போலிஸ் வேடத்தில் தான்யா

கைவ­சம் ஐந்து படங்­களை வைத்­தி­ருக்­கி­றார் தான்யா ரவிச்­சந்­தி­ரன். அவற்­றுள் இரண்டு தமிழ்ப் படங்­கள்.

இது­கு­றித்து அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் எதை­யும் வெளி­யி­ட­வில்­லையே என்று கேட்­டால் அடுத்­த­டுத்து வெளி­யா­கும் என்று பதில் வரு­கிறது.

தற்­போது எஸ்.ஆர். பிர­பா­க­ரன் இயக்­கத்­தில் 'இறக்கை முளைத்­தேன்' படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார் தான்யா. இதில் துருதுருப்­பும் புத்­தி­சா­லித்­த­ன­மும் நிறைந்த புலன் விசா­ரணை அதி­காரி காத­பாத்­தி­ர­மாம்.

முதற்­கட்ட படப்­பி­டிப்பை முடித்­து­விட்டு தெம்­பா­கப் பேசு­ப­வர், இப்­ப­டி­யொரு வாய்ப்­பைத் தந்­த­தற்­காக இயக்­கு­நர் பிர­பா­க­ர­னுக்கு நன்றி சொல்ல வேண்­டும் என்­கி­றார்.

"பிர­பா­க­ரன் கதை­ சொன்­ன­போது உண்­மை­யா­கவே எனக்கு இறக்கை முளைத்­து­விட்­டது போல் உணர்ந்­தேன். அப்­ப­டி­யொரு அரு­மை­யான­பாத்­தி­ரத்­தைத் தந்­துள்­ளார்.

"என்னை நம்பி இப்­ப­டி­யொரு முயற்­சியை மேற்­கொள்ள வேண்­டுமா என்று அவ­ரி­டம் வெளிப்­ப­டை­யா­கக் கேட்­டு­விட்­டேன். அதற்கு இந்­தக் கதையை இயக்­கு­வது மட்­டு­மல்­லா­மல் தாமே தயா­ரிக்­கப் போவ­தா­க­வும் தெரி­வித்­தார்.

"மேலும், 'கதை மீது நான் எந்­த­ளவு மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றேன் என்­பது இதன்­மூ­லம் உங்­க­ளுக்­குப் புரிந்­தி­ருக்­கும். மேலும், கிரா­மத்­துக் கதை­க­ளைத்­தான் என்­னால் இயக்க முடி­யும் என்ற கருத்­தை­யும் மாற்றி அமைக்க விரும்­பு­கி­றேன். அத­னால்­தான் முழுக்­க­ ழு­ழுக்க நக­ரத்­துப் பின்­ன­ணி­யில் இந்­தப் படத்தை உரு­வாக்­கப் போகி­றேன்' என்று அவர் விளக்­க­ம­ளித்­தார்.

"எனவே இந்­தப் படத்­தில் நான் நடிக்க வேறு கார­ணம் சொல்ல வேண்­டி­ய­தில்லை," என்­கி­றார் தான்யா.

புலன் விசா­ரணை அதி­காரி என்­றா­லும் இவ­ருக்கு சண்­டைக்­காட்­சி­கள் என்று எது­வும் இல்­லை­யாம். தனது குடும்­பப்­பாங்­கான முகத்­துக்கு சண்­டைக் காட்­சி­கள் ஒத்­து­வ­ராது என்­கி­றார் தான்யா. கதைப்­படி இவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் ஆரா­தனா. இவ­ரது புத்­தி­சா­லித்­த­னத்­துக்­காக அனை­வ­ரும் இவரை ஆரா­தனை செய்­வ­து­தான் கதை.

"இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்­காக எனது உடல்­மொ­ழி­யைக் கொஞ்­சம் மாற்­றி­யி­ருக்­கி­றேன். மற்­ற­படி இயக்­கு­நர் சொல்­வ­தைக் கேட்டு நடித்து வரு­கி­றேன். எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு இதுவே போது­மா­ன­தாக உள்­ளது," என்று சொல்­லும் தான்யா தற்­போது தெலுங்­கி­லும் அறி­மு­க­மா­கி­றார். இதன் கார­ண­மாக தெலுங்­கில் பேசக் கற்று வரு­கி­றா­ராம்.

"மொழி தெரி­யா­மல் நடிக்க முடி­யுமா என்ற தயக்­க­மும் பய­மும் இருந்­தது. எப்­ப­டியோ சமா­ளித்து வரு­கி­றேன். எந்த மொழி­யில் நடித்­தா­லும் உண்­மை­யான ஈடு­பாட்­டு­டன் நடிப்பை வெளிப்­ப­டுத்த வேண்­டு­மென்­றால் முத­லில் வச­னங்­க­ளின் அர்த்­தத்தை முழு­மை­யாக உள்­வாங்­கிக் கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் நடிப்பு ஈர்ப்­பு­டன் இருக்­கும் என்று 'கருப்­பன்' படத்­தில் நடித்­த­போது விஜய் சேது­பதி சொல்­லிக் கொடுத்­தார். அதை இப்­போது வரை நான் மறக்­க­வில்லை," என்­கி­றர் தான்யா.

தெலுங்­கில் தனது முதல் படத்­தில் பர­த­நாட்­டி­யக் கலை­ஞ­ராக நடிக்­கி­றா­ராம். இவர் முறை­யாக பர­த­நாட்­டி­யம் கற்­றுக்கொண்­ட­வர். தொழில்­மு­றைக் கலை­ஞ­ராக நிறைய நடன நிகழ்ச்­சி­களை அரங்­கேற்றி வரு­கி­றார்.

"பர­த­நாட்­டி­யம் என்­ற­துமே எனது ஆர்­வம் அதி­க­மாகிவிட்­டது. நடிப்­பு­டன் நட­னத் திற­மை­யை­யும் வெளிப்­ப­டுத்த வாய்ப்­புக் கிடைப்­பது உற்­சா­கம் அளித்­தது.

"என்­னைப் பொறுத்­த­வரை நாய­கியை மையப்­ப­டுத்­தும் படங்­க­ளில்­தான் நடிக்­க­வேண்­டும் என்று நினைக்­க­வில்லை. வணிக அம்­சங்­கள் நிறைந்த படங்­க­ளி­லும் கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும்­கூட நடிக்­கத் தயார். இது­வரை நான் நடித்த எல்லா பாத்­தி­ரங்­க­ளுமே படம் முழு­வ­தும் வரக்­கூ­டி­ய­தா­கவே அமைந்­தன. இது தானாக அமைந்­தது. எனது அதிர்ஷ்­டம் என்று சொல்­வதைவிட திரை­யு­ல­கில் எல்­லாம் மாறிக்­கொண்டு வரு­வ­தன் விளை­வு­தான் என்­பேன்," என்று சொல்­லும் தான்யா தமி­ழில் மிஷ்­கின் இயக்­கத்­தில்­தான் அறி­மு­க­மாக இருந்­தார்.

சில கார­ணங்­க­ளால் அந்த வாய்ப்பு கைநழுவியது. இது­கு­றித்­துக் கேட்­டால் கடந்து போன­தைப் பற்­றிப் பேசு­வது சரி­யாக இருக்­காது என்­றும் மிஷ்­கின் அழைத்­தால் அவ­ரது இயக்­கத்­தில் நடிப்பது உறுதி என்­றும் சொல்­கி­றார்.

"எனது தாத்­தா­வும் நடி­க­ரு­மான ரவிச்­சந்­தி­ரன் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் என்னை வாழ்த்தி உற்­சா­கப்­ப­டுத்தி இருப்­பார்," என்கிறார் தான்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!