‘மாஸ்டர்’ படத்தால் சர்ச்சை

‘மாஸ்­டர்’ படம் திரை­ய­ரங்­கு­க­ளுக்கு மறு­வாழ்வு கொடுத்­தி­ருப்­ப­தாக பல்­வேறு தரப்­பி­ன­ரும் கூறி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், விஜய்யைத் தெய்­வத்­துக்கு இணை­யா­கப் போற்­றிய திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­களே இப்­போது அவ­ருக்கு எதி­ராக வரிந்து கட்­டு­வ­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

நெருக்­க­மாக இருந்­த­வர்­கள் இடையே திடீர் மனக்­க­சப்பு ஏற்­ப­ட­வும் ‘மாஸ்­டர்’ படம்­தான் கார­ண­மாகி உள்­ளது. இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் விஜய்­யின் உற­வி­னர் என்று கூறப்­படும் லலித்.

விஜய் சொன்ன ஒரே கார­ணத்­துக்­காக நல்ல தொகை கொடுப்­ப­தாக இணைய வெளி­யீட்டு நிறு­வ­னங்­கள் தன்னை மொய்த்­த­போ­தும் கூட திரை­ய­ரங்­கு­க­ளில்­தான் ‘மாஸ்­டர்’ வெளி­யா­கும் என திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் லலித்.

சுமார் எட்டு மாத காத்­தி­ருப்­புக்­குப் பிறகே படம் வெளி­யீடு கண்­டது. எனி­னும் வசூ­லில் குறை வைக்­க­வில்லை ‘மாஸ்­டர்’.

திரை­ய­ரங்­கு­களில் ஐம்­பது விழுக்­காடு இருக்­கை­களை மட்­டுமே நிரப்ப முடி­யும் என்ற கட்­டுப்­பாட்­டுக்கு மத்­தி­யி­லும் வசூலை அள்­ளிக் கொடுத்­துள்­ளது. மொத்த வசூல் 100 கோடி, 200 கோடி என்­றெல்­லாம் சமூக வலைத்­த­ளங்­களில் தொடர்ந்து தக­வல்­கள் வெளி­யா­கின்­றன.

கடந்த 29ஆம் தேதி நில­வ­ரப்­படி ‘மாஸ்ட’ரின் இந்­தி­யத் திரை­ய­ரங்க வசூல் சுமார் 110 கோடி ரூபாய் என்­றும் இதில் தயா­ரிப்­புத் தரப்­புக்கு மட்­டும் சுமார் 60 கோடி ரூபாய் கிடைத்­துள்­ளது என்­றும் மூத்த செய்­தி­யா­ளர் பிஸ்மி தெரிவிக்­கி­றார்.

இதை­ய­டுத்து மேலும் பத்து கோடி ரூபாய் வரை அவ­ருக்­குக் கிடைக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் தயா­ரிப்­புத் தரப்பு பெரும் ஏமாற்­றத்­தில் இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

“இந்த வருத்­தத்­தின் பின்­ன­ணி­யில் தகுந்த கார­ணம் உள்­ளது. ‘மாஸ்­டர்’ படம் வெளி­யா­ன­தும் திரை­ய­ரங்­கு­களில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது. டிக்­கெட் விலை கடு­மை­யாக உயர்ந்­தி­ருப்­ப­தா­க­வும் கூறப்­பட்­டது.

“அப்­ப­டி­யா­னால் தயா­ரிப்­புத் தரப்­புக்கு உண்­மை­யில் இதை­விட அதிக தொகை கிடைத்­தி­ருக்க வேண்­டும். ஆனால் திரை­ய­ரங்­குகள் தரப்­பில் உண்­மை­யான வசூல் கணக்கு காண்­பிக்­கப்­ப­ட­வில்லை என்கிறார்­கள். இது­தான் தயா­ரிப்­பா­ளர் லலித் ஏமாற்­றம் அடை­யக் கார­ணம்.

“இந்த நேரத்­தில்­தான் பிர­பல தனி­யார் நிறு­வ­னம் அவரை அணுகி ‘மாஸ்­டர்’ படத்தை இணை­யத்­தி­லும் உட­ன­டி­யாக வெளி­யிட வேண்­டும் என பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. விஜய் ரசி­கர்­கள் வெளி­யீடு கண்ட இரு வாரங்­க­ளு­க்­குள் நிச்­ச­யம் படத்­தைப் பார்த்­தி­ருப்­பார்­கள் என்­பதை உணர்ந்­தி­ருந்­தும் அத்­த­னி­யார் நிறு­வ­னம் கணி­ச­மான தொகையைக் குறிப்­பிட்­டுள்­ளது.

“இதை தயா­ரிப்­பா­ளர் லலித் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை. அவ­ருக்கு இருந்த மன­நி­லை­யில் உட­ன­டி­யாக ஒப்­புக்­கொண்­டார். ஆனால் அவ­ரது முடிவு திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­க­ளை­யும் விநி­யோ­கிப்பாளர்­க­ளை­யும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி இருக்­கிறது,” என்­கி­றார் மூத்த செய்­தி­யா­ளர் ஆர்.எஸ்.அந்­த­ணன்.

அக்­கு­றிப்­பிட்ட தனி­யார் நிறு­வ­னம் ‘ஓடிடி’ வெளி­யீட்­டிற்­காக 15 கோடி ரூபாய் தந்­துள்­ள­தாம். ஒரு திரைப்­ப­டம் திரை­ய­ரங்­கில் வெளி­யாகி ஒரு மாதத்­துக்­குப் பிறகே இணை­யத்­தில் வெளி­யிட வேண்­டும் என கோடம்­பாக்­கத்­தில் விதி­முறை உள்­ளது.

ஆனால் அதை மீறும் வண்­ணம் படம் வெளி­யான இரு வாரங்­களில், கடந்த ஜன­வரி 29ஆம் தேதி ஓடி­டி­யில் வெளி­யாகி உள்­ளது ‘மாஸ்­டர்’. இது தொடர்­பில் தயா­ரிப்­பா­ளர் லலித்­துக்கு ஆத­ர­வாக சிலர் பேசி வந்­தா­லும் அவ­ருக்கு அடுத்­த­டுத்து புதுச்­சிக்­கல்­கள் முளைக்­கும் என்­பதை இன்­னொரு தரப்பு சுட்­டிக் காட்­டு­கிறது.

அவர் தற்­போது விக்­ரம் நடிக்­கும் ‘கோப்ரா’, விஜய் சேது­பதி நடிக்­கும் ‘காத்து வாக்­குல ரெண்டு காதல்’ ஆகிய படங்­க­ளை­யும் தயா­ரிக்­கி­றார். எனவே இப்­ப­டங்­கள் வெளி­யீடு காணும் சம­யத்­தில் சில திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் போர்க்­கொடி உயர்த்­த­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

“இப்­ப­டத்­தைத் திரை­ய­ரங்­கில் வெளி­யிட வாய்ப்­பு கிடைக்­காத பகு­தி­களில் இருக்­கும் விஜய் ரசி­கர்­களும் ஓடிடி மூலம் பார்த்து ரசிக்க முடியும்,” என லோகேஷ் கன­க­ராஜ் கூறி­யுள்­ளார்.

இதே­போல் உல­கெங்­கும் உள்ள ரசி­கர்­கள் இப்­ப­டத்­தைப் பார்க்க முடி­யும் என்­பது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக விஜய்­யும் கூறி­யுள்­ளார்.

ஆனால் அடுத்­த­டுத்து அரங்­கே­றப்­போ­கும் காட்­சி­கள் பர­ப­ரப்­பா­க­வும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தும் விதத்­தி­லும் இருக்­கும் என்று கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள்.

இதற்­கி­டையே விஜய் இல்­லா­மல் ‘மாஸ்­டர்’ இந்­த­ளவு வசூ­லைப் பெற்­றி­ருக்­காது என்று லோகேஷ் கன­க­ராஜ் தரப்பு தெரி­வித்­துள்­ளது. படம் முடிந்த கையோடு விஜய் சேது­ப­தி­யின் கதா­பாத்­தி­ரத்­துக்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவத்தைக் குறைக்க முடி­ய­வில்லை என்று அவர் விஜய்­யி­டம் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்­து­விட்­டா­ராம். விஜய் இதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லையாம்.

, :   

விஜய்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!