இணையக் குற்றங்களை அலசும் ‘சக்ரா’

விஷால் நடிக்­கும் ‘சக்ரா’ படத்­தின் வெளி­யீட்­டுத் தேதி அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது. இத­னால் ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.

இயக்­கு­நர் எழி­லி­டம் உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றிய எம்.எஸ். ஆனந்­தன் இயக்­கி­யுள்ள படம் இது.

“இணை­யக் குற்­றங்­கள் (சைபர் கிரைம்) உச்­ச­மாக இருக்­கும் கால­கட்­டம் இது. நமக்கு எதிரே வந்து நிற்­கா­மல் வேறெங்கோ இருந்­த­படி ஒரு கூட்­டம் செயல்­ப­டு­கிறது.

“ஒரு வீட்­டில் உள்ள பொருட்­கள் திடீ­ரென திருட்டு போகின்­றன. அது­கு­றித்து விசா­ரித்­து­வ­ரும் போலி­சார் திருட்­டுக்­கான பின்­னணி குறித்து சில விஷ­யங்­க­ளைத் தெரிந்து கொள்­ளும்­போது அதிர்ச்சி அடை­கி­றார்­கள். இதை­ய­டுத்து ராணுவ வீரர்­க­ளைக் கொண்ட விஷா­லின் வீட்­டி­லும் சிலர் கை வைக்­கி­றார்­கள்.

“அவ­ரது தந்தை பெற்ற வீர­தீரச் செய­லுக்­கான இந்­திய அர­சின் சக்ரா விரு­துக்­கு­ரிய தங்­கப்­ப­தக்­க­மும் கள­வா­டப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து அதைக் கண்­டு­பி­டித்து மீட்க களம் இறங்­கு­கி­றார் விஷால். அதன் பின்­னர் வரக்­கூ­டிய நிமி­டங்­களை உங்­க­ளால் தவ­ற­வி­டவே முடி­யாது,” என்­கி­றார் இயக்­கு­நர் ஆனந்­தன்.

நம்மை அறி­யா­மல் நாம் கள­வா­டப்­படும் விதம், அதற்­கா­கத் தீட்­டப்­படும் திட்­டங்­கள், அவற்­றி­லி­ருந்து தப்­பிக்க செய்­ய­வேண்­டிய விஷ­யங்­கள் என ­மொத்த பட­மும் பர­ப­ரப்­பாக நக­ரும் என இப்­போதே உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் இவர்.

‘சக்ரா’வின் தயா­ரிப்­பா­ள­ரும் விஷால்­தான். ஒரு வரி­யில் கதையை விவ­ரித்­த­போதே அதன் வீச்­சும் காட்சி அமைப்­பு­களும் எப்­படி இருக்­கும் என்­பதை அவர் புரிந்துகொண்­டா­ராம்.

“என்­ன­தான் ஒரு படத்­துக்­கான கதை­யும் கதா­பாத்­தி­ரங்­களும் மிகச்­சி­றப்­பாக இருந்­தா­லும் அதை ரசி­கர்­க­ளி­டம் கொண்­டு­போய் சேர்ப்­பது கதா­நா­ய­கன்­தான். விஷாலைப் பொறுத்­த­வரை தனக்­கான இந்­தப் பணியை கச்­சி­த­மா­கச் செய்­யக்­

கூ­டி­ய­வர்.

“என்­னைப் பொறுத்­த­வரை அவ­ரது ஆகச்­சி­றந்த நடிப்பு ‘சக்ரா’வில்­தான் வெளிப்­பட்­டி­ருக்­கிறது. காட்­சிக்கு காட்சி நிறைந்­தி­ருக்­கும் பதற்­றம், திகைப்பு, பர­ப­ரப்பு ஆகி­ய­வற்­றுக்கு ஈடு­கொ­டுத்து நடித்­தார்.

“இணை­யக் குற்­றங்­க­ளைப் பொறுத்­த­வரை அவற்­றில் ஈடு­ப­டு­பவர்­கள் மிகத் துல்­லி­ய­மான திட்­டங்­க­ளு­டன் இயங்­கு­வார்­கள். தனி மனி­த­னாக இருந்­தா­லும் ஓர் அர­சாங்­கம் போல் செயல்­ப­டு­கி­றார்­கள்.

“தாங்­களும் ஒரு கதா­நா­ய­கன்­தான் என்­கிற மனோ­பா­வம் அவர்­களி­டம் உள்­ளது. அவர்­கள் வழி­யில் சென்­று­தான் நம்­மீது சந்­தே­கம் ஏற்­ப­டாத வகை­யில் பிடிக்க வேண்­டும்,” என்­கி­றார் ஆனந்­தன்.

‘சக்ரா’வில் விஷா­லுக்கு ஜோடி­யாக நடித்­தி­ருப்­ப­வர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப கச்­சி­த­மாக நடித்­துள்­ளா­ராம்.

“ஷ்ரத்­தா­வைப் போன்ற நாய­கி­கள் இருந்­தால் எந்­த­வொரு இயக்­கு­ந­ருக்­கும் நிச்­ச­யம் நிம்­ம­தி­யும் மன­நி­றை­வும் ஏற்­படும். அவர் தமி­ழில் மேலும் பல படங்­களில் நடிக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன்,” என்­கி­றார் ஆனந்­தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!