ரைசா: என் கணிப்பு சரியாக இருந்தது

அண்­மை­யில் மால­தீ­வுக்கு சென்று வந்த பிறகு புத்­து­ணர்ச்­சி­யு­டன் செயல்­பட முடி­வ­தா­கச் சொல்­கி­றார் ரைசா வில்­சன்.

அடுத்து வெளி­யாக உள்ள 'த சேஸ்' தமக்கு வெற்­றிப்­ப­ட­மாக அமை­யும் என உறு­தி­யாக நம்­பு­கி­றா­ராம்.

"கொரோனா, ஊர­டங்கு என பல கார­ணங்­க­ளால் ஓராண்­டாக எங்­கே­யும் போக முடி­ய­வில்லை. எனவே ஊர­டங்கு தளர்த்­தப்­பட்டபோது மாலதீ­வுக்கு சென்று வர மட்­டுமே விமா­னங்­கள் இயக்­கப்­பட்­டன. அத­னால் அங்கே சென்­றேன்.

"அங்கு பெரும்­பா­லான பொழுதை கடற்­க­ரை­யில்­தான் செல­விட்­டேன். ஓராண்­டாக வீட்­டுக்­குள் முடங்­கிக் கிடந்­த­தற்கு இந்த மாற்­ற­மும் பய­ண­மும் தேவைப்­பட்­டது," என்­கி­றார் ரைசா.

அண்­மை­யில் காத­லர் தினத்­தை­யொட்டி சமூக வலைத்­த­ளத்­தில் ரசி­கர்­க­ளு­டன் உரை­யா­டி­ய­போது காதல் அனு­ப­வங்­கள் உண்டா என்­பதே பல­ரது கேள்­வி­யாக இருந்­த­தாம்.

தாம் யாரை­யும் காத­லிக்­க­வில்லை என்­பதை நூறு விழுக்­காடு நம்­ப­லாம் என்­கி­றார்.

"எப்­போ­தா­வது நான் சந்­திக்­கும் மனி­தர்­களில் யாரே­னும் ஒரு­வர் மீது ஈர்ப்பு ஏற்­படும்.

"எனி­னும் மறு­தி­னமே அது காணா­மல் போய்­வி­டும். இதைத் தவிர பெரி­தாக ஏதும் இல்லை," என்று சொல்­லும் ரைசா­வுக்கு, அண்­மைய வெளி­யீ­டு­களில் 'கோல­மாவு கோகிலா'வை தான் அதி­கம் பிடித்­தி­ருக்­கிறது.

அப்­ப­டத்தை நெல்­சன் மிக நேர்த்­தி­யாக இயக்கி உள்­ள­தா­கப் பாராட்­டு­கி­றார். அது­போன்ற ஒரு கதைக்­க­ளத்­தில், நெல்­சன் இயக்­கத்­தில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

'த சேஸ்' படம் குறித்து?

"மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­தில் நடித்­துள்­ளேன். இயக்­கு­நர் தொலை­பேசி மூலம் கதை­யைச் சொன்­ன­போதே, 'இதில் நடிப்­பது சவா­லாக இருக்­கும்' என்று தோன்­றி­யது. என் கணிப்பும் சரியாக இருந்தது.

"பொது­வாக எனக்கு திகில் கதை­கள் பிடிக்­கும். இந்­தப் படத்­தில் சண்­டைக் காட்­சி­களும் உள்­ளன. அவற்­றில் நான் சிறப்­பாக நடித்­தி­ருப்­ப­தாக ரசி­கர்­கள் நினைத்­தால் அதற்­கான பாராட்டு சண்­டைப் பயிற்­சி­யா­ளர் திலிப் சுப்­ப­ரா­யன் சாருக்­குத்­தான் போக வேண்­டும்.

"நடிக்­கத் தொடங்­கிய குறு­கிய காலத்­தி­லேயே நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள கதை­யில் நடிப்­பது சரி­தானா என்று சிலர் கேட்­கி­றார்­கள். கதை­யை­யும் படக்­கு­ழு­வை­யும் நம்­பித்­தான் நடிக்­கி­றேன். எனது தேர்­வும் சரி­யாக அமை­யும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் ரைசா.

இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது மகிழ்ச்சி அளிப்பதாகவும் படத்துக்கு பலம் சேர்க்கும் என்றும் ரைசா சொல்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!