ஜீவா: சினிமா ஒரு ‘மேஜிக்’

‘மாஸ்­டர்’ படத்­தின் மூலம் திரை­ய­ரங்­கு­கள் மீண்­டும் களை­கட்­டத் துவங்கி இருப்­ப­தால் ‘களத்­தில் சந்­திப்­போம்’ பட வெளி­யீடு சற்று தாம­த­மாகி இருக்­கிறது.

எனி­னும் ரசி­கர்­கள் மீண்­டும் திரை­ய­ரங்­கு­களை நாடி­வ­ரு­வது உற்­சா­க­ம­ளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் அப்படத்­தின் நாய­கன் ஜீவா.

“கடந்த இரு வாரங்­க­ளுக்­கும் மேலாக ‘மாஸ்­டர்’ படத்­துக்­குக் கிடைத்த வர­வேற்பு திரை­யு­ல­கத்­தி­ன­ருக்கு மகிழ்ச்சி அளித்­துள்­ளது. படத்­தின் வசூல் சிறப்­பாக இருந்­த­தால், திரை­ய­ரங்­கு­கள் புதுப்­ப­டங்­களை வெளி­யிட அவ­ச­ரம் காட்­ட­வில்லை.

“போது­மான திரை­ய­ரங்­கு­கள் கிடைக்­கா­த­தால் நாங்­களும் படத்தை வெளி­யி­ட­வில்லை. எனி­னும் ரசி­கர்­கள் அடுத்து வரும் படங்­க­ளுக்­கும் ஆத­ரவு அளிப்­பார்­கள்,” என நம்­பு­கி­றேன் என்­கி­றார் ஜீவா.

‘நண்­பன்’, ‘என்­றென்­றும் புன்­னகை’ உள்­ளிட்ட படங்­களில் பிற நாய­கர்­க­ளு­டன் இணைந்து நடித்­துள்ள இவர், ‘களத்­தில் சந்­திப்­போம்’ படத்­தில் அருள்­நி­தி­யு­டன் கைகோத்­துள்­ளார்.

எனி­னும் இந்­தப் படத்­தில் வித்­தி­யா­ச­மான அம்­சம் என்று எது­வும் இல்­லை­யாம்.

“உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டு­மானால், ஒவ்­வொரு படத்­தி­லும் ஏதே­னும் வித்­தி­யா­ச­மா­கச் செய்­ய­வேண்­டும் என நான் விரும்­ப­வில்லை. கதைக்­குப் பொருத்­த­மான விஷ­யங்­க­ளைக் கொடுத்­தால் போதும் என்று நினைக்­கி­றேன். இலைச் சாப்­பாட்­டில் பாஸ்தா, நூடுல்ஸ் ஆகி­ய­வற்­றைப் பரி­மாற முடி­யுமா? இந்­தப் பட­மும் அப்­ப­டித்­தான்.

“நான் முன்பு நடித்த சில படங்­கள் என் மனை­விக்­குப் பிடிக்­க­வில்லை என்­பதை ஊர­டங்­கின்­போது அறிந்­தேன். நாங்­கள் இரு­வ­ரும் விரும்­பும் படங்­களை எங்­கள் மகன் ரசிப்­ப­தில்லை. எனவே, ஒரு விஷ­யத்தை திரை­யில் பார்ப்­பது என்­பது அவ­ர­வ­ரது தனிப்­பட்ட விஷ­யம் என்­றா­கி­விட்­டது.

“ஆனால், திரை­ய­ரங்க கலா­சா­ரம் என்­பது மட்­டும் ஒரு குடும்ப விவ­கா­ர­மா­கவே இன்­ற­ள­வும் நீடிக்­கிறது. அந்த உற்­சா­க­மான அனு­ப­வத்தை மீண்­டும் கொண்டு­வர வேண்­டும் மேம்­ப­டுத்த வேண்­டும் என்­பதே ‘களத்தில் சந்­திப்­போம்’ படக்­கு­ழு­வின் நோக்­கம்,” என்­கி­றார் ஜீவா.

நட்பு சம்­பந்­தப்­பட்ட கதை என்­ப­தால் அனை­வ­ரும் குடும்­பத்­து­டன் கண்டு ரசிக்க முடி­யும் என்று உத்­த­ர­வா­தம் அளிப்­ப­வர், தமிழ்த் திரை­யு­ல­கத்­துக்­கென தனிப்­பட்ட கதை சொல்­லும் பாணி இருக்­கிறது என்­கி­றார்.

தமிழ் சினி­மா­வுக்கு வட இந்­தி­யா­வில் கிடைத்து­வரும் வர­வேற்­பும் பாராட்­டும் அசா­தா­ர­ண­மா­ன­து­என்று குறிப்­பி­டு­ப­வர், ஏரா­ள­மான தென்­னிந்­திய மொழிப் படங்­கள் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்டு இந்­தி­யில் வெளி­யா­வதைச் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

“கடந்த ஆண்டு வெளி­யான ‘ஜிப்ஸி’ படத்­தில் வித்­தி­யா­ச­மான தோற்­றத்­தில் காட்சி அளித்­தேன். மேலும் அதன் ஒட்­டு­மொத்த கதைக்­க­ள­மும் வித்­தி­யா­ச­மா­னது. அதன்­பின்­னர் மற்­றொரு மாறு­பட்ட களத்­தைக் கொண்டு உரு­வா­னது ‘சீறு’.

“இப்­போது ‘களத்­தில் சந்­திப்­போம்’ வெளி­யா­கிறது. மூன்று படங்­க­ளி­லும் நான் ஒரே மாதிரி நடித்­தி­ருப்­ப­தாக சிலர் கரு­தக்­கூ­டும். எந்­த­வி­த பாகு­பா­டு­மின்றி படங்­க­ளைப் பாருங்­கள் என்­பது மட்­டுமே எனது வேண்டு­கோள். தேவை­யின்றி அதி­கம் யோசிக்க வேண்­டாம்.

“ஒரு­சி­லர் படத்­தின் வசூல் குறித்­தெல்­லாம் கேள்வி எழுப்­பு­வார்­கள். அது­கு­றித்­துக் கவ­லைப்­பட தயா­ரிப்­பா­ளர் இருக்­கும்­போது இவர்­கள் ஏன் கவ­லைப்­பட வேண்­டும்? சினிமா என்­பது ஒரு ‘மேஜிக்’. அது நமக்கு பல­ன­ளித்­ததா என்­பது மட்­டும்­தான் முக்­கி­யம். மற்­றவை குறித்து யோசிக்க வேண்­டி­ய­தில்லை.”

திரை­ய­ரங்­கு­கள், ஓடிடி தளங்­கள் தொடர்­பாக நில­வும் சர்ச்சை குறித்து ஜீவா பேச விரும்­ப­வில்லை. ஒரு நடி­க­ராக கேமரா முன் நடிப்­ப­து­தான் தமக்கு முக்­கி­ய­மா­கப் படு­கிறது என்­கி­றார்.

“எந்­தத் தளத்­தில் நமது படம் வெளி­யா­கிறது என்­பது முக்­கி­ய­மல்ல. எது­வாக இருப்­பி­னும் கேமரா முன் நின்று நடிப்­பது மாறப்­போ­வது இல்லை. எந்­தத் தளம் தேவை என்­பது ரசி­கர்­கள் முடிவு செய்­ய­வேண்­டிய விஷ­யம். திரை­ய­ரங்­கு­களில் ஒரு படம் திரை­யி­டப்­படும் காலம் இரண்டு வாரங்­க­ளாக சுருங்கி விட்­டது.

“எனவே, அடுத்த கட்­ட­மாக அவற்றை மின்­னிலக்­கத் தளங்­க­ளில்­தான் பார்க்­க­மு­டி­யும். தவிர ‘ஓடிடி’ தளங்­கள் புது­மு­கங்­க­ளுக்­கும் குறைந்த செல­வில் பட­மெ­டுப்­ப­வர்­க­ளுக்­கும் நல்ல வாய்ப்­பு­களை அளித்து வரு­கின்­றன. இதனால் பல திற­மை­சா­லி­களை அடை­யா­ளம் காண­மு­டி­கிறது,” என்று சொல்­லும் ஜீவா, அனைத்து வகை­யான படங்­க­ளி­லும் நடித்து அனைத்து வகை­யான ரசி­கர்­க­ளின் பாராட்­டு­க­ளை­யும் பெற­ வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!