உண்மைச் சம்பவம் படமாகிறது

கதா­நா­ய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கிறது 'அழ­கிய கண்ணே'. சஞ்­சிதா ஷெட்டி நாய­கி­யாக நடிக்­கி­றார். விஜ­ய­கு­மார் இயக்க, நாய­க­னாக பிர­பல பட்­டி­மன்ற நடு­வர் திண்­டுக்­கல் லியோ­னி­யின் மகன் லியோ சிவ­கு­மார் அறி­மு­க­மா­கி­றார்.

"இன்­றைய தேதி­யில் கூட்­டுக்­கு­டும்­பம் என்­றால் என்ன என்­பதே எல்­லோ­ருக்­கும் மறந்து­விட்­டது. அதன் அருமை யாருக்­கும் புரி­வ­தில்லை. இன்றைய நக­ரத்­துச் சூழ­லில் காணா­மல் போய்­விட்ட அந்த அனு­ப­வம் குறித்து இந்­தப் படத்தில் எடுத்­துச் சொல்­கி­றோம்.

"நாய­கி­யாக தேர்வு செய்­வதற்கு முன்பு சில காட்­சி­களில் சஞ்­சி­தாவை நடிக்க வைத்­தோம். மிக இயல்­பாக, எதிர்­பார்த்­த­தை­விட அழ­காக நடித்­தார். அத­னால் தயக்­க­மின்றி ஒப்­பந்­தம் செய்­தோம்," என்­கி­றார் விஜ­ய­கு­மார்.

தனது கதா­பாத்­தி­ரம் மன­தைக் கவ­ரும் வகை­யில் இருக்கும் என்­றும் மிக­வும் ரசித்து நடித்­த­தா­க­வும் சொல்­கி­றார் சஞ்­சிதா.

"கதைப்­படி மது­ரை­யைச் சேர்ந்த நான் தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­யாற்ற சென்­னைக்கு வரு­கி­றேன். காதல், திரு­ம­ணம், குடும்ப வாழ்க்கை என எனது வாழ்க்கை மூன்று கட்­டங்­க­ளாக விவ­ரிக்­கப்­படும். இப்பட­மும் ­பாத்­தி­ர­மும் என்னை அதி­க­மான ரசி­கர்­களி­டம் கொண்டு சேர்க்­கும். இது மது­ரை­யில் நிகழ்ந்த உண்­மைச் சம்­ப­வத்தை மைய­மாக வைத்து உரு­வா­கும் படம். மது­ரை­யில் தொடங்­கும் கதை சென்­னை­யில் முடி­வ­டை­யும். ஒவ்­வொரு காட்­சி­யும் இயல்­பா­க­வும் மன­தைக் கவ­ரும் வகை­யி­லும் இருக்­கும்," என்­கி­றார் சஞ்­சிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!