தந்தை, மகன் உறவை மையப்படுத்தி உருவாகிறது 'ஏலே'

தந்தை, மகன் உறவை மையப்படுத்தி உருவாகிறது 'ஏலே'

2 mins read
abbd0f3c-556c-46db-8e9c-34d25224343a
'ஏலே' படத்தின் ஒரு காட்சியில் சமுத்திரக்கனி, மணிகண்டன். -

`சில்­லுக் கருப்­பட்டி' படத்தை அடுத்து 'ஏலே' படத்தை இயக்­கி­யுள்­ளார் ஹலிதா ஷமீம். இது தந்­தைக்­கும் மக­னுக்­கும் இடை­யே­யான உறவை மையப்­ப­டுத்தி உரு­வாகி உள்ள படைப்­பாம்.

'ஏலே' தான் இவர் முதன்­மு­த­லாக எழு­திய கதை­யாம். `பருத்­தி­வீ­ரன்', 'சுப்­ர­ம­ணி­ய­பு­ரம்', 'காதல்' உள்­ளிட்ட படங்­க­ளைப் பார்த்­த­தால் ஏற்­பட்ட தாக்­கம் இந்­தக் கதையை எழு­தத் தூண்­டி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தக் கதை­யைத்­தான் முதல் திரைப்­ப­ட­மாக எடுக்க வேண்­டும் என்று விரும்­பி­னேன். ஆனால் அது சாத்­தி­ய­மா­க­வில்லை. `பூவ­ர­சம் பீப்பி' படத்துக்குப் பிறகு 'சில்­லுக் கருப்­பட்டி'யை இயக்­கி­னேன்.

"இந்த நிலை­யில் இயக்­கு­நர்­கள் புஷ்­கர், காயத்ரி இரு­வ­ரும் 'ஏலே' படத்தை தாங்­களே தயா­ரிக்க முன்­வந்­த­னர். நான் அவர்­க­ளி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய போது­தான் 'ஏலே' கதையை எழு­தி­ இருந்தேன்.

"எனவே அது எப்­ப­டிப்­பட்ட கதை என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும். மேலும் இந்­தக் கதை அவர்­க­ளுக்கு ரொம்­பப் பிடிக்­கும். அவர்­களே தயா­ரிக்­கப்போவ­தா­கச் சொன்­ன­தும் எந்­தத் தயக்­க­மும் இன்றி ஒப்­புக்­கொண்­டேன்.

"எனக்கு கிடைத்த முதல் சுதந்­தி­ரமே நடி­கர்­கள் தேர்­வு­தான். தந்தை, மகன் ஆகிய இரு முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் பெரிய நடி­கர்­களை நடிக்க வைக்க வேண்­டும் என்­ப­து­தான் எனது முதல் விருப்­ப­மாக இருந்­தது. ஆனால் அந்த முயற்சி இழுத்­த­டித்­த­தால்­தான் இந்­தக் கதை­யைப் பட­மாக்க நான் மேற்­கொண்ட முந்­தைய முயற்­சி­கள் வெற்றி பெற­வில்லை.

"இந்த முறை அந்­தத் தவற்­றைச் செய்­ய­வில்லை. 'எந்த கதா­பாத்­தி­ரத்­துக்கு யார் நடித்­தால் பொருத்­த­மாக இருக்­குமோ அவர்­க­ளையே நடிக்க வையுங்­கள். முன்­னணி நடி­கர்­கள் அவ­சி­ய­மில்லை' என்று தயா­ரிப்­பா­ளர்­கள் கூறி­யது பெரும் நிம்­ம­தி அளித்­தது.

"நான் உதவி இயக்­கு­ந­ராக முத­லில் வேலை பார்த்­தது சமுத்­தி­ரக்­கனி சாரி­டம்­தான். அத­னால் அவரை எளி­தில் அணுக முடிந்­தது. அவரை இப்­ப­டத்­தில் வித்­தி­யா­ச­மா­கக் காட்­ட­வில்லை. இயல்­பில் எப்­ப­டிப்­பட்­ட­வரோ அப்­ப­டி­யே­தான் திரை­யி­லும் தோன்­று­வார்.

"தந்தை கதா­பாத்­தி­ரத்­துக்கு அவர் கச்­சி­த­மா­கப் பொருந்தி உள்­ளார். அவ­ரது மக­னாக மணி­கண்­டன் நடித்­துள்­ளார். இரு­வ­ரும் கிட்­டத்­தட்ட ஒரே சாய­லில் இருப்­பார்­கள். அப்பா, மகன் என்­றால் நிச்­ச­யம் ரசி­கர்­க­ளால் ஏற்­றுக்­கொள்ள முடி­யும்.

"நாய­கி­யாக மது­மதி நடித்­துள்­ளார். அவர் இலங்­கை­யைச் சேர்ந்­த­வர்," என்று சொல்­லும் ஹலிதா, அடுத்து சூர்­யா­வும் ஜோதி­கா­வும் இணைந்து நடிப்­ப­தற்கு ஏற்ற ஒரு கதையை உரு­வாக்கி வரு­கி­றா­ராம்.

`சில்­லுக் கருப்­பட்டி' படத்தை சூர்­யா­வின் சொந்­தப் படத் தயா­ரிப்பு நிறு­வ­னம்­தான் வெளி­யிட்­டது. அத­னால்­தான் அப்­ப­டத்­துக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் கிடைத்து பிர­ப­ல­மா­னது என்ற நன்­றி­யு­டன் குறிப்­பி­டு­கி­றார் ஹலிதா.

"சூர்யா சாரை­யும் ஜோதி­கா­வை­யும் முதன்­மு­றை­யாக நேரில் சந்­தித்த போதே, 'நாங்­கள் இரு­வ­ரும் சேர்ந்து நடிப்­ப­தற்கு ஏற்ற கதையை தயார் செய்­யுங்­கள்' என்று சூர்யா சொன்­னார். அதற்­காக உழைத்­துக்கொண்­டி­ருக்­கி­றேன்," என்று உற்­சா­கத்­து­டன் சொல்­கி­றார் ஹலிதா.