‘நான் எதிர்பார்க்காத பரிசு’

தமிழ் ரசி­கர்­கள் இந்­த­ள­வுக்கு என்­மீது பாசம் காட்­டு­வார்­கள், என்னை நேசிப்­பார்­கள் என்று நான் எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார் இளம் நாயகி நிதி அகர்­வால்.

இனி தமிழ்ப் படங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­க­வேண்­டும் எனும் எண்­ணத்தை ரசி­கர்­கள் தன் மன­தில் ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­க­வும் அவர் கூறு­கி­றார்.

நிதி அகர்­வால் இந்­த­ளவு நெகிழ கார­ணம் இருக்­கிறது. தமி­ழில் ‘பூமி’, ‘ஈஸ்­வ­ரன்’ ஆகிய இரு படங்­களில் மட்­டுமே நடித்­துள்ள இவ­ருக்கு தமிழ் ரசி­கர்­கள் கோவில் கட்­டி­யுள்­ள­னர். அன்­பர் தினத்­தை­யொட்டி நிதி அகர்­வா­லின் சிலைக்கு பால­பி­ஷே­கம் செய்து கற்­பூ­ரம் ஏற்றி வழி­பட்­டுள்­ள­னர். இது தொடர்­பான புகைப்­ப­டங்­களும் காணொ­ளிப் பதி­வு­களும் சமூக வலைத்­ த­ளத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

இதை­ய­டுத்து பல­ரும் அவ­ரை­யும் அவ­ரது குடும்பத் தாரையும் தொடர்பு கொண்டு இது­கு­றித்து விசாரிக்­கின்­ற­ன­ராம்.

“உண்­மை­யைச் சொல்­ல­வேண்­டு­மா­னால், ரசி­கர்­க­ளின் இந்­தச் செயல் எனக்கு ஒரு வகை­யில் அதிர்ச்சி அளித்­துள்­ளது. இதை நான் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை. அதே­ச­ம­யம் மகிழ்ச்­சி­யாக உணர்­கி­றேன் என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை.

“என்­மீது அன்­பைப் பொழி­யும் ரசி­கர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்கொள்­கி­றேன். எனக்­குக் கோவில் கட்­டி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தையே நம்­ப­மு­டி­ய­வில்லை எனும்­போது அதைக் கட்­டி­ய­வர்­கள் யார் என்ற கேள்­விக்­கும் என்­னி­டம் விடை­யில்லை. அந்­தக் கோவில் எங்­கி­ருக்­கிறது என்­பது கூட எனக்­குத் தெரி­யாது. எனி­னும் சென்­னை­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் இருப்­ப­தாக இப்­போது தக­வல் வந்­தி­ருக்­கிறது.

“தமிழ், தெலுங்கு ரசி­கர்­கள் இணைந்­து­தான் இந்­தக் கோவி­லைக் கட்­டி­யி­ருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்­கள். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் பேசி­னால்­தான் உண்மை நில­வ­ரம் தெரி­ய­வ­ரும்,” என்­கி­றார் நிதி அகர்­வால்.

தமிழ் சினிமா நடி­கர், நடி­கை­க­ளுக்கு தமி­ழ­கத்­தில் ரசி­கர்­கள் கோவில் கட்­டு­வது ஒன்­றும் புதி­தல்ல. இதற்கு முன்பு எம்­ஜி­ஆர்., குஷ்பு, நமீதா, ஹன்­சிகா உள்­ளிட்ட சில­ருக்கு கோவில் கட்­டப்­பட்­டுள்­ளது. நயன்­தா­ரா­வுக்­கும் அவ­ரது ரசி­கர்­கள் கோவில் கட்டி வரு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

ஆனால், இரண்டு தமிழ்ப் படங்­களில் மட்­டுமே நடித்­துள்ள நிதி அகர்­வா­லுக்கு கோவில் கட்­டப்­பட்­டி­ருப்­ப­து­தான் அவரை மட்­டு­மல்ல கோடம்­பாக்­கத்­தி­ன­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

“தமி­ழில் இரண்டு, தெலுங்­கில் அதை விடக் கூடு­த­லாக ஒன்­றி­ரண்டு படங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளேன். அதற்­குள் கோவில் கட்­டு­கி­றார்­கள் என்­றால் கேட்க அதிர்ச்­சி­யா­கத்­தான் இருக்­கும். ரசி­கர்­களின் இச்­செ­யலை முன்­கூட்­டியே யூகிக்க முடி­ய­வில்லை. கார­ணம் எனக்­கென பதிவு செய்­யப்­பட்ட முறை­யான ரசி­கர் மன்­றங்­கள் கூட இல்லை. ரசி­கர்­க­ளு­டன் சமூக வலைத்­த­ளங்­கள் மூல­மாக உரை­யா­டி­யுள்­ளேன் அவ்­வ­ள­வு­தான்.

“கடந்­தாண்டு கொரோனா உள்­ளிட்ட விவ­கா­ரங்­க­ளால் அது­வும்­கூட அடிக்­கடி நிக­ழ­வில்லை. இந்­தாண்­டும் அதி­க­மான படங்­கள் நடிக்­க­வேண்டி இருப்­ப­தால் வாழ்க்கை பர­ப­ரப்­பா­கத்­தான் இருக்­கும். பெரும்­பா­லான நாட்­கள் படப்­பி­டிப்­பில் கழிந்­து­வி­டும். எனவே ரசி­கர்­களை எப்­படி தொடர்பு கொண்டு பேசு­வது என்­பது தெரி­ய­வில்லை.

“ஒரு­சில பேட்­டி­களில் ஆத­ர­வற்ற குழந்­தை­­களுக்கு அன்­ன­தா­னம் செய்­ய ­வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்து விரி­வா­கப் பேசி­யி­ருக்­கி­றேன். அதே­போல் நாய்­களை செல்­லப்­பி­ரா­ணி­யாக வளர்ப்­பது குறித்­தும் கூறி­யுள்­ளேன். இது­கு­றித்து அறிந்த ரசி­கர்­கள் பலர் தொடர்ந்து அன்­ன­தா­னம் செய்து வரு­கி­றார்­கள் என்­பதை அறி­வேன். அதே­போல் விலங்­கு­க­ளின் நலத்­தைப் பேணும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளி­லும் சிலர் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

“இதை­யெல்­லாம் அறிந்து மகிழ்ச்­சி­யில் இருந்த எனக்கு அன்­பர் தினத்­தை­யொட்டி ரசி­கர்­கள் வாழ்­நாள் முழு­வ­தும் மறக்க இய­லாத, நான் எதிர்­பா­ராத ஒரு பரி­சைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். இதற்­காக அவர்­க­ளுக்கு நன்­றிக்­க­டன் பட்­டி­ருக்­கி­றேன்,” என்று ஒரே­ய­டி­யாக நெகி­ழும் நிதி அகர்­வால், தெலுங்­கில் பவன் கல்­யா­ணு­டன் ஒரு படத்­தில் நடித்து வரு­கி­றார். அதை­ய­டுத்து தமி­ழில் மகிழ்­தி­ரு­மேனி இயக்­கத்­தில் உத­ய­நிதி நாய­க­னாக நடிக்­கும் படத்­தில் இணைகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!