மிரள வைப்பான் ‘சுல்தான்’

‘சுல்­தான்’ படம் வெளி­யீடு காணத் தயா­ராகிவிட்­டது. முழுக்க முழுக்க வணிக ரீதி­யா­லான அம்­சங்­க­ளு­டன் படம் சிறப்­பாக உரு­வாகி இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

அதென்ன ‘சுல்­தான்’?

“எது­கு­றித்­தும் கவ­லைப்­ப­டா­மல் தன் மன­துக்கு எது சரி­யென்று தோன்­று­கி­றதோ அதைச் செய்து வாழ்­ப­வன்­தான் இந்த ‘சுல்­தான்’. இவன் எப்­ப­டிப்­பட்­ட­வன் என்று அவ்­வ­ளவு எளி­தில் உங்­க­ளால் வரை­ய­றுக்க முடி­யாது. சமு­தா­யத்­துக்கு நிச்­ச­யம் உணர்த்­தியே ஆக­வேண்­டும் எனும் நல்ல செய்­தி­யு­டன் வரு­கி­றான் சுல்­தான்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

சிவ­கார்த்­தி­கே­யனை ‘ரெமோ’ படத்­தில் பளிச்­சென்று தெரி­ய­வைத்­த­வர் இவர். இப்­போது அதி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்டு அதி­ர­டிக் கதை­யு­டன் கார்த்­தி­யு­டன் கைகோத்து களம் இறங்­கு­கி­றார்.

“இந்­தப் படம் வெற்றி பெறு­வ­தற்­கான அத்­தனை வேலை­க­ளை­யும் பார்த்­துப் பார்த்­துச் செய்­தி­ருக்­கி­றோம். சில சம­யங்­களில் சில விஷ­யங்­கள் நாம் ஆசைப்­பட்ட மாதி­ரியே பளிச்­சென்று நம் கண்­முன் வந்து நிற்­கும். இது அப்­ப­டிப்­பட்ட ஒரு படம்­தான்.

“பாண்­ட­வர் பக்­கம் நிற்­கா­மல் கிருஷ்­ணர் கௌர­வர் பக்­கம் நின்­றி­ருந்­தால் என்று படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பில் ஒரு வச­னம் இருப்­ப­தைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். அந்­தக் கேள்­விக்­கான விடை­தான் சுல்­தான்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

கதைப்­படி சுல்­தான் என்­பது கார்த்தி­யின் செல்­லப் பெய­ராம். எப்­போ­தும் அவ­ரைச் சுற்றி ஒரு ரவு­டிக் கூட்­டம் இருக்­கு­மாம். கதை எழு­தும்­போது இதை­யெல்­லாம் எளிதில் எழு­தி­விட்­டா­லும் அதைக் காட்­சிப்­ப­டுத்­தும்­போது வெகு­வாக மெனக்­கெட வேண்டி இருந்­தது என்­கி­றார்.

“கார்த்­தி­யைப் பொறுத்­த­வரை விமர்­ச­னங்­களை வெளிப்­ப­டை­யாக வர­வேற்­கி­றார். பிறர் தன்­னைக் குறை சொல்­லும் முன்பே தன்­னைச் சரி­செய்துகொள்­ளும் இயல்­பும் பக்­கு­வ­மும் அவ­ரி­டம் உள்­ளது.

“‘கைதி’ படம் வெளி­வந்த பிறகு அவ­ருக்கே தன் படங்­கள் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தி­ருக்­கும். அந்த எதிர்­பார்ப்­புக்கு மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் இந்­தப் படம் உரு­வாகி இருப்­ப­தில் எனக்கு அதிக மன­நி­றை­வும் நிம்­ம­தி­யும் ஏற்­பட்­டுள்­ளது. அவ­ரும் இதை உணர்ந்­தி­ருப்­ப­தாக நினைக்­கி­றேன். என்னை தன் தம்பி மாதிரி நினைத்­துக் கொண்­டா­டு­கி­றார்,” என்று நெகிழ்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

இப்­ப­டத்­தின் கதா­நா­யகி ராஷ்­மிகா மந்­தனா. விஜய் நடிக்­கும் அடுத்த படத்­தின் நாயகி இவர்­தான் என்று கூறப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில் ‘சுல்­தான்’ படம் அவ­ரைத் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தில் கச்­சி­த­மாக இடம்­பெற வைக்­கும் என்­கிறது அப்­ப­டக்­குழு.

“பக்­கத்து வீட்­டி­லி­ருக்­கும் பெண்­ணின் சாய­லில் இருக்­கி­றார் ராஷ்­மிகா. எந்த நேர­மும் உற்­சா­க­மும் கேலி­யும் கிண்­ட­லு­மாக படப்­பி­டிப்பு அரங்­கில் வலம்­வ­ரு­வார். அதே­ச­ம­யம் ‘ஆக்­‌ஷன்’ என்று சொல்­லி­விட்­டால் போதும் ஒரே நொடி­யில் கதா­பாத்­தி­ர­மாக மாறி­வி­டும் திற­மை­சாலி.

“எல்­லோ­ருக்­கும் பிடித்த நடி­கை­யாக இருப்­பது எளிதல்ல. அனை­வ­ரி­ட­மும் மிக இயல்­பா­கப் பேசிப் பழ­கும் சின்­னப் பெண். இப்­ப­டத்­தில் கார்த்­திக்­கும் ராஷ்­மி­கா­வுக்­கும் இடை­யே­யான வண்­ண­ம­ய­மான காதல் இளம் ரசி­கர்­க­ளைப் பாடாய்ப்­ப­டுத்­தும். இப்­போது தெலுங்கு தேசத்­தின் செல்­லப் பெண்­ணாக வலம் வரும் ராஷ்­மிகா ‘சுல்­தான்’ வெளி­யான பிறகு தமிழ் ரசி­கர்­க­ளுக்­கும் செல்­லப் பெண்­ணாகி விடு­வார்,” என்­கி­றார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

இப்­ப­டத்­தில் யோகி­பா­பு­வும் இணைந்­தி­ருப்­பது பெரும் பலம் என்­கிறது படக்­குழு. அவ­ரும் கார்த்­தியும் சேர்ந்து செய்­யும் கலாட்­டா­வால் திரை­ய­ரங்­கு­களில் சிரிப்­பு­ தெறிக்­கும் என்­கி­றார்­கள்.

“படப்­பி­டிப்பு தொடங்­கிய ஒன்­றி­ரண்டு நாட்­க­ளி­லேயே கார்த்­திக்­கும் யோகி­பா­பு­வும் மன­த­ள­வில் நெருங்கி வந்­து­விட்­ட­னர். இரு­வ­ரும் பேசும் ஒற்­றை­வரி வச­னங்­க­ளால் மொத்த படப்­பி­டிப்பு அரங்­கும் சிரிப்­ப­லை­யில் அதிர்ந்­தது.

“ரசி­கர்­கள் எவ்­வ­ளவு மகிழ்­வார்­கள் என்­பதை என்­னால் கற்­பனை செய்ய முடி­கிறது. ‘கே.ஜி.எஃப்.’ படத்­தின் வில்­லன் ராமச்­சந்­திர ராஜுவை கோடம்­பாக்­கத்­துக்கு அழைத்து வந்­தி­ருக்­கி­றோம். மனி­தர் நடிப்­பில் மிரள வைக்­கி­றார்.

“படப்­பி­டிப்­பின்­போது அவர் ஓர் ஓர­மாக நாற்­காலி­யில் அமர்ந்­தி­ருப்­ப­தைப் பார்த்­தா­லும் கூட பய­மாக இருக்­கும். அவ­ரு­டைய அட்­ட­கா­சங்­க­ளைத் திரை­யில் பார்க்­கும்­போது ரசி­கர்­களும் மிரள்­வார்­கள்,” என்­கிறார் பாக்­ய­ராஜ் கண்­ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!