தனுஷ் படம் இணையத்தில் வெளியீடு

தனுஷ் படம் இணையத்தில் வெளியீடு

1 mins read
a8b2cd60-7f76-43d0-852b-70977338bdc0
-

'ஜெகமே தந்­தி­ரம்' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­வது உறு­தி­யாகி உள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக இப்­ப­டம் திரை­யரங்­கில் வெளி­யா­க­வும் வாய்ப்­புள்­ள­தாக பல தக­வல்­கள் மாறி மாறி வெளி­வந்­தன.

இந்­நி­லை­யில் பிர­பல தனி­யார் நிறு­வ­னம் ஒன்று இப்­ப­டத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வ­தற்­கான உரி­மை­யைப் பெற்­றுள்­ளது. மொத்­தம் 45 கோடி ரூபாய்க்கு படம் விலை போயி­ருக்­கி­ற­தாம்.

அநே­க­மாக மார்ச் மத்­தி­யில் இப்­ப­டம் வெளி­யா­கக்­கூ­டும். இறுதி வரை திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள், தனி­யார் இணைய வெளி­யீட்டு நிறு­வ­னங்­கள் என இரு ­த­ரப்­பி­ட­மும் விடா­மல் பேச்­சு­வார்த்தை நடத்தி வந்­துள்­ளது 'ஜெகமே தந்­தி­ரம்' படத் தயா­ரிப்பு தரப்பு.

யாரை­யும் பகைத்­துக்கொள்­ளா­மல் மிக சாமர்த்­தி­ய­மாக பேச்­சு­வார்த்­தையை நீட்­டித்து, லாபம் தரும் தொகை­யைக் குறிப்­பிட்­ட­தும் அந்த தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் படத்தை விற்­றுள்­ளது தயா­ரிப்­புத் தரப்பு.