‘நிறைய சாதிக்க ஊக்குவிக்கிறது கலைமாமணி விருது’

கலை­மா­மணி விருது பெற்­றதை பெரு­மை­யா­கக் கரு­து­வ­தாக சிவ­கார்த்­தி­கே­யன் கூறி­யுள்­ளார்.

திரை­யு­ல­கில் பல­வற்­றைச் சாதிக்க வேண்­டும் எனும் ஊக்­கு­விப்பை இந்த விருது தமக்கு அளித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­யுள்­ளார்.

தமிழ்த் திரை­யு­ல­கைச் சேர்ந்த 42 பேருக்கு நேற்று முன்­தி­னம் முதல்­வர் பழ­னி­சாமி கலை­மா­மணி விரு­து­களை வழங்­கி­னார்.

சென்னை, கோட்­டை­யில் உள்ள தலை­மைச் செய­ல­கத்­தில் இந்த நிகழ்வு நடை­பெற்­றது.

விரு­தைப் பெற்­றுக்­கொண்ட பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சிவ­கார்த்­தி­கே­யன், திரை­யு­ல­கில் பெரிய கதா­நா­ய­க­னா­வேன் என்­பது எனது கன­வாக இருந்­தது என்று சொன்­னால் அது பொய்­யாக மட்­டுமே இருக்­கும் என்­றார்.

“இது­வரை செய்­தி­களில் மட்டுமே பார்த்­துக்கொண்­டி­ருந்த சென்னை கோட்­டைக்கு இன்று தான் வந்­துள்­ளேன். ஒரு குழந்தை எப்­படி பிரம்­மாண்­ட­மான இடத்­துக்­குப் போகும் போது மிரட்சி, மகிழ்ச்சி இருக்­குமோ, அப்­ப­டித்­தான் இருந்­தது.

“தமிழ்­நாட்­டுக் குடி­ம­க­னாக இந்­தக் கோட்­டை­யைப் பார்க்க வேண்­டும் என்ற ஆசை அனை­வ­ருக்­குமே இருக்­கும்.

“நான் சினி­மா­வில் இருக்க ஆசைப்­பட்­டேன், அவ்­வ­ள­வு­தான். ஆனால், கதா­நா­ய­கன் என்ற இடத்­தைக் கொடுத்து நிறைய வெற்­றி­க­ளை­யும் தந்து இன்று கலை­மா­மணி என்ற மிகப்­பெ­ரிய விரு­தைக் கொடுத்­துள்­ள­னர்.

“இந்த விரு­துக்­கேற்ப என்­னைத் தகு­திப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கி­றேன். இந்த விரு­தினை வழங்கி இன்­னும் நிறைய விஷ­யங்­கள் செய்ய வேண்­டும் என்று ஊக்­கு­விக்­கும் தமி­ழக அர­சுக்கு நன்றி.

“இன்­னும் நிறைய நல்ல படங்­கள் பண்ண வேண்­டும், இன்­னும் நன்­றாக நடிக்க வேண்­டும் என்று ஊக்­கு­விப்­பது போல் உள்­ளது. முக்­கி­ய­மாக இந்த தரு­ணத்­தில் எனது பெற்­றோ­ருக்கு நன்றி தெரி­வித்­துக்கொள்­கி­றேன்,” என்­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

அர­சி­ய­லுக்கு வரு­வீர்­களா? என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அவர், தன்­னி­டம் இது­போன்ற பெரிய கேள்வி கேட்­கப்­ப­டு­வது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கிறது என்­றார்.

விவ­சா­யி­க­ளின் போராட்­டத்­தைத் தாம் கவ­னித்து வரு­வ­தா­க­வும், தமது ‘கனா’ படத்­தில் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளைப் பதிவு செய்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து தமக்­குக் கிடைத்த விருதை தமது தாயா­ருக்கு அர்ப்­ப­ணிப்­ப­தாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார் சிவா.

“தந்­தையை இழந்து நிர்க்­கதி­யாய் நின்ற எங்­களை இழுத்­துப் பிடித்து கரை சேர்த்த என் தாய்க்கு இந்த விருதை அர்ப்­ப­ணிக்­கி­றேன்,” என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது பதி­வில் முதல்­வ­ரி­டம் இருந்து விருது பெற்­றது, அவ்­வி­ரு­தைத் தாயா­ரி­டம் கொடுத்து அவ­ரது காலில் விழுந்து ஆசி பெறு­வது ஆகிய புகைப்­ப­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon