புத்தாண்டில் புதிய எதிர்பார்ப்புகள் 'ஹாலிவுட்' தனுஷ்; 'மாநாடு' சிம்பு

3 mins read
edf95ee9-52b3-42b4-ad96-cbec7ec45716
நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித். (இடமிருந்து வலம்) -
multi-img1 of 3

மலர்ந்­துள்ள புத்­தாண்­டில் ஒட்­டு­மொத்த தமிழ் சினி­மா­வுக்­கும் நம்­பிக்­கை­யூட்­டும் வித­மாக வெளி­யாகி உள்­ளது 'மாஸ்­டர்'.

எனி­னும் எதிர்­வ­ரும் நாள்­களில் பல சவால்­க­ளைச் சந்­திக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­பதை திரை­யு­ல­கத்­தி­னர் உணர்ந்­துள்­ள­னர். அதேவேளை­யில் பல சுவா­ர­சி­யங்­களும் அரங்­கேற உள்­ளன.

2019ஆம் ஆண்டு இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட படங்­கள் வெளி­யீடு கண்ட நிலை­யில் கடந்த ஆண்டு கோடம்­பாக்­கத்­தில் உத்­தே­ச­மாக நூறு படங்­களே வெளி­யீடு கண்­டன. இவற்­றுள் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு கண்ட படங்­களும் அடங்­கும்.

திரை­ய­ரங்­கு­கள், 'ஓடிடி' இடையே போட்டி

நடப்­பாண்­டில் 250க்கும் மேற்­பட்ட படங்­கள் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் திரை­ய­ரங்­கு­க­ளுக்­கும் 'ஓடிடி' எனப்­படும் இணை­யத்­தில் படங்­களை வெளி­யி­டும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடையே போட்டி ஏற்­பட்­டுள்­ள­தாக ஒரு­த­ரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர்.

'ஓடிடி'யால் திரை­ய­ரங்­கு­க­ளின் வரு­மா­னம் பாதிக்­கப்­படும் என்­பது ஒரு­த­ரப்­பின் கருத்­தாக உள்­ளது.

ஆனால் 'வார்­னர் பிர­தர்ஸ்' போன்ற பெரிய நிறு­வ­னங்­கள் கூட தங்­கள் தயா­ரிப்­பு­களை ஒரே நாளில் திரை­ய­ரங்­கு­க­ளி­லும் இணை­யத்­தி­லும் வெளி­யி­டு­வ­தாக மற்­றொரு தரப்பு சுட்­டிக்­காட்­டு­கிறது.

எனவே இரு தளங்­க­ளி­லும் வசூல் காண்­பதே புத்­தி­சா­லித்­த­னம் என இத்­த­ரப்பு கூறு­கிறது. ரசி­கர்­கள் என்ன முடிவு எடுக்­கி­றார்­கள் என்­பது போகப்­போ­கத்­தான் தெரி­ய­வ­ரும்.

முன்­னணி நாய­கர்­க­ளின் படங்­கள்வசூல் தருமா?

பெரிய, முன்­னணி நாய­கர்­க­ளின் படங்­கள் இந்­தாண்டு வெளி­யீடு காண உள்­ளன.

ரஜி­னி­யின் 'அண்­ணாத்த', அஜித்­தின் 'வலிமை', விக்­ர­மின் 'கோப்ரா', சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'அய­லான்', 'டாக்­டர்', தனு­ஷின் 'ஜகமே தந்­தி­ரம்', சிம்­பு­வின் 'மாநாடு' உள்­ளிட்ட படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யீடு காணும். இவற்­றின் வசூ­லும் திருப்­தி­க­ர­மாக இருக்­கும் பட்­சத்­தில் கோடம்­பாக்­கம் மீண்­டும் நிமிர்ந்­து­வி­டும் என்­கி­றார்­கள் திரை ஆர்­வ­லர்­கள்.

அதி­க­ரிக்­கும் 'ஆந்­தா­லஜி' படங்கள்

இதற்­கி­டையே தமி­ழி­லும் ஒரே படத்­தில் பல கதை­க­ளைச் சொல்லி அவற்றை இறு­தி­யில் இணைக்­கும் 'ஆந்­தா­லஜி' வகைப் படங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. கடந்த ஆண்டு வெளி­யான 'புத்­தம் புது காலை', 'பாவக் கதை­கள்' ஆகிய படங்­கள் வெளி­யா­கின.

மணி­ரத்­னம், கவு­தம் மேனன், வெங்­கட் பிரபு, பா.ரஞ்­சித், கார்த்­திக் நரேன், கே.பி.ஆனந்த் உள்­ளிட்ட பல இயக்­கு­நர்­கள் இணை­யத்­தில் நேர­டி­யாக வெளி­யி­டு­வ­தற்­கென படைப்­பு­களை உரு­வாக்கத் தயாரா­கின்­ற­னர்.

விஜய் சேது­பதி, சித்­தார்த், அர­விந்த் சாமி, கவு­தம் கார்த்­திக், கீர்த்தி சுரேஷ், தமன்னா, சமந்தா, ஐஸ்­வர்யா ராஜேஷ், நந்­திதா, காஜல் உள்­ளிட்ட பலர் இப்­ப­டங்­களில் நடிக்­கின்­ற­னர்.

இதேபோல் இணை­யத் தொடர்­களின் பக்­க­மும் கோடம்­பாக்­கத்து கலை­ஞர்­க­ளின் பார்வை திரும்­பி­யுள்­ளது. பெரும்­பா­லான முன்­னணி நடி­கை­கள் ஏதே­னும் ஓர் இணை­யத் தொட­ரில் நடிக்­கின்­ற­னர் அல்­லது ஒப்­பந்­த­மாகி உள்­ள­னர் என்று தொடர்ந்து தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.

அசத்­தும் சேது­பதி, பிரியா

முன்­னணி நாய­கர்­களில் வழக்­கம் போல் இந்த ஆண்­டும் விஜய் சேது­ப­தி­தான் வரி­சை­யாக பல படங்­களில் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார்.

தமிழ், இந்­தி­யில் திரைப்­ப­டங்­கள் மட்­டு­மல்­லா­மல் இந்­தி­யில் இரு இணை­யத் தொடர்­களில் நடிக்­க­வும் இவர் ஒப்­பந்­த­மாகி உள்­ளார். 'மனி­த­ருக்கு எப்­ப­டித்­தான் எல்­லா­வற்­றுக்­கும் நேரம் இருக்­கி­றதோ' என்று கோடம்­பாக்­கத்­துப் புள்­ளி­கள் ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள்.

நாய­கி­களைப் பொறுத்­த­வரை பிரியா பவானி சங்­கர் இன்­னொரு நயன்­தா­ரா­வாக உரு­வெ­டுத்து வரு­கி­றார். தற்­போது தமி­ழில் மட்­டும் எட்டு படங்­க­ளி­லும் தெலுங்கு, மலை­யா­ளத்­தில் தலா ஒரு படத்­தி­லும் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இவ­ரை­யும் இணை­யத் தொடர்­களில் பிர­பல இயக்­கு­நர்­கள் இரு­வர் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­ன­ராம்.

நகைச்­சு­வைக்குப் பஞ்­சம் ஏற்படுமா?

கொரோனா காலத்­தில் தொலைக்­காட்­சி­யி­லும் இணை­யத்­தி­லும் திரைப்­ப­டங்­க­ளைப் பார்ப்­ப­வ­ரின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. பெரும்­பா­லா­ன­வர்­கள் நகைச்­சு­வைப் படைப்­பு­களை விரும்­பிப் பார்க்­கி­றார்­கள்.

இந்த ஆண்டு முன்­னணி நகைச்­சுவை நடி­கர்­க­ளான சூரி­யும் யோகி பாபு­வும் கதா­நா­ய­கர்­க­ளாக மாறி­யுள்­ள­னர். ஏற்­கெ­னவே சந்­தா­ன­மும் வடி­வே­லு­வும் நகைச்­சுவைக் களத்­தில் இருந்து ஒதுங்­கி­விட்­ட­தால் இவர்­க­ளின் இடத்தை மற்­ற­வர்­கள்­தான் நிரப்ப வேண்­டி­யுள்­ளது.

இளம் இயக்­கு­நர்­க­ளின் படைப்புகள்

இந்த ஆண்டு பல இளம் இயக்­கு­நர்­க­ளின் புதிய படங்­கள் வெளி­யா­கும் வாய்ப்­புள்­ளது. இவை ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளன.

லோகேஷ் கன­க­ராஜ் 'மாஸ்­டர்' படத்தை இயக்­கி­யுள்ள நிலை­யில், அடுத்து கமல்­ஹா­சனை வைத்து 'விக்­ரம்' படத்தை இயக்­கு­கி­றார். 'கோல­மாவு கோகிலா' புகழ் நெல்­சன் அடுத்து விஜய்யை இயக்க தயா­ரா­கி­றார். விக்­ரமை வைத்து 'கோப்ரா' படத்தை இயக்­கு­கி­றார் அஜய் ஞான­முத்து.

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில் அடுத்து நடிக்க உள்­ளார் விக்­ரம். வினோத் இயக்­கி­யுள்ள அஜித்­தின் 'வலிமை' அடுத்த சில மாதங்­களில் வெளி­யா­கும்.