மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்

தெலுங்கு சினி­மா­ மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் பஞ்­சா­பிப் பெண் ரகுல் பிரீத் சிங். நல்ல உய­ரம், ஈர்க்­கும் அழகு, அற்­புத நடிப்பு என பன்­மு­கத் திறன்­க­ளை­யும் ஒருங்கே கொண்­டுள்ள இவர், தென்­னிந்­திய திரைத்­துறை­யில் மிக வேக­மாக வளர்ந்து வரு­கி­றார்.

தமிழ், தெலுங்கு மொழி­க­ளில் இவ­ருக்­கென தனி ரசி­கர் பட்­டா­ளம் உண்டு. அத்துடன், இந்­திப் படங்­களி­லும் நடித்­து­வ­ரும் ரகுல், "மகிழ்ச்­சியே எனது இளமை­யின் ரக­சி­யம்," என்­கி­றார்.

இப்­போ­தைக்கு சிரிப்­பு­தான் தமது அன்­றா­ட முக்கிய பயிற்­சி­யா­க­ உள்­ளதாகவும் அவர் சொல்கிறார்.

"எப்­போ­தும் எதைப்­பற்­றி­யா­வது யோசனை செய்து­கொண்டே, மன­தையும் மூளையையும் போட்டு உருட்­டிக்­கொண்டே இருக்­கா­தீர்­கள். எந்த நேரத்­தி­லும் வாழ்க்­கையை ரசிக்­கப் பழ­கிக்கொள்­ளுங்­கள். மனம் விட்டு சிரித்­துப் பழ­குங்­கள். முகம் பொலி­வா­கும். மூப்பு தள்­ளிப்­போ­கும். இள­மை­யாக உணர்­வீர்­கள்," என்கிறார் ரகுல்.

தமி­ழில் 'தீரன் அதி­கா­ரம் ஒன்று', 'தேவ்', 'என்­ஜிகே' உள்­ளிட்ட படங்­கள் மூலம் தமிழ் திரையுலகில் முன்­னணி நடிகைகளுள் ஒருவரான ரகுல், தெலுங்­கி­லும் பர­ப­ரப்­பாக நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், பாலி­வுட்­டில் பிரம்­மாண்­ட­மா­கத் தயா­ராகி வரும் 'மேடே' படத்­தில் நடி­கர் அஜய் தேவ்­கன் ஜோடி­யாக நடித்து வரு­கி­றார்.

இந்­தப் படம் இவ­ரது திரை­யு­லக வாழ்க்­கை­யில் மிகப்­பெ­ரிய திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­தும் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன், தமி­ழில் கமல்­ஹா­சன் நடித்து வரும் 'இந்­தி­யன் 2', நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் 'அய­லான்' உள்­ளிட்ட திரைப்­ப­டங்­க­ளி­லும் நடித்து வரும் ரகுல், அவ்­வப்­போது தனது புகைப்­படங்­களைச் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்றி ரசிகர்­களை ஆச்­சரியத்­தில் ஆழ்த்தி வரு­கி­றார்.

யோகா, உடற்­ப­யிற்­சி­கள் செய்­வ­தில் அதிக ஆர்­வம் காட்டி வரும் ரகுல், அந்தப் புகைப்படங்­களை­யும் சமூக ஊட­கத்­தில் பதி­வேற்றியுள்ளார்.

தற்­போது தனது கால்களை முது­குக்­குப் பின்­னால் மடக்கிச் செய்­யும் யோகா காணொ­ளியை தனது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதிவேற்றி உள்­ளார்.

'பார்ட்டி' இந்தி படப் பாடல் பின்­னணி இசை­யாக ஒலிக்க பதி­வேற்றி இருக்­கும் இந்தக் காணொளி தற்­போது இணை­யத்­தில் வேகமாகப் பரவி வரு­கிறது.

அத்­து­டன், அவ்­வப்­போது தனக்­குத் தெரிந்த அழ­குக்­கலை ரக­சி­யங்­க­ளை­யும் 'யூடி­யூப்' வழி­யாக ரசி­கர்­க­ளுக்­குக் கற்­றுக்கொடுத்து வரு­கி­றார். அந்த காெணாளிக்கு 'ஸ்கின்­கேர் சீரிஸ்' என­வும் அவர் பெயி­ரிட்­டுள்­ளார்.

காெணாளி­யில், "இது நாம் கொரோ­னா­வைத் தடுக்க அணி­யும் முகக்­க­வ­சம் அல்ல. முக வசீ­க­ரத்­திற்­கான அழ­குக்­கலை ரக­சி­யம்," என்­கி­றார்.

"வாழைப்­பழ முகக்­க­வ­சம் வறண்ட சரு­மத்­திற்கு நல்­லது. உங்­கள் முகச்­சு­ருக்­கங்­களை நீக்­கி­விடும். அதே­நேரத்­தில் உங்­க­ள் வய­தை­யும் இள­மை­யாகக் காட்­டும். நீங்­கள் பயன்­ப­டுத்­தும்போது இந்த உண்மை புரியும்," என்­றும் அழ­குக்­கலை நிபு­ண­ராக அறி­வு­றுத்­து­கி­றார் ரகுல்.

இதற்­கி­டையே, திடீ­ரென தமது உணவு முறையை சைவத்துக்கு மாற்­றிக்கொண்­டி­ருப்­ப­தாகவும் ரகுல் தெரி­வித்­துள்ளார்.

"நான் எனது வாழ்க்கை முழு­வதும் தீவிர அசை­வப் பிரி­யை­யா­கத்தான் இருந்­துள்­ளேன். சைவம் அதி­கம் பிடிக்­காது. சில நேரங்­களில் சைவ உணவை எடுத்­துக்கொள்­ளும்போது கோபம்கூட வந்­து­வி­டும். அசைவ உணவை ஒரு கட்டு கட்டவேண்­டும் என்ற ஆசையும் என்னுள் ­ஊஞ்சலா­டும்.

"எனது தின­சரி உண­வில் அசை­வம் இருக்­க­வேண்­டும். அதி­லும், குறிப்­பாக ஒவ்­வொரு நாளும் முட்டை இருந்­தாகவேண்­டும்.

"இது­போன்ற சம­யத்­தில்­தான் அசைவ ஆசை­யைப் தூக்­கிப் போட்டு­விட்டு, சைவ­மாக மாற திடீ­ரென முடிவெடுத்­தேன். இது நானாக எடுத்த முடிவுதான். தற்­போது நான் மிக­வும் ஆரோக்­கி­ய­மா­க­வும் அதிக சக்தி நிரம்­பிய பெண்­ணா­க­வும் உணர்­கி­றேன்," என்­றார்.

"மும்­பை­யில் படப்­பி­டிப்பு நடக்­கும்­போது காய்­கறி 'ஷேக்', பழங்­கள், சாப்­பாடு வீட்­டில் இருந்து வந்­து­வி­டும்.

"வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும்­போ­து­தான் சமா­ளிக்க வேண்­டும். படப்­பி­டிப்­புக் குழுவினர் எங்­கி­ருந்­தா­வது காய்­களை வாங்கி எனக்குச் சமைத்­துக்கொடுத்து விடு­வார்­கள். பெரும்­பா­லும் பருப்பு சாதம், கிச்­சடி செய்­வார்­கள். சைவ உணவில் நெய் சேர்த்­துக்கொள்­வேன்," என்­கி­றார் ரகுல் பிரீத் சிங் (படம்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!