விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தமிழரசன்'. இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.
"நான் முன்பே சொன்னதுபோல் இசையமைப்பாளர் ஒருவர் நாயகனாக நடித்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் வாய்த்துள்ளது.
"மேலும் தன் வீட்டிலேயே இப்படத்துக்காக பின்னணி இசையை அமைத்தார் இளையராஜா. அவரது இசை இப்படத்துக்கு பெரும் பலம்.
"விஜய் ஆண்டனியைப் பொறுத்தவரை தயாரிப்பாளரின் சிரமங்களை உணர்ந்து நியாயமாக நடந்து கொள்பவர்.
"இந்தப் படத்துக்காக அவர் அதிகம் மெனக்கெட்டார். அவரது ஒத்துழைப்பும் உழைப்பும் இல்லாமல் இந்தப் படம் உருவாகி இருக்காது," என்கிறார் பாபு யோகேஸ்வரன்.
'தமிழரசன்' கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகி இருக்கவேண்டும். கொரோனா விவகாரத்தால் தாமதமானது. இப்படம் விரைவில் வெளியீடு காண்கிறது.