என்­ப­து­தான் களம்.

“பரி­யே­றும் பெரு­மாள்’, ‘இரண்­டாம் உல­கப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்­க­ளுக்­குப் பிறகு பல கதை­க­ளைக் கேட்­டேன். எதை­யும் ஒப்­புக்­கொள்­ள­வில்லை. அந்­தச் சூழ­லில் என்­னைத் தேடி வந்த கதை­யும் கமலி கதா­பாத்­தி­ர­மும் மன­தைக் கவர்ந்­தன.

“புதிய குழு­வின் முதல் முயற்சி என்­ற­தும் சற்று தயக்­கத்­து­டனே கதை கேட்க ஆரம்­பித்­தேன். ஆனால் கதை கேட்டு முடிக்­கும்­போது, ‘எந்­தக் கார­ணத்­துக்­கா­க­வும் இந்­தப் படத்தை விட்­டு­வி­டக் கூடாது’ என உட­ன­டி­யாக ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்து போட்­டு­விட்­டேன்.

“இப்­போ­தைக்கு முழுக் கதை­யை­யும் சொல்­லி­விட முடி­யாது. படத்­தின் பெரும்­பா­லான காட்­சி­கள் என் மீது பட­ரும். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் ரசித்து நடித்­தேன். படப்­பி­டிப்பு நடை­பெற்ற அந்த நாட்­கள் ரொம்­பவே ஆனந்­த­மா­னவை,” என்­கி­றார் ஆனந்தி.

‘மூடர் கூடம்’ நவீ­னு­டன் இவர் இணைந்து நடித்­துள்ள ‘அலா­வு­தீ­னின் அற்­புத கேமரா’ படம் விரை­வில் வெளி­வர உள்­ளது. அடுத்து இணை­யத் தொடர்­க­ளி­லும் கூடு­தல் கவ­னம் செலுத்த முடி­வெ­டுத்­துள்­ளார்.

“நவீன் என்­னோட குடும்ப நண்­பர் மாதிரி. அவ­ரது ‘அலா­வு­தீ­னின் அற்­புத கேமரா’ படப்­பி­டிப்­பில் அவ்­வ­ளவு விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன்.

“மொத்­த­மா­கவே 15 நபர்­கள்­தான் படப்­பி­டிப்­பில் இருப்­போம். ஆனால், நுணுக்­க­மாக, நேர்த்­தி­யா­கப் படப்­பி­டிப்பு நடந்­தது. சுவிட்­சர்­லாந்து உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­களில் பட­மாக்­கப்­பட்­டுள்ள படம் இது.

“எனக்­குக் காட்சி இல்­லாத சம­யங்­களில் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் எப்­படி, எத்­த­கைய கேமரா கோணத்­தில் பட­மாக்க வேண்­டும்? ஒளிப்­ப­திவு எப்­படி இருக்க வேண்­டும்? என படக்­கு­ழு­வி­ன­ரி­டம் கேட்­டுக் கேட்டு, சினிமா எடுப்­பது எப்­படி என்­றும் கொஞ்­சம் கற்­றுக்­கொண்­டேன். இயக்­கு­நர், ஒளிப்­ப­தி­வா­ளர் என எல்­லோ­ரும் அன்­பா­கப் பார்த்­துக்­கொண்­ட­னர். இந்த மாதிரி ஒரு குழு எப்­போ­தா­வ­து­தான் அமை­யும்,” என்­கி­றார் ஆனந்தி.

கொரோனா ஏற்­ப­டுத்­திய இடை­வெ­ளி­யால் ஒவ்­வொரு படத்­தை­யும் நிதா­ன­மாக முடிக்க வேண்­டி­இ­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இது இணை­யத் தொடர்­க­ளுக்­கான கால­கட்­டம் என்­கி­றார்.

“பலர் அதை விரும்­பு­கி­றார்­கள். கொரோனா காலத்­தில் முப்­பது இணை­யத் தொடர்­க­ளைப் பார்த்­தேன்.

“நானும், வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் ‘லைவ் டெலி­காஸ்ட்’ என்ற தொட­ரில் நடித்­தேன். நல்ல கதை­யம்­சம் உள்ள தொடர் என்­றால் நிச்­ச­யம் நடிப்பேன்,” என்­கி­றார் ஆனந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!