'பிக்பாஸ்' சனம் ஷெட்டி நடிக்கும் படம் 'எதிர் வினையாற்று'

'பிக்பாஸ்' சனம் ஷெட்டி நடிக்கும் படம் 'எதிர் வினையாற்று'

1 mins read
9a97a09d-abfd-442d-8db2-32047f3769e5
-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'எதிர் வினையாற்று'.

அலெக்ஸ், இளமைதாஸ் என்ற இரட்டை இயக்குநர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள்.

அறிமுக நாயகன் அலெக்ஸ் ஜோடியாக பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார்.

மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.