தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் வெளியாகிறது 'தமிழரசன்'

1 mins read
00e72176-72f0-4115-9d40-6d1c0757b500
'தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன். -

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தமிழரசன்'. இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பாபு யோகேஸ்­வ­ரன் இயக்கி­யுள்ள இப்படத்தில் ரம்யா நம்­பீ­சன் நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

"நான் முன்பே சொன்­ன­து­போல் இசை­யமைப்­பா­ளர் ஒரு­வர் நாய­க­னாக நடித்த படத்­திற்கு இளை­ய­ராஜா இசை அமைத்­த­தில்லை. விஜய் ஆண்­ட­னிக்­குத்தான் அந்த அதிர்ஷ்­டம் வாய்த்­துள்­ளது.

"மேலும் தன் வீட்­டி­லேயே இப்­ப­டத்­துக்­காக பின்­னணி இசையை அமைத்­தார் இளை­ய­ராஜா. அவ­ரது இசை இப்படத்­துக்கு பெரும் பலம்.

"விஜய் ஆண்­ட­னி­யைப் பொறுத்­த­வரை தயா­ரிப்­பா­ள­ரின் சிர­மங்­களை உணர்ந்து நியா­ய­மாக நடந்து கொள்­ப­வர்.

"இந்­தப் படத்­துக்­காக அவர் அதி­கம் மெனக்­கெட்­டார். அவ­ரது ஒத்­து­ழைப்­பும் உழைப்­பும் இல்­லா­மல் இந்­தப் படம் உரு­வாகி இருக்­காது," என்­கி­றார் பாபு யோகேஸ்­வ­ரன்.

'தமி­ழ­ர­சன்' கடந்த ஆண்டு தொடக்­கத்­தி­லேயே வெளி­யாகி இருக்கவேண்­டும். கொரோனா விவ­கா­ரத்­தால் தாம­த­மா­னது. இப்­ப­டம் விரை­வில் வெளி­யீடு காண்­கிறது.