மறுபதிப்பில் நடிக்கும் ஐஸ்வர்யா

'தி கிரேட் இண்டி­யன் கிட்­சன்' படத்­தின் தமிழ் மறு­ப­திப்­பில் ஐஸ்­வர்யா ராஜேஷ் நாயகி­யாக ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

கடந்த ஜன­வரி 15ஆம் தேதி நேர­டி­யாக இணை­யத்­தில் மலையாளத்தில் வெளி­யீடு கண்ட இப்­ப­டம் விமர்­சன, வசூல் ரீதி­யில் பலத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

புதி­தாக திரு­ம­ண­மான பெண் ஒரு­வர் பழ­மை­வா­தக் கொள்­கை­களும் ஆணா­திக்­க­மும் நிறைந்த கண­வ­ரின் குடும்­பத்­தில் எதிர்­கொள்­ளும் சிர­மங்­களை விவ­ரித்து, இறு­தி­யில் அப்­பெண் என்ன முடி­வெ­டுத்­தார் என்­பதை இப்­ப­டத்­தில் காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­ன­னர்.

இப்­ப­டத்தை தமிழ், தெலுங்கு உள்­ளிட்ட மொழி­களில் மறு­ப­திப்பு செய்ய பலத்த போட்டி நில­வி­யது. தமி­ழுக்­கான உரி­மையை இயக்­கு­நர் கண்­ணன் கைப்­பற்றி உள்­ளார்.

இதில் முன்­னணி நாயகி ஒரு­வர் ஒப்­பந்­த­மா­வார் என்று கூறப்­பட்ட நிலை­யில் தற்­போது ஐஸ்­வர்யா ராஜேஷை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­க­ளி­லுமே இவர்­தான் நாயகி என்­றும் கூறப்­படு­கிறது. விரை­வில் இது­கு­றித்து அறி­விப்பு வெளி­யா­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!