‘வீரனாகவே மாறிவிட்டேன்’

ஆர்யா நடிப்­பில் அடுத்து உரு­வாகி வரும் படம் 'சார்­பெட்டா பரம்­பரை'. 'டெடி' படத்­தில் நடித்து முடித்த உற்­சா­கத்­து­டன் புதுப்­ப­டத்­துக்­கான பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார்.

மனை­வி­யு­டன் இணைந்து நடித்த படம் என்­ப­தால் 'டெடி'யின் வெற்­றியை ஆர்­வத்­து­டன் எதிர்­நோக்கி உள்­ளா­ராம். விளை­யாட்­டுத்­த­ன­மாக இருந்த தனது வாழ்க்கை இப்­போது அடி­யோடு மாறி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"உண்­மை­யில் விளை­யாட்­டுப் போக்­கில்­தான் செயல்­பட்­டுக் கொண்­டி­ருந்­தேன். சினி­மா­வைக்­கூட பெரி­தாக நினைத்­த­தா­கச் சொல்­ல­மு­டி­யாது. பிற­கு­தான் திரைத்­து­றை­யின் அருமை மெல்ல புரி­யத் தொடங்­கி­யது.

"லட்­சம் பேர் சினி­மா­வுக்­குள் வர­வேண்­டும் எனும் லட்­சி­யத்­து­டன் அலைந்து திரி­கி­றார்­கள். ஆனால், இங்கே கொஞ்­சம் பேர்­தான் உட்­கார முடி­யும். அவ்­வ­ள­வு­தான் இட­மி­ருக்­கிறது.

"விளை­யாட்­டாக இருந்­த­வர்­கள் சாய்ந்து, சரிந்து அமர்ந்­த­வர்­கள் எல்­லாம் பிறகு மிக­வும் சிர­மப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட இடத்­தின் அருமை புரிந்­த­தால் இப்­போது எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கி­றேன். மிகுந்த கவ­னத்­து­டன் படங்­க­ளைத் தேர்வு செய்­கி­றேன்," என்கிறார் ஆர்யா.

விளை­யாட்­டுத்­துறை என்­றால் இவ­ருக்கு மிக­வும் பிடித்­த­மான ஒன்­றாம். கால்­பந்து, சைக்­கிள் ஓட்டுவது என்று ஏதா­வது ஒரு விளை­யாட்­டில் எப்­போ­துமே ஈடு­பட்­டி­ருப்­பா­ராம். இடை­யில் குத்­துச்­சண்டை மீது ஆர்­வம் ஏற்­ப­டவே அதில் ஈடு­பாடு காட்­டி­யுள்­ளார்.

"இந்­தச் சம­யத்­தில்­தான் இயக்­கு­நர் பா. ரஞ்­சித் குத்­துச்­சண்டை சம்­பந்­தப்­பட்ட ஒரு கதையை இயக்க திட்­ட­மி­டு­வ­தா­கக் கேள்­விப்­பட்­டேன். என் நண்­ப­னும் நடி­க­னு­மான கலை­ய­ர­சனை நச்­ச­ரித்து ரஞ்­சித்­தி­டம் என்னை அறி­மு­கப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்கொண்­டேன். அடுத்த சில தினங்­களில் ரஞ்­சித்தே என்­னி­டம் 'சார்­பெட்டா' கதை­யைச் சொல்லி என்னை ஒப்­பந்­தம் செய்­தார்," என்­கி­றார் ஆர்யா.

தன் கதை­யின் மீது ரஞ்­சித் உயி­ரையே வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அந்த உணர்வு தம்­மை­யும் தூண்டி­விட்­டது என்­றும் குறிப்­பி­டு­ப­வர், ரஞ்­சித் தம்மை அசல் குத்­துச்­சண்டை வீர­னா­கவே மாற்­றி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"ரஞ்­சித்­துக்கு சினிமா மீதுள்ள ஆர்­வம் குறித்து சொல்லி மாளாது. இந்­தப் படத்­துக்­காக மற்­ற­வர்­களை விட மிக அதி­க­மாக உழைத்­தி­ருக்­கி­றார். எனக்­கான கதா­பாத்­தி­ரத்­தை­யும் அதற்­கேற்ப என்­னை­யும் மிக அழ­கா­கச் செதுக்கி உள்­ளார்.

"அத­னால்­தான் ஒரு குத்­துச்­சண்டை வீர­ருக்­கு­ரிய அனைத்து அம்­சங்­க­ளை­யும் என்­னி­டம் உங்­க­ளால் பார்க்க முடி­யும். நான் திரை­யில் அசல் குத்­துச்­சண்டை வீர­னாக தெரி­கி­றேன் என்­றால் அதற்கு ரஞ்­சித்தான் கார­ணம்.

"சினிமா துறை இப்­போது பல மாற்­றங்­க­ளைக் கண்­டுள்­ளது. எல்லா மாற்­றத்­து­ட­னும் நாமும் அனு­ச­ரித்­துப் போக­வேண்­டும். இந்­தத் தீர்­மா­னத்­து­டன் ரஞ்­சித்­து­டன் கைகோத்து கள­மி­றங்கி­விட்­டேன்," என்­கி­றார் ஆர்யா.

'சார்­பெட்டா' படத்­துக்­காக வெகு­வாக மெனக்­கெட்­ட­போது தன்னை மனைவி சாயி­ஷா­வும் தன் தாயா­ரும்­தான் அக்­க­றை­யு­டன் கவ­னித்­துக் கொண்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவர்­கள் இரு­வ­ரும் மிக­வும் நெருக்­க­மாகி விட்­ட­தாக மகிழ்­கிறார்.

"அம்­மா­வுக்­கும் சாயி­ஷா­வுக்­கும் இடையே இருப்­பது ஆழ­மான பிரி­யம். மும்­பை­யில் பிறந்து வளர்ந்து, பழ­கிப் படித்து இப்­போது எனக்­காக சென்­னைக்கு இடம்­பெ­யர்ந்­துள்­ளார் சாயிஷா.

"இது என் மீதான அன்­பால் அவர் செய்த காரி­யம். இப்­போது என் அம்­மா­தான் சாயி­ஷா­வுக்­கும் அம்மா," என்று ஆர்யா சொல்­வதை மெல்­லிய புன்­ன­கை­யு­டன் ஆமோ­திக்­கி­றார் சாயிஷா.

தமக்கு இதை­விட ஒரு நல்ல வாழ்க்கை அமைந்­து­வி­டும் என்று தோன்­ற­வில்லை என்கிறார்.

தன் கண­வ­ரின் அன்­பும் மன­துக்கு இத­மான நடத்­தை­யும் தமக்கு மிக­வும் பிடிக்­கும் என்று சொல்­ப­வர், கண­வ­ரு­டன் மீண்­டும் இணைந்து நடிக்க ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!