காதலரைக் கைபிடிக்கிறார் 'பிகில்' நடிகை

காதலரைக் கைபிடிக்கிறார் 'பிகில்' நடிகை

1 mins read
4eae0ccc-8501-4e50-b29a-a5450bbd0858
-

'பிகில்' படத்­தில் நடித்த ரெபா மோனிகா தன் காத­லரைக் கைபிடிக்க உள்­ளார்.இதை­ய­டுத்து திரை­யு­ல­கத்­தி­ன­ரும் ரசி­கர்­களும் அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

பிப்­ர­வரி 4ஆம் தேதி தமது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டி­னார் ரெபா. இந்­நி­கழ்­வில் பலர் கலந்து கொண்­ட­னர். அப்­போது எதிர்­பா­ராத வித­மாக ரெபா­வின் நீண்­ட­நாள் நண்­ப­ரான ஜோமென் ஜோசஃப் ஒரு ரோஜாப் பூவை கொடுத்து தமது காதலை வெளிப்­ப­டுத்தினார்.

இதனால் ஆச்­ச­ரி­யத்­தில் மூழ்கிய ரெபா, பிறகு சுதா­ரித்­துக் கொண்டு அக்­கா­தலை ஏற்­றுக் கொண்­டார். ரெபா­வின் காத­லர் இப்­படி திடீ­ரென இன்ப அதிர்ச்சி கொடுப்­பார் என்­பது இவர்­க­ளின் நெருக்­க­மான நண்­பர்­க­ளுக்கே தெரி­யா­தாம்.

கொரோனா ஊர­டங்­கின்­போது ரெபா மோனிகாவை நேரில் சந்­திக்க முடி­யா­மல் தவித்த ஜோமென் தற்போது இயல்பு நிலை திரும்­பிக் கொண்­டி­ருப்­பதை அடுத்து உட­ன­டி­யாக தன் மனதில் உள்ள காதலை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.