மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, நல்லாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமுதாய அக்கறையோடு உருவாகும் படைப்பு என்றாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார். “கதைப்படி நல்லாண்டி ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அதேசமயம் விஜய் சேதுபதி தனது பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்,” என்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
சந்தானம் படங்கள் அடுத்தடுத்து வெளியீடு‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘சபாபதி’, ‘கொரோனா குமார்’ என அடுத்தடுத்து புதுப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம்.
இந்நிலையில் அவர் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ ஆகிய இரு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. ‘சர்வர் சுந்தரம்’ படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. எனினும் ஆனந்த் பால்கி இயக்கிய இப்படம் பல்வேறு சிக்கல்களால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை.
இந்நிலையில் அனைத்துப் பிரச்சினைகளையும் கடந்து இப்படம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் ‘கொரோனா குமார்’ படத்திலும் சந்தானத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
‘சபாபதி’ படத்தில் திக்குவாய் பிரச்சினை உள்ள இளையராக நடிக்கிறார் சந்தானம். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியீடு காண உள்ளது.
‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட உள்ளனராம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தானம் ஜோடியாக அனேகா சோடி, சஷ்டிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருப்பதால் சந்தானம் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்.