போயஸ் தோட்டத்தில் குடியேறும் தனுஷ்

மாம­னார் ரஜினி வசிக்­கும் போயஸ் தோட்­டம் பகு­தி­யி­லேயே மரு­ம­கன் தனு­ஷும் புது வீடு கட்டி குடி­யேற உள்­ளார்.

இந்­தப் புது வீட்­டுக்­கான பூமி பூசை அண்­மை­யில் நடந்­துள்­ளது. இதில் ரஜி­னி­யும் பங்­கேற்­றார்.

தனு­ஷின் வளர்ச்­சி­யும் போயஸ் தோட்­டத்­தில் அவர் குடி­யே­று­வ­தும் கோடம்­பாக்­கத்­தி­னரை வெகு­வாக ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

சென்­னை­யில் பெரும் பணக்­கா­ரர்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­களில் முதன்­மை­யா­னது போயஸ் தோட்­டம். முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா, ரஜி­னி­காந்த் உள்­ளிட்­டோ­ரின் வீடு­கள் அங்­கு­தான் அமைந்­துள்­ளன. முக்­கி­யப் புள்­ளி­களும் தொழி­ல­தி­பர்­களும் வசிக்­கும் பகுதி என்­ப­தால் 24 மணி நேர­மும் காவல்­து­றை­யின் கண்­கா­ணிப்­பில் உள்ள பகுதி இது.

ஒரு கிர­வுண்ட் நிலத்­தின் விலை குறைந்­த­பட்­சம் 25 கோடி ரூபாய் என்­ப­து­தான் சந்தை நில­வ­ரம் என்­கி­றார்­கள் விவ­ரம் அறிந்­த­வர்­கள். ஆனால் 25 கோடிக்­கும் மேல் கொட்­டிக் கொடுக்க முன்­வந்­தா­லும்­கூட அங்கு இடம் கிடைக்­குமா என்­பது சந்­தே­கம்­தான்.

போயஸ் தோட்­டத்­தில் நிலமோ, அங்­குள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் ஒரு வீட்­டையோ வாங்­க­வேண்­டும் என்­றால் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே முன்­ப­திவு செய்ய வேண்டி இருக்­கும். அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த யாரே­னும் ஒரு­வர் வீட்­டையோ, நிலத்­தையோ விற்க முன்­வந்­தால்­தான் புதி­ய­வர்­கள் அதை வாங்கி குடி­யேற முடி­யும். அந்த வகை­யில் கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே போயஸ் தோட்­டத்­தில் குடி­யே­று­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்டு வந்­தி­ருக்­கி­றார் தனுஷ்.

தற்­போது சென்னை ஆழ்­வார்­பேட்டை பகு­தி­யில் ஓர் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் ஒன்­ப­தா­வது தளத்­தில் வசிக்­கி­றார் தனுஷ். படப்­பி­டிப்பு இல்­லாத சம­யங்­களில் தன் பேரக்­கு­ழந்­தை­கள் யாத்ரா, லிங்­கா­வைச் சந்­தித்து அவர்­க­ளு­டன் பொழு­தைக் கழிக்க அங்கு செல்­வது ரஜி­னி­யின் வழக்­கம்.

அந்­தச் சம­யங்­களில் ரஜி­னி­யைப் பார்த்­த­தும் கூட்­டம் கூடி­வி­டு­மாம். இது அவ­ருக்­கும் தனு­சுக்­கும் தர்­ம­சங்­க­டம் ஏற்­பட்டு வந்­தது.

இந்­நி­லை­யில் போயஸ் தோட்­டத்­தில் மூன்று கிர­வுண்ட் இடம் விற்­ப­னைக்கு வரு­வ­தாக ரஜி­னிக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது. அதை மரு­ம­க­னி­டம் தெரி­வித்­துள்­ளார் ரஜினி.

பிற­கென்ன, உட­னுக்­கு­டன் உரிய தொகை­யும் ஆவ­ணங்­களும் கைமாற, எதிர்­வ­ரும் தீபா­வ­ளிக்­குள் புது வீட்­டைக் கட்­டும் வேகத்­தோடு பூமி­பூ­சையை நடத்தி முடித்­துள்­ளார் தனுஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!