40 வருடங்களுக்கு முன் நடந்த குற்றம்; குற்றவாளியைத் தேடி பயணம்

சிபி­ராஜ் நடிப்­பில் உரு­வாகி உள்ள ‘கப­ட­தாரி’ பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதை பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி இயக்­கி­யுள்­ளார்.

இவர் ‘சைத்­தான்’, ‘சத்யா’, படங்­க­ளின் மூலம் கோடம்­பாக்­கத்­தின் கவ­னத்தை ஈர்த்­த­வர்.

“திகில் கதை­யைக் கொண்டு ரசி­கர்­க­ளுக்கு மன­நி­றைவை ஏற்­ப­டுத்­து­வது அவ்­வ­ளவு சுப­ல­ப­மல்ல. இதை உணர்ந்­தி­ருப்­ப­தால் கதை­யில் மிகுந்த கவ­னம் செலுத்தி இருக்­கி­றோம்.

“கன்­ன­டத்­தில் வெளி­யாகி வெற்றி பெற்ற படத்­தைத் தழுவி ‘கப­ட­தாரி’ உரு­வாகி உள்­ளது. மூலக்­க­தையே பிர­மா­த­மாக இருக்­கும். மேற்­கொண்டு பல விவ­ரங்­க­ளைச் சேக­ரித்து மெரு­கேற்றி உள்­ளோம்.

“பொது­வாக இது­போன்ற படங்­களில் ஒளிப்­ப­தி­வில் பய­மு­றுத்தி, பின்­னணி இசை­யில் திடுக்­கிட வைப்­ப­து­தான் திரை­யு­லக பாணி. இந்­தப் படத்­தில் யார் கப­ட­தாரி எனும் உண்­மை­யும் சேர்த்து கதை சொல்­லப்­ப­டு­வ­தால் பர­ப­ரப்­பாக இருக்­கும்,” என்­கி­றார் பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி.

நாற்பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடந்த ஒரு குற்­றம் தொடர்­பில் உண்­மை­யைத் தேடிச் செல்­லும் பய­ணம்­தான் ‘கப­ட­தாரி’யாம். அந்த உண்­மைக் குற்­ற­வாளி இப்­போது எப்­படி இருப்­பான், என்ன மாதி­ரி­யான தேடு­தல் நடக்­கிறது, நீள்­கிறது என்று காட்­சிக்கு காட்சி திடீர் திருப்­பங்­களும் திடுக்­கி­டல்­களும் இருக்­கு­மாம். இந்­தப் படத்­துக்­காக சிபி­ராஜ் கொடுத்­துள்ள உழைப்­பும் அர்ப்­ப­ணிப்­பும் பிர­மிக்க வைப்­ப­தாக பிர­தீப் பாராட்­டு­கி­றார்.

“படத்­தின் தரத்­தில் கொஞ்­சம்­கூட குறை வைக்­கக்­கூ­டாது என்­பது என் ஆசை. அதற்­காக சிபி­ராஜ் கொடுத்த ஒத்­து­ழைப்பு குறித்து மிகப்­பெ­ரி­யது. அவ­ரது நடிப்பு முன்­னேறி இருப்­பதை அண்­மைய படங்­கள் தெளி­வா­கக் காட்டு­ கின்­றன. இந்­தப் படத்­தில் அவர் வெளிப்­ப­டுத்தி உள்ள உடல்­மொழியை அவ­ரது மற்ற படங்­களில் பார்த்­தி­ருக்க மாட்­டீர்­கள்.

“ஏற்­கெ­னவே அவரை இயக்­கி­யி­ருப்­ப­தால் இம்­முறை இணைந்து பணி­யாற்­று­வது எளி­தாக இருந்­தது. ஆக்­‌ஷன் காட்­சி­களில் வழக்­கம்­போல் வேகம் காட்டி இருக்­கி­றார்,” என்­கி­றார் பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி.

படத்­தின் நாயகி நந்­திதா ஸ்வே­தா­வுக்கு முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ர­மாம். கதைப்­படி அவ­ருக்­கும் சிபிக்­கும் இடையே காதல் காட்­சி­கள் என்று எது­வும் இல்­லை­யாம்.

“பர­ப­ரப்­பான திகில் கதை­யில் காதல், ஊடல்­க­ளுக்­கெல்­லாம் அவ­சி­ய­மின்றி போய்­விட்­டது. கதைக்­குத் தேவை­யான போக்­கி­லேயே காட்­சி­க­ளை­யும் அமைத்­துள்­ளோம். ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் மன­தில் பதி­கிற இடங்­க­ளாக வந்து போவார்­கள்.

“அப்­ப­டித்­தான் நந்­தி­தா­வும் இந்­தக் கதை­யில் தனது பங்­க­ளிப்­பைச் செய்­துள்­ளார். எனி­னும் அவ­ரது நடிப்­பும் ஈடு­பா­டும் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வால் பாராட்­டப்­பட்­டது. இந்­தப் படத்­தில் நடித்த பலர் புது­மு­கங்­கள். நிறைய பேர் அப்­ப­டித் தேவைப்­பட்­ட­னர். நாசர், ஜெயப்­பி­ர­காஷ், ஜே.எஸ்.கே. போன்ற அனு­பவ நடி­கர்­க­ளு­டன் புது­மு­கங்­களும் தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பணியை சிறப்­பா­கச் செய்­துள்­ள­னர்.

“அதே­போல் ஒளிப்­ப­தி­வும் பாடல்­களும் இப்­ப­டத்­தின் வெற்­றிக்கு முக்­கி­யப் பங்­காற்­றும் அம்­சங்­க­ளாக இருக்­கும்,” என்கிறார் பிரதீப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!