‘மாற்ற வேண்டும் என நினைத்தேன்’

இந்­திய சினிமா ரசி­கர்­கள் எந்த மொழி­யில் நல்ல படம் வெளி­யா­னா­லும் அதை வர­வேற்­றுக் கொண்­டாடி மகிழ்­வார்­கள் என்று நடி­கர் சிம்பு கூறி­யுள்­ளார். அப்­ப­டிப்­பட்ட ஒரு தர­மான படைப்­பா­கவே ‘மாநாடு’ உரு­வா­கி­யுள்­ளது என்­றும் அவர் அண்­மைய பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிம்பு நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான ‘ஈஸ்­வ­ரன்’ படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. படத்­தின் வசூ­லும் தயா­ரிப்­புத் தரப்­புக்கு மன­ நி­றைவு அளித்­துள்­ள­தாம். இதை­ய­டுத்து அவர் நடித்து வரும் மற்ற படங்­கள் மீதான எதிர்­பார்ப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.

வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் சிம்பு நடிக்­கும் ‘மாநாடு’ மிக விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது. இந்­நி­லை­யில் வழக்­க­மான ஒரு கதை­யாக அல்­லா­மல், வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­து­டன் இப்­ப­டம் உரு­வாகி உள்­ள­தாக சிம்பு தெரி­வித்­துள்­ளார்.

“எனக்கு கட­வுள் நம்­பிக்கை அதி­கம். சிவ­பெ­ரு­மானை ரொம்­பப் பிடிக்­கும். இந்­தக் கட­வுள், அந்­தக் கட­வுள் என்று இல்­லா­மல் அனைத்­தை­யும் ஒன்­றா­கப் பார்க்­கி­றேன். எனக்கு மத நம்­பிக்கை பெரி­தாக இல்லை.

“ஆனால் குறிப்­பிட்ட ஒரு மதத்­தின் மீது மட்­டும் சில­ருக்கு தவ­றான பார்வை இருக்­கிறது. அதை மாற்ற ஏதா­வது செய்ய வேண்­டும் என்று நினைத்­துக் கொண்­டி­ருந்­தேன். அது குறித்­துப் பேசு­வ­தற்கு ‘மாநாடு’ படத்­தின் கதை சரி­யான கள­மாக இருந்­தது. அதற்­கா­கவே இப்­ப­டத்தை ஒப்­புக் கொண்­டேன்,” என்று சிம்பு கூறி­யுள்­ளார்.

வெங்­கட் பிரபு, சுசீந்­தி­ரன் என்று சிம்­பு­வு­டன் அண்­மைக் காலங்­களில் நெருக்­க­மாக உள்ள இயக்­கு­நர்­கள் பல­ரும் அவ­ரது உழைப்­பை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் பாராட்டி வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­துக்­காக ஒரு படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளார் சிம்பு. அவ­ரது தந்தை டி.ராஜேந்­தர் தலை­மை­யி­லான அணி­யி­னர் புதி­தா­கத் தயா­ரிப்­பா­ளர் சங்­கம் ஒன்­றைத் தொடங்கி உள்­ள­னர்.

‘தமிழ்­நாடு திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம்’ என்ற பெய­ரில் புதிய சங்­கம் பதிவு செய்­யப்­பட்டு நிர்­ வா­கி­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர். எனி­னும் அண்­மை­யில் தலை­வர் பத­வி­யில் இருந்து டி.ஆர் வில­கிக் கொள்­ளவே அவ­ரது மனைவி உஷா ராஜேந்­தர் தலை­வ­ராக இருந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் இந்­தச் சங்­கத்­துக்கு நிதி திரட்­டும் பொருட்டு சிம்பு ஒரு படத்­தில் நடிக்க உள்­ளார். இந்­தப் படத்­தின் மூலம் கிடைக்­கும் நிதி­யைக் கொண்டு நலி­வ­டைந்த தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மருத்­துவ உதவி, திரு­மண உத­வித் தொகை, ஆயுள் காப்­பீடு, மருத்­து­வக் காப்­பீடு உள்­ளிட்ட நலத்­திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­படும் என சங்க நிர்­வா­கி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இந்தப் படத்தை வசனகர்த்தா ஞானகிரி இயக்குகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!