‘தனுஷ் மூலம் ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’

தனுஷ் நடிக்­கும் ‘நானே வரு­வேன்’, ‘ஆயி­ரத்­தில் ஒரு­வன்-2’ என்று அடுத்­த­டுத்து இரண்டு புதுப்­ப­டங்­களை இயக்­கப் போவ­தாக இயக்­கு­நர் செல்­வ­ரா­க­வன் அறி­வித்­து­இருப்­பது தமிழ் சினிமா ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

கிட்­டத்­தட்ட பத்து ஆண்­டு­களுக்­குப் பிறகு தனது இளைய சகோ­த­ரர் தனு­ஷு­டன் மீண்­டும் இணைந்­துள்­ளார் செல்வா. இதற்­கி­டையே ‘சாணிக் காயி­தம்’ என்ற படத்­தி­லும் கீர்த்தி சுரே­ஷு­டன் நடித்து முடித்­துள்­ளார்.

தனு­ஷி­டம் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களும் அவ­ரது வளர்ச்­சி­யும் தம்மை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வ­தாக சொல்­லும் செல்வா, தம்பி தொட்­டுள்ள உய­ரம் மிகுந்த மகிழ்ச்சி அளித்­தி­ருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

“நானும் தனு­ஷும் பணி­யாற்­றிய ‘துள்­ளு­வதோ இளமை’ பட­மாக்­கப்­பட்­ட­போது அவர் 16 வயது இளை­ஞன். இப்­போது என்­னு­டன் பணி­யாற்­றும் தனுஷ் மாபெ­ரும் நடி­கன். அண்­ண­னாக இந்த வளர்ச்சி மகிழ்ச்சி தரு­கிறது எனில், இயக்கு­நராக பெரும் சவா­லாக உள்­ளது.

“அண்­மை­யில்­தான் புதுப்­ப­டத்­துக்­கான முன்­னோட்­டக் காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னோம். அப்­போது தனு­ஷின் நடிப்பு என்­னை­யும் அறி­யா­மல் அவ­ரைப் பார்த்து ‘நீ நடி­கன்டா’ என்று சொல்ல வைத்­தது,” என்­கி­றார் செல்­வ­ரா­க­வன்.

‘எனது நடிப்பு எப்­போ­து­தான் உங்­க­ளைத் திருப்­தி­ப­டுத்­துமோ தெரி­ய­வில்லை’ என்று தனுஷ் பல­முறை இவ­ரி­டம் கூறி­யி­ருக்­கி­றா­ராம். ஆனால், இப்­போது எந்­த­வித தயக்­க­மு­மின்றி தன் தம்­பியை மிகச் சிறந்த நடி­கன் என்று சொல்ல முடி­கி­ற­தாம்.

“ஓர் இயக்­கு­ந­ராக இவ்­வ­ளவு பெரிய நடி­கரை எப்­படி இயக்­கப் போகி­றோம் என்ற சவாலை எதிர்­கொண்­டி­ருக்­கி­றேன். இந்த எண்­ணத்­து­டன்­தான் பணி­யாற்றி வரு­கி­றேன்,” என்று சொல்­லும் செல்வா புதுப்­ப­டம் குறித்து சில விஷ­யங்­க­ளைத் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

இவ­ரும் தனு­ஷும் இணை­வது ‘புதுக்­கோட்டை’ படத்­தின் இரண்­டாம் பாகம் இல்­லை­யாம். இது புதுக்­க­தை­யு­டன் உரு­வா­கும் புதுப்­படம் என்­கி­றார். ‘புதுப்­பேட்டை’ இரண்­டாம் பாகம் எதிர்­கா­லத்­தில் வெளி­யா­கும் என்­றும் கொக்கி குமார் ரசிகர்­களை மீண்­டும் சந்­திப்­பது உறுதி என்­றும் கூறு­கி­றார். ‘நானே வரு­வேன்’ படத்­தில் ஒரு ஜீப் வாக­னம் முக்­கி­யக் கதா­பாத்தி­ர­மாக இடம்­பெ­று­மாம்.

“எல்லா நடி­கர்­க­ளுக்­கும் ஓர் அடை­மொழி இருக்­கிறது. எனது புதுப்­ப­டத்­தின் மூல­மாக தனு­ஷுக்­கும் ஓர் அடை­மொழி கொடுக்க விரும்­பு­கி­றேன். இந்த எண்­ணம் நீண்ட நாட்­க­ளாக என் மன­தில் உள்­ளது.

“எனது படங்­களில் நடித்­த­போது தன் பெய­ரைக்­கூட திரை­யில் காண்­பிக்­கத் தயங்­கு­வ­தாக தனுஷ் என்­னி­டம் வருத்­தப்­ப­டு­வார். ‘தனுஷ் நடிக்­கும் படம்’ என்று போடச் சொல்­வார். நானோ, ‘அதான் படத்­தில் நடிக்­கி­றாயே, பிறகு எதற்கு தனுஷ் நடிக்­கும் என்று திரை­யில் காட்ட வேண்­டும்’ என்று கூறி­வி­டு­வேன். இப்­போது நானே அவ­ருக்கு ஓர் அடை­மொழி கொடுக்க விரும்­பு­கிறேன்.

“இது தனுஷ் ரசி­கர்­களை மட்டு­மல்ல அவ­ரையே ஆச்­ச­ரி­யப்­படுத்தக்­கூ­டி­ய­தாக இருக்­கும். ஒரு­வேளை எந்த அடை­மொ­ழி­யும் வேண்­டாம் என்று அவரே கூறி­விட்­டால் அவர் முன்பு ஆசைப்­பட்­டது போல் ‘தனுஷ் நடிக்­கும்’ என்று போட்­டு­வி­டு­வேன்,” என்­கி­றார் செல்வா.

‘சாணிக்­ கா­யி­தம்’ படத்­தில் நடித்த அனு­ப­வம் குறித்து?

“கேம­ரா­வுக்­குப் பின்­னால் நின்று படத்தை இயக்­கு­வது கடி­னம் என்­றால், கேம­ரா­வுக்கு முன்பு நின்று நடிப்­பது மிக மிகக் கடி­னம் என்­பதைப் புரிந்­து­கொண்­டேன்.

“தனுஷ் இப்­போது ஹாலி­வுட்­டுக்­கும் சென்றுவிட்­டார். முதல் படத்­தில் பணி­யாற்­றி­யபோது எனக்கு 22 வயது, இப்­போது 44 வயது. தனுஷ் எங்­க­ளை­யும் ஹாலி­வுட்­டுக்கு அழைத்­துச் சென்­றால் மகிழ்ச்­சி­யாக இருக்­கும். நான் இயக்­கும் ஹாலி­வுட் படத்­தி­லும் அவர்­தான் நாய­க­னாக இருப்­பார்,” என்­கி­றார் செல்­வ­ரா­க­வன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!