மெழுகுவத்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள்

மெழுகுவத்தி ஏற்றி நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள்

1 mins read
4b5a8ab5-c40b-4888-89ca-2d2a5c505d94
-

'மாஸ்டர்' படம் வெளியீட்டின் மூலம் திரையரங்குகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவது என முடிவெடுத்ததற்காக நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் அதன் ஊழியர்களும் ரசிகர்களும் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்து தங்கள் நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர்.

'இளைய தளபதிக்கு நன்றி' என்ற வார்த்தைகளை மெழுகுவத்திகளைக் கொண்டு அமைத்துள்ள காட்சிகளுடன் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.