கபடி வீரர் ஆகிறார் துருவ்

விக்­ரம் மகன் துருவ்­வும் தனது அடுத்த படத்­துக்­குத் தயா­ராகி உள்­ளார். இம்­முறை மாரி செல்­வ­ராஜ் இயக்­கம், பா. ரஞ்­சித் தயா­ரிப்பு என பல­மான கூட்­ட­ணி­யு­டன் அவர் கள­மி­றங்­கு­கி­றார்.

இதில் அவ­ருக்கு கபடி வீரர் வேட­மாம். தனது கதா­பாத்­தி­ரத்­துக்­காக இப்­போதே கபடி பயிற்சியைத் தொடங்கி உள்­ளார்.

“இது ஒரு விளை­யாட்டு வீர­னின் கதையை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படம். சிறு வயது முதல் சாதிக்­கத் துடிக்­கும் ஒரு கபடி வீரன் எத்­த­கைய சோத­னை­க­ளை­யும் வேத­னை­க­ளை­யும் மன­தில் சுமந்து இறு­தி­யில் தாய்­நாட்­டுக்­காக சாதித்­துக் காட்­டு­கி­றான் என்­பதை விரி­வாக அல­சும் வகை­யில் காட்­சிப்­ப­டுத்த உள்­ளோம்,” என்­கி­றார் மாரி செல்­வ­ராஜ்.

தமிழ் சினி­மா­வில் இது­வரை இப்­ப­டிப்­பட்ட விளை­யாட்டு சார்ந்த படைப்பு வெளி­வந்­த­தில்லை என்று சொல்­லும் வகை­யில் இந்­தப் படம் இருக்­கு­மாம். ஏதோ ஒரு சிறிய ஊரில் பிறக்­கும் கதா­நா­ய­கன் தனது திற­மை­யால் தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் சாதித்து அதைத் தொடர்ந்து ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் நாட்­டுக்­காக தங்­கப் பதக்­கம் பெறு­வ­து­தான் படத்­தின் கதை.

விளை­யாட்டு வீரர் கதா­பாத்­தி­ரம் என்­ப­தால் நிறைய மெனக்­கெட வேண்­டி­யி­ருக்­கும் என்று துருவ்­வி­டம் தொடக்­கத்­தி­லேயே கூறி­விட்­டா­ராம் மாரி. மேலும் இப்­போதே கபடி பயிற்­சி­யைத் தொடங்கிவிட வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், இந்­தப் படத்­துக்­காக உற்­சா­கத்­து­டன் தயா­ராகி வரு­வ­தாக துருவ் தரப்­பும் தெரி­வித்­துள்­ளது.

“நம் இலக்கை அடை­வ­தற்­கான முயற்­சி­யில் கலை மீதான அர்ப்­ப­ணிப்­பு­தான் மிக முக்­கி­யம் என்று என் தந்தை சொல்­லி­யி­ருக்­கி­றார். இந்த அர்ப்­ப­ணிப்பு உடைய இரு­வ­ரு­டன் இணைந்து பணி­யாற்­று­வது மகிழ்ச்சி தரு­கிறது,” என்று துருவ் விக்­ரம் தமது சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

பா.ரஞ்­சித் திரைப்­ப­டங்­களை இயக்­கு­வ­து­டன் தனது நீலம் நிறு­வ­னம் மூலம் தயா­ரிக்­க­வும் செய்­கி­றார். இந்­நி­லை­யில் அவர் வேறு சில நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து புதி­தாக ஐந்து படங்­க­ளைத் தயா­ரிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். அவற்­றுள் இரண்டு படங்­க­ளுக்­கான பணி­கள் தொடங்­கி­விட்­டன.

இந்­நி­லை­யில், தனது முன்­னாள் உதவி இயக்­கு­ந­ரான மாரி செல்­வ­ராஜை வைத்து துருவ் நாய­க­னாக நடிக்­கும் படத்தை தயா­ரிக்­கி­றார் ரஞ்­சித். இது­கு­றித்து அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

‘பரி­யே­றும் பெரு­மாள்’, ‘இரண்­டாம் உல­கப் போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்­களை இயக்­கி­யுள்ள மாரி செல்­வ­ராஜ், தற்­போது தனுஷை வைத்து ‘கர்­ணன்’ படத்தை இயக்கி முடித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து துருவ் விக்­ர­முக்கு ஏற்ப இள­மைத் துள்­ள­லும் சமு­தா­யத்­துக்கு ஏற்ற கருத்­து­க­ளு­ட­னும் கூடிய கதையை அவர் அமைத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே துருவ்­வை­யும் கவு­தம் கார்த்­திக்­கை­யும் வைத்து படம் எடுக்க பிர­பல இயக்­கு­நர் ஒரு­வர் முயற்சி மேற்­கொண்டு வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த இரு வாரிசு நடி­கர்­க­ளை­யும் ‘அக்னி நட்­சத்­தி­ரம்’ பாணி­யில் உள்ள கதை­யில் நடிக்கவைக்க அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

இது­கு­றித்து இரு­தரப்­பி­ன­ரி­ட­மும் அவர் பேச்­சு­வார்த்தை நடத்தி உள்­ள­தா­க­வும் இன்­னும் சாத­க­மான பதில் கிடைக்­க­வில்லை என்­றும் ஒரு தக­வல் உலா வரு­கிறது.

துருவ் இப்­போ­தைக்கு தனி நாய­க­னாக நடிப்­ப­தில் மட்­டுமே விருப்­பம் கொண்­டுள்­ளா­­ராம்.

ஆனால் கவு­தம் கார்த்­திக் இரு நாய­கர்­கள் உள்ள படத்­தில் நடிப்­ப­தில் தமக்கு எந்­த­வி­த தயக்கமும் இல்லை என்று ஏற்­கெ­னவே கூறி­யுள்­ளார்.

இரண்டு வெற்­றிப் படங்­க­ளி­லா­வது நடித்த பிற­கு­தான் இது குறித்து துருவ் முடி­வெ­டுப்­பார் எனத் தக­வல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!