திகில் படமாக உருவாகும் ‘இரண்டாம் திட்டம்’

ஐஸ்­வர்யா ராஜேஷ் நடித்­துள்ள ‘இரண்­டாம் திட்­டம்’ படப்­பி­டிப்பு முடி­வுக்கு வந்­தி­ருக்­கிறது. கடைசி நாளன்று பூசை போட்டு பூச­ணிக்­காய் உடைத்­துள்­ள­னர்.

மிகப்­பெ­ரிய கேக் கொண்டு வரப்­பட்டு ஐஸ்­வர்யா ராஜேஷ் உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் அதை வெட்டி மகி­ழும் காட்­சி­கள் சமூக வலைத்­தளங்­களில் புகைப்­ப­டங்­க­ளாக வலம் வரு­கின்­றன.

இப்­ப­டத்தை விக்­னேஷ் இயக்­கி ­உள்­ளார். இவர் குறும்­ப­டங்­கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்­களின் கவ­னத்தை ஈர்த்­த­வர்.

“விக்­னேஷ் கதையை விவ­ரித்த அடுத்த கணமே நடிக்க ஒப்­புக்­கொண்­டேன். கைரே­கை­கள், புல­னாய்வு விவ­ரங்­கள் அடங்­கிய பலகை, பூதக்­கண்­ணாடி, குற்ற வழக்­கு­க­ளின் கோப்­பு­கள், துப்­பாக்­கி­கள் உள்­ளிட்ட பல பொருட்­கள் படத்­தின் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் இடம்­பெ­று­வ­தால் விறு­வி­றுப்­பும் திகி­லும் நிறைந்­தி­ருக்­கும்.

“படத்­தின் வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன். கொரோனா விவ­கா­ரத்­தால் படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்ட கையோடு சரி­யா­கத் திட்­ட­மிட்டு படத்தை முடித்­தி­ருக்­கி­றார் இயக்­கு­நர். அதற்­காக அவ­ரைப் பாராட்ட வேண்­டும்,” என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!