கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராஜ வம்சம்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநரான கதிர்வேலு 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியது பெரிய சாதனை என்று கோடம்பாக்கத்தினர் பாராட்டுகிறார்கள்.
மிகப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் கெட்டிக்காரரான சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றவர் கதிர்வேலு.
ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ரேகா, சுமித்ரா, நிரோஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள இப்படம் மார்ச் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

