‘ஓய்வின்றி உழைப்பது உற்சாகம் அளிக்கிறது’

கொரோனா ஊர­டங்கு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்ட பின்­னர் கோடம்­பாக்­கத்­தில் பணி­கள் விறு­விறுப்பு அடைந்­துள்­ளன.

தமிழ் சினி­மா­வில் படப்­பி­டிப்­பில் முத­லில் பங்­கேற்ற சில நடி­கை­களில் பிரியா பவானி சங்­க­ரும் ஒரு­வர்.

கிட்­டத்­தட்ட தின­மும் ஏதே­னும் ஒரு படத்­துக்­கான படப்­பி­டிப்­பில் பங்­கேற்­கி­றா­ராம். ஓய்­வில்லை என்­றா­லும் திரைப்­ப­ணி­கள் வேக­மெ­டுத்­தி­ருப்­ப­தில் மகிழ்ச்சி என்­கி­றார்.

"ஓய்­வின்­றிப் பணி­யாற்­று­வது ஒரு­வ­கை­யில் மன­நி­றை­வும் உற்­சா­க­மும் அளிக்­கிறது. என்­னைப் பொறுத்­த­வரை இதை ஒரு வர­மா­கக் கரு­து­கி­றேன்.

"நான் இடை­வி­டா­மல் பணி­யாற்­று­வ­தற்கு படக்­கு­ழு­வி­ன­ரும் முக்­கிய கார­ணம். அவர்­கள் தரும் ஊக்­க­மும் ஒத்­து­ழைப்­பும்­தான் நிறைய சாதிக்­க­வேண்­டும் என்று என்­னைத் தூண்­டு­கிறது. நான் திரைப்­ப­டம் சார்ந்த குடும்­பத்­தி­லி­ருந்து நடிக்க வர­வில்லை. எனது கடின உழைப்­பும் எனது சக கலை­ஞர்­க­ளும்­தான் என் வெற்­றிக்­கான கார­ணங்­கள்," என்­கி­றார் பிரியா.

தமிழ் சினி­மா­வில் இப்­போது அதி­கப் படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கும் நாய­கி­க­ளின் பட்­டி­ய­லில் எந்­த­வி­தத் தயக்­க­மும் இன்றி பிரி­யா­வுக்கு முத­லி­டம் கொடுக்­க­லாம். ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரங்­களில் தோன்­றக்­கூ­டாது என்­ப­தில் மிகுந்த கவ­ன­மாக இருக்­கி­றா­ராம்.

"என்­னைப் பொறுத்­த­வரை என்னை வைத்­துப் பட­மெ­டுக்­கும் இயக்­கு­நர்­களும் இவ்­வி­ஷ­யத்­தில் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் என நினைக்­கி­றேன். தொலைக்­காட்­சி­யில் இருந்து பெரிய திரைக்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால் தொலைக்­காட்சி நடிகை என்ற பிம்­பத்­து­ட­னேயே சிலர் என்­னைப் பார்க்­கி­றார்­கள்.

"தொலைக்­காட்சி தொடர் என்­னைத் தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து வீடு­க­ளுக்­கும் கொண்டு சென்­றது உண்­மை­தான். அதற்­காக சின்­னத்­தி­ரை­யில் தோன்­றி­யது போலவே திரைப்­ப­டங்­க­ளி­லும் நடிப்­பேன் என்று கரு­தக்­கூ­டாது. என்­னால் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் மிளிர முடி­யும். அதற்­கேற்­பவே எனக்­கான கதை­க­ளை­யும் படங்­க­ளை­யும் தேர்வு செய்­கி­றேன்," என்­கி­றார் பிரியா.

ஊர­டங்­கின்­போது கிடைத்த ஓய்­வில் நிறைய எழு­திக்­கொண்­டி­ருப்­ப­தாக சமூக வலைத்­த­ளத்­தில் அவர் பதி­விட்­டி­ருந்­தார். அது நீடிக்­கி­றதா என்று கேட்டு ரசி­கர்­கள் பலர் நச்­ச­ரிக்­கி­றார்­க­ளாம்.

"நான் எழு­தத் தொடங்­கி­யது உண்­மை­தான். ஆனால், அதில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றம் என்று எது­வும் ஏற்­ப­ட­வில்லை. நிறைய வாசிக்­கி­றேன். ஆனால், தொடர்ந்து எழு­த­வேண்­டும் என்­ப­தற்­கான பிடி­மா­னத்தை இழந்­து­விட்­டேன். எனது எழுத்­தில் முதிர்ச்சி இருப்­ப­தாக எனக்­குத் தோன்­ற­வில்லை. எனவே, இவ்­வி­ஷ­யத்­தில் நான் போக­வேண்­டிய தூரம் மிக நீண்­டது என்­பதை உணர்ந்­திருக்கிறேன்," என்கிறார் பிரியா.

தன் மன­தில் பட்­டதை ஒளிவு மறை­வின்றி இயல்­பாக வெளிப்­படுத்­தக்­கூ­டிய நடிகை என்று கோடம்­பாக்­கத்­தி­னர் இவ­ரைக் குறிப்­பி­டு­கி­றார்­கள். இதற்­காக சிலர் பாராட்­டு­கி­றார்­கள் என்­றால், ஒரு­சி­லர் இப்­ப­டிப் பேச­வேண்­டாம் என்­றும் அறி­வு­றுத்­து­கி­றார்­க­ளாம்.

"வளர்ந்­து­வ­ரும் ஒரு நடிகை இயல்­பா­கப் பேசு­வ­தை­யும் சில விஷ­யங்­கள் குறித்­துக் கருத்து தெரி­விப்­ப­தை­யும் ஒரு­த­ரப்­பி­னர் ஏற்­றுக் கொள்­வ­தில்லை. பெரிய நட்­சத்­தி­ரங்­கள் மட்­டுமே கருத்து தெரி­விக்­கும் உரி­மை­யைப் பெற்­றி­ருப்­ப­து­போல் நினைக்­கி­றார்­கள்.

"என்­னால் இதை ஏற்க முடி­ய­வில்லை. கருத்து சொல்­லும் உரிமை அனை­வ­ருக்­கும் உள்­ளது. அதற்கு நீங்­கள் பெரிய நட்­சத்­தி­ர­மாக இருக்­க­வேண்­டும் என்­கிற அவ­சி­ய­மில்லை," என்­கி­றார் பிரியா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!