பிரபல இயக்குநர் வில்லனாக நடிக்கும் 'நதி'

பிரபல இயக்குநர் வில்லனாக நடிக்கும் 'நதி'

1 mins read
0a8c1282-c31f-4ea4-8a9c-f6af1ee60ab6
-

'ஏமாலி', 'லிசா' உள்­ளிட்ட படங்­களில் நடித்த சாம் ஜோன்ஸ் இப்­போது தயா­ரிப்­பா­ள­ராக மாறி­யுள்­ளார்.

இவர் தயா­ரித்து நடிக்­கும் புதிய படம் 'நதி'. இதில் கயல் ஆனந்தி கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார்.

உண்­மைச் சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி எடுக்­கப்­பட்­டுள்ள இப்­ப­டத்தை தாம­ரைச் செல்­வன் இயக்­கு­கி­றார்.

மோகன் ராஜா­வி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் தமக்கு கைகொ­டுக்­கும் என்­றும் அரு­மை­யான தயா­ரிப்­பா­ளர் தமக்கு வாய்த்­தி­ருப்­ப­தா­க­வும் சொல்­கி­றார் தாம­ரைச்­செல்­வன்.

பிர­பல தெலுங்கு நடிகை சுரே­க­வாணி, முனிஸ்­காந்த், வேல ராம­மூர்த்தி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர். இப்­ப­டத்­தின் வில்­லன் கதா­பாத்­தி­ரம் கதா­நா­ய­க­னுக்கு நிக­ராக சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாம்.

"பிர­பல இயக்­கு­நர்­தான் வில்­ல­னாக நடிக்­க உள்­ளனர். இவர் யார் என்­பது விரை­வில் அறி­விக்­கப்­படும். எங்­கள் தேர்வு ரசி­கர்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தும்," என்­கி­றார் இயக்­கு­நர்.