நாயகிகளின் காதல் அனுபவங்கள்

காதல் அனு­ப­வங்­கள் குறித்து இளம் நடி­கை­கள் தங்­கள் அனு­ப­வங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­துள்­ள­னர். அப்பதிவு­கள் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளன.

'துய்­மை­யான காதல்' என்ற தலைப்­பில் கீர்த்தி சுரேஷ் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். அத­னு­டன் ஒரு புகைப்­ப­டத்­தை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத்­து­டன் இவர் எடுத்­துக்­கொண்ட சில புகைப்­ப­டங்­கள் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின. இரு­வ­ரும் காத­லிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால், கீர்த்தி சுரேஷ் தரப்பு இதை மறுத்­தி­ருந்­தது.

இரு­வ­ரும் தங்­கள் தொழி­லில் மட்­டுமே தற்­போது கவ­னம் செலுத்தி வரு­வ­தா­க­வும் நண்­பர்­க­ளாக மட்­டுமே பழ­கு­வ­தா­க­வும் கீர்த்­தி­யின் தந்தை தெரி­வித்­தி­ருந்­தார்.

தற்­போது படப்­பி­டிப்­புக்­காக துபாய் சென்­றுள்­ளார் கீர்த்தி சுரேஷ். அத­னால் குடும்­பத்­தா­ரின் அரு­காமை இல்­லா­மல் தவிப்­ப­தாக கூறி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில்தான் தாயா­ரு­டன் இருக்­கும் புகைப்­ப­டத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளார். அதில் கீர்த்­திக்கு அவ­ரது தாயார் மேனகா மரு­தாணி வைத்து விடும் காட்சி பதி­வாகி உள்­ளது. இப்­ப­தி­வுக்கு 'தூய்­மை­யான வடி­வத்­தில் காதல்' என்று கீர்த்தி தலைப்­பிட்­டுள்­ளார். இது ஊர­டங்­கின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டம். கீர்த்­தி­யின் ரசி­கர்­கள் இதைப் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­வ­து­டன் இந்­தத் தூய்­மை­யான காதலுக்கு ஈடு இணை இல்லை என்­றும் பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இதே­போல் நடிகை ராஷி கன்னா, சிறு வய­தில் தனக்கு வந்த காதல் கடி­தங்­கள் குறித்து பதி­விட்­டுள்­ளார். பள்­ளி­யில் படித்­த­போது மூத்த மாண­வன் ஒரு­வன் இவ­ரைக் காத­லித்­தானாம். பல­முறை ராஷிக்கு காதல் கடி­தம் கொடுக்­க­வும் முயன்­றா­னாம்.

"அப்­போ­தெல்­லாம் அவ­னி­ட­மி­ருந்து எப்­ப­டியோ தப்­பித்து விடு­வேன். ஆனா­லும் ஒரு­நாள் சிக்­கிக் கொண்­டேன். அவன் தைரி­ய­மாக என்­னைப் பின்­தொ­டர்ந்து வந்து என் கையில் ஒரு கடி­தத்தை திணித்து­விட்­டான். கூடவே ஒரு­ ரோஜா பூவை­யும் கொடுத்­துச் சென்­றான்.

"தொடக்­கத்­தில் எனக்கு அந்த மாண­வனை அறவே பிடிக்­காது. ஆனால், தன் காதல் கடி­தத்­தில் என்­னப் பற்றி வர்­ணித்து பெரு­மை­யாக குறிப்­பிட்டு இருந்­த­தைப் படித்­த­போது மகிழ்ச்­சி­யாக இருந்­தது. அந்­தக் கடி­தத்தை பத்­தி­ர­மாக எடுத்­துச் சென்று என் அம்­மா­வி­டம் கொடுத்­தேன். அவ­ரும் அதைப் படித்­துப் பார்த்­தார்.

"'உன்­னைப் பற்றி வேறு யாரா­லும் இந்­த­ளவு வர்­ணிக்க முடி­யாது போல் இருக்­கிறது. நீ இத்­தனை அழ­காக இருப்­பதை நாங்­களே கூட கவ­னிக்­க­வில்லை. அவ­னைப் பிடித்­தி­ருக்­கி­றதா... உண்­மை­யைச் சொல்' என்­றார் அம்மா. எனக்கு அது­போன்ற எண்­ணம் இல்லை என்­றேன்.

"அதன்பிறகு அந்த மாணவனைப் பற்றி நான் யோசித்ததே இல்லை. அவனைச் சந்திக்கவும் இல்லை. அவன் என்னவானான் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது," என்று ராஷி கன்னா தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!