ராசியான நடிகை ராஷ்மிகா

ராசியான நடிகை ராஷ்மிகா

3 mins read
75cf7d9b-3c2f-4e8d-a604-92a17d712a3f
-

கர்­நா­ட­காவை சேர்ந்த ராஷ்­மிகா மந்­தனா கன்­னட பட­மான 'கிரிக்­பார்ட்டி' மூலம் திரை­யு­ல­கில் நடி­கை­யாக அறி­மு­க­மா­னார். இவர் தற்­பொ­ழுது விஜய்­யின் 65வது படத்­தில் நாய­கி­யாக ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார்.

'கீதா கோவிந்­தம்' திரைப்­ப­டம் மூலம் டோலி­வுட்­டில் கதா­நா­ய­கி­யாக அறி­மு­க­மா­னார். இவர் தன்­னு­டைய முதல் படத்­தி­லேயே தனக்­கென தனி ரசி­கர் பட்­டா­ளத்தை உரு­வாக்­கி­னார்.

பின்பு 'டியர் காம்­ரேட்' படத்­தில் நடித்து பாராட்­டைப் பெற்­றார். இவர் நடித்த தெலுங்கு படங்­கள் தொடர்ச்­சி­யாக வெற்றி பெற்­ற­தைத் தொடர்ந்து தயா­ரிப்­பா­ளர்­க­ளின் பார்வை இவர் பக்­கம் திரும்­பி­யது. ராசி­யான நடிகை என்ற பெய­ரை­யும் பெற்­றார்.

24 வய­தான ராஷ்­மிகா மந்­தனா பாலி­வுட்­டில் சித்­தார்த் மல்­ஹோத்­ரா­வு­டன் இணைந்து 'மிஷன் மஜ்னு' படத்­தில் நடித்­துள்­ளார்.

அடுத்து, இந்தி இயக்­கு­நர் விகாஸ் இயக்­கும் 'டெட்லி' படத்­தில் அமி­தாப் பச்­சன் நடிக்­கி­றார். அந்­தப் படத்­தி­லும் ராஷ்­மிகா நடிக்க இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தொடர்ந்து அடர்ந்த காட்­டில் தெலுங்­குப் பட­மான 'புஷ்பா' படப்­பி­டிப்­பில் அல்லு அர்­ஜு­னு­டன் இணைந்து நடித்­துக்­கொண்டு இருக்­கி­றார் ராஷ்­மிகா.

தற்­போது பாக்­ய­ராஜ் கண்­ணன் இயக்­கத்­தில் கார்த்தி நடித்­துள்ள 'சுல்­தான்' படம் மூலம் தமிழில் அறி­மு­க­மாகி உள்­ளார்.

இந்­தப் படத்­தின் பெயரை படக்­கு­ழு­வி­னர் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விப்­ப­தற்கு முன்­பாக ராஷ்­மிகா சமூக வலைத்­த­ளங்­களில் படத்­தின் பெயரை குறிப்­பிட்­டு­விட்­டார்.

அத­னால் படக்­குழு அவர் மீது செம கடுப்­பில் இருந்­த­தாக கூறப்­பட்­டது.

கிஷோர் திரு­மலை இயக்­கிய 'ஆதல்லு மீகு ஜோஹர்லு' என்ற படத்­தில் சர்­வா­னந்­து­டன் ராஷ்­மிகா அட்­ட­கா­ச­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். திருப்­ப­தி­யில் தசரா நிகழ்ச்­சியை மைய­மாக வைத்து இந்­தக் குடும்ப பொழு­து­போக்கு திரைப்­ப­டம் எடுக்­கப்­ப­டு­கிறது.

ராஸ்­மி­கா­வின் குறும்­புத்­த­னம் அனை­வ­ருக்­கும் தெரிந்த விஷ­யம். "கார்த்­திக்கு செய்­ததுபோல

சித்­தார்த் மல்­ஹோத்­ரா­வுக்­கும் செய்­து­வி­டா­தீர்­கள். உங்­களை நம்பி படம் எடுக்­கி­றார்­கள். பாலி­வுட்­டி­லா­வது கொஞ்­சம் அமை­தி­யாக இருக்க முயற்­சிக்­க­வும்," என்று ரசி­கர்­கள் பதிவிட்டுள்ளனர்.

பல்­வேறு மொழிப் படங்­களில் மும்­மு­ர­மாக நடித்து வரும் ராஷ்­மிகா, ஏரா­ள­மான நிகழ்சி­களில் தனக்குப் பிடித்த நடி­கர் விஜய் என்­றும் அவ­ருக்கு ஜோடி­யாக நடிக்க வேண்­டும் என­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

'மாஸ்­டர்' படத்­தில் விஜய்க்கு ஜோடி­யாக நடிக்க தீவிர முயற்சி எடுத்­தார். கடைசி நேரத்­தில் அந்த வாய்ப்பு மாள­விகா மோக­னன் வசம் சென்­றது.

இந்­நி­லை­யில், தற்­போது நெல்­சன் இயக்க உள்ள 'தள­பதி 65' படத்­தில் விஜய்க்கு ஜோடி­யாக நடிக்க ராஷ்­மிகா ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இந்தப் படத்­தில் நாய­கி­யாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்­ப­தாக அண்­மை­யில் செய்­தி­கள் வெளி­வந்­தன. ஆனால் தற்­போது ராஷ்­மி­காவை படக்­கு­ழு­வி­னர் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

விஜய்­யின் 'தள­பதி 65' படத்­தில் நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக, நடிகை ராஷ்­மிகா, ஒரு தெலுங்கு படத்­தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகக் கூறப் படுகிறது. அவர் கைவிட்ட வாய்ப்பை பூஜா ஹெக்டே கைப்­பற்றி விட்­ட­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

கன்­னட பேர­ழ­கி­யான ராஷ்­மிகா "காதல்-நகைச்­சு­வைக் கதை­கள் தனக்­குப் பிடிக்­கும் என்­றும் விடு­முறை நாட்­களில் தூங்­கு­வ­தையே தனது பொழு­து­போக்­காக வைத்து இருப்­ப­தா­க­வும் கூறியுள் ளார். மயக்­கும் புன்­ன­கைக்கு உரி­ய­வரான ராஷ்­மிகா மந்தனா விரைவில் டோலிவுட், கோலிவுட்டில் முன்னணி நடிகையாவார் என்று கூறப்படுகிறது.