'மீண்­டும் தூங்கி சமந்­தா­வாக கண்­வி­ழிப்­பேன்'

சினி­மா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக யோகா­ச­னம் குறித்­து­தான் அதி­கம் பேசு­கி­றார் சமந்தா. உல­கின் எந்த மூலை­யில் இருந்­தா­லும் தின­மும் யோகா செய்­யத் தவ­ற­மாட்­டேன் என்­கி­றார்.

இன்ஸ்­ட­கி­ரா­மில் மட்­டும் சுமார் 15 மில்­லி­யன் பேர் சமந்­தா­வைப் பின்­தொ­டர்­கி­றார்­கள். இத்­த­ளத்­தில் அவ்­வப்­போது அவர் வெளி­யி­டும் படங்­கள் அழ­காக இருப்­ப­தாக லட்­சக்­க­ணக்­கா­னோர் பின்­னூட்­ட­மி­டு­கிறார்­கள்.

“வெறும் புகைப்­ப­டங்­களை மட்­டும் வெளி­யி­டு­வது என் நோக்­க­மல்ல. அவற்றி­னூடே சில நல்ல விஷ­யங்­க­ளை­யும் தெரி­விக்­கி­றேன். நான் உடற்­ப­யிற்சி, யோகா செய்­யும் காட்­சி­கள் அடங்­கிய காணொ­ளிப் பதி­வு­க­ளை­யும் வெளி­யி­டு­கி­றேன்.

“இது உடல்­ந­லம் குறித்து ரசி­கர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும்,” என்று சொல்­லும் சமந்தா, இந்­தப் புத்­தாண்­டில் தின­மும் யோகா­ச­னத்­து­டன் மூச்­சுப்­ப­யிற்­சி­யி­லும் ஈடு­பட வேண்­டும் எனத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம்.

இரண்­டை­யும் ஒரு­சேர செய்­தால் நீண்ட காலம் ஆரோக்­கி­யத்தைப் பேண முடி­யும் என்­பது சமந்­தா­வின் அறி­வுரை.

“மூச்­சைக் கட்­டுப்­ப­டுத்த தெரிந்த ஒரு­வ­ருக்கு வாழ்க்­கை­யும் அவ­ரது கட்­டுப்­பாட்­டில் இருக்­கும். வழக்­க­மான உடற்­ப­யிற்­சி­யு­டன் மூச்சுப்­ப­யிற்­சி­யும் சேரும்­போது உட­லில் அதி­ச­யக்கத்­தக்க மாற்­றங்­கள் ஏற்­படும் ,” என்று விளக்கம் அளிக்கி­றார்.

சமந்­தா­வின் கட்­டு­ட­லுக்­கான ரக­சி­யம் என்ன?

“ரக­சி­யம் என்று எது­வும் இல்லை. எனக்கு உண­வுக் கட்­டுப்­பாடு என்­பது பிடிக்­காது. நன்றாகச் சாப்­பிட வேண்­டும் என்று தோன்­றி­னால் விரும்­பி­ய­தைச் சாப்­பிடு­வேன். எந்த ஊருக்­குச் சென்­றா­லும் அங்கே பிர­ப­ல­மாக உள்ள உணவு வகையைச் சாப்­பி­டத் தவறு­வ­தில்லை. இதையும் மீறி உடல் பெருக்­கா­மல் எடை கூடா­மல் இருக்க உடற்­ப­யிற்­சி­தான் கார­ணம்,” என்று சொல்­லும் சமந்தா, ஒரு புத்­த­கப் பிரி­யர்.

மாதந்­தோ­றும் ஒரு­சில புத்­த­கங்­க­ளை­யே­னும் படித்­து­வி­டு­கி­றார். சிறு வய­தில் இருந்தே வாசிப்­புப் பழக்­கம் உண்­டாம்.

“சிறு வய­தில் நிறைய ‘காமிக்ஸ்’ புத்­த­கங்­களை விரும்­பிப் படிப்­பேன். சாந்­தா­ராம், மகா­பா­ர­தம், ஆஸ்ட்­ரிக்ஸ் அண்ட் ஆப்­ளிக்ஸ் போன்ற புத்­த­கங்­க­ளால்­தான் எனது புத்­தக உல­கம் விரி­வ­டைந்­தது. வாசிப்­புப் பழக்­கம் நம்மை எப்­போ­தும் விவ­ர­ம­றிந்­த­வர்­க­ளாக வைத்­தி­ருக்­கும். குழந்­தை­கள் நிறைய புத்­த­கங்­கள் படிக்க வேண்­டும்.”

கடந்த காலத்­தைக் குறித்து அதி­கம் யோசிக்­கக் கூடாது என்­பது சமந்­தா­வின் கொள்­கை­க­ளுள் ஒன்று. நடந்­த­வற்றை நினைத்துக் கவலைப்­படு­வ­தால் நிலைமை மாறி­வி­டப் போவ­தில்லை என்­கி­றார்.

“வாழ்க்­கையை அழ­காக்க வேண்­டும் என்­றால் நிகழ் தரு­ணத்­தைக் கொண்­டாட வேண்­டும். இப்­போது இந்த நிமி­டம், இந்த நொடி மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்­பதே எனது விருப்­பம். நிகழ்­கா­லம் நன்­றாக இருந்­தாலே போதும், எதிர்­கா­லம் இனிப்­பா­கும்,” என்று தத்து­வார்த்­த­மா­கப் பேசும் சமந்­தா­வுக்கு, பிரச்­சி­னை­களில் இருந்து விடு­பட இயற்­கை­தான் கைகொ­டுக்­கிறது. இயற்­கைக் காட்­சி­களை ரசிப்­பது மனதை லேசாக்­கும் என்­கி­றார்.

மேலும் செல்­லப் பிரா­ணி­க­ளு­டன் கொஞ்­சிக் குலாவு­வது, யுடி­யூப்­பில் செல்­லப்­பி­ரா­ணி­கள் செய்­யும் சேட்­டை­கள் தொடர்­பான காணொ­ளி­க­ளைப் பார்ப்­பது மன­தில் மீண்­டும் நிம்­ம­தி­யை­யும் இனம்­பு­ரி­யாத உற்­சா­கத்­தை­யும் கொண்டு வரும்,” என்­கி­றார்.

திடீ­ரென ஒரு­நாள் காலை தூங்கி எழும்­போது நீங்­கள் ஒரு­நாள் முதல்­வர் என்று அறி­விக்­கப்­பட்­டால் என்ன செய்­வீர்­கள்? என்ற கேள்விக்கு சமந்தா அளித்துள்ள பதில் சுவா­ர­சி­ய­மா­னது.

“தொடர் படப்­பி­டிப்பு கார­ண­மாக என் கண­வ­ரைச் சந்­திப்­பது, இரு­வ­ரு­மா­கச் சேர்ந்து வெளியே செல்­வது என்­பது அபூர்­வ­மாக உள்­ளது. எனவே, முதல்­வ­ரா­னால் ஒன்­றும் செய்ய மாட்­டேன். மீண்­டும் தூங்கி சமந்­தா­வாக கண்­வி­ழிப்­பேன். கார­ணம், மற்ற அனைத்­தை­யும்­விட நானாக இருப்­ப­தையே நேசிக்­கி­றேன்,” என்­கி­றார் சமந்தா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon